jayகனடா தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் புதிய அங்கத்தவர் தெரிவுக்கான தேர்தல் கடந்த 25 ஒக்டோபர் 2014 சனிக்கிழமை நடைபெற்றது. 7 பதவி வெற்றிடத்துக்கு 17 பேர் போட்டியிட்டு இருந்தனர். இது ஒரு ஆரோக்கியமான ஜனநாயகமான நிலைமையை எடுத்துக் காட்டியது. இத் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவரை பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து திரு. சின்னத்துரை ஜெயக்குமார் அவர்கள் மீண்டும் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

புதிய முகங்களாக திரு.கண்ணன், திரு. ரவி கனகசபை, திரு.சுரேன் நவரெத்தினராஜா, திரு.மூன் மகாலிங்கம், சட்டத்தரணி சாலினி சத்தியா ஆகியோர் தெரிவாகினர். இவர்கனுடன்  திரு. அஜித் சபாரத்தினம், சட்டத்தரணி டிலானி குணராஜா, திரு.சுயான் சண் ஆகியோரும் மீண்டும் தெரிவாகினர்.

கனடா தமிழர் வர்த்தக சம்மேளனத்தினரின் விருது விழா -2014

 

[Best_Wordpress_Gallery id=”21″ gal_title=”Gallery 8″]