கனடாவிற்கு புலம்பெயர்ந்த நிலையில் தனது 87 ஆவது வயதிலும் இரண்டாவது முதுகலைப் பட்டம் பெற்று ஆச்சரியப்படவைத்துள்ளார் யாழ்ப்பாணம் வேலணையைச் சேர்ந்த தமிழச்சியான மூதாட்டி .

கனடாவில் வசித்து வரும் யாழ்ப்பாணம் வேலணையை பூர்விகமாக கொண்ட வரதா சண்முகநாதன் (87) என்பவரே யோர்க் பல்கலைக்கழகத்தில் (York University) தனது இரண்டாவது முதுகலைப்பட்டத்தைப் பெற்றுள்ளார்.

இந்த வயதிலும் தளராது முதுகலைப்பட்டத்தைப்பெற்ற அவர், ஒன்ராறியோ மாநில சட்டமன்றத்திற்கு நேரில் வரவழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். அங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று கைதட்டி அவருக்கு மரியாதை செலுத்தினர்.

இதன்போது ஒன்ராறியோ மாநில நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் வரதாவின் சாதனைகளை எடுத்துக்கூறி சிறப்புரையும் நிகழ்த்தினார்.