கனடாவில் வெற்றிகரமாக இயங்கிவரும் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் நடத்திய சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம் கடந்த புதன்கிழமையன்று ஸ்காபுறோ கொன்வென்சன் சென்றர் விழா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. சம்மேளனத்தின் தலைவர் சட்டத்தரணி தேவதாஸ் தொடக்க உரையாற்றியதைத் தொடர்ந்து சிறப்பு பேச்சாளராக தமிழகத்தின் பட்டிமன்றப் பேச்சாளர் திருமதி பாரதி பாஸ்கர் கலந்துகொண்டு சபையோரைக் கவரும் வகையில் பெண்களின் முன்னேற்றம் மற்றும் அவர்களுக்கான அங்கீகாரம் ஆகியவை தொடர்பாக உரையாற்றினார்.
ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவரைக் கௌரவிக்கும் வகையில் சம்மேளத்தின் சார்பிலும் ஒன்றாரியோ அரசாங்கத்தின் சார்பிலும் பாராட்டுப் பத்திரங்கள் வழங்கப்பெற்றன.
இவ்வருடத்திற்குரிய வாழ்நாள் சாதனை விருது பெற்ற கனடியப் பெண்மணியாக கலாநிதி பார்வதி கந்தசாமி மேடையில் கௌரவிக்கப்பெற்றார்.
தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் உரைகள் ஆகியன இடம்பெற்றன.