அன்னையின் மடியில் 01-05-1937
ஆண்டவன் அடியில் 26-04-2023
யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வதிவிடமாகவும், கனடா Newmarket ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி இரத்தினசபாபதி அவர்கள் 26-04-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினசபாபதி அவர்களின் பாசமிகு மனைவியும்,
லீலாவதி, ஜெயநாயகி, காலஞ்சென்றவர்களான ராசநாயகம், தவபாலசிங்கம் ஆகியோரின் அருமை சகோதரியும்,
ரஜனி, விஜயசேகரன், வரதசேகரன்(United Tamil Sports Club), வாகினி, Dr. சிவசேகரன், சாயிலதா, நளாயினி(சூட்டி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நித்தியானந்தன்(RBC), செல்வமலர், விஜிதா, சிவகரன்(Aran Transport), லேகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற பூபாலசிங்கம், பத்மநாதபிள்ளை, விமலாதேவி, காலஞ்சென்ற பொன்ணையா, சந்திரவதனா ஆகியோரின் மைத்துனியும்,
றஜீவன், காண்டீபன், மயூரன், ஜிந்துயா, காயத்திரி, அகல்யா, பிரித்தீப், Dr. சுவேதிகா, Dr. ஹரீஷ், அகிம்சன், அக்சயன், சகானா, ஆஹாஸ், ஆதவன், அனோஜ், ஆரணி, கிருத்திகா, ராகினி, சங்கீதா, Dr. நிரோசாந், பிரித்தீபராஜ், கௌசிகா, ஸ்ரீதாஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஆதித்தியன், அஞ்சனா, அர்ஜுன், அகிலன், ருத்திரதேவா, திருவ், அமாரா, அகாணா, ஆகியோரின் அருமை பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு:
- Saturday, 29 Apr 2023 5:00 PM – 9:00 PM
- Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு:
- Sunday, 30 Apr 2023 8:00 AM – 9:30 AM
- Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:
- Sunday, 30 Apr 2023 9:30 AM – 11:30 AM
- Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:
- Sunday, 30 Apr 2023 12:00 PM
- Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
ரஜனி – மகள்
- Mobile : +14164339812
விஜயன் – மகன்
- Mobile : +14169848288
வரதன் – மகன்
- Mobile : +14168383999
வாகினி – மகள்
- Mobile : +14165001157
நளாயினி(சூட்டி) – மகள்
- Mobile : +14168245002
சிவா – மகன்
- Mobile : +13528958633
சாயிலதா – மகள்
Mobile : +447730344935




















எத்தனை காலங்கள்
எத்தனை ஜென்மங்கள் கடந்தாலும்
உன் அன்பு மட்டும் என்றும் குறையுமா அம்மா!
ஒவ்வொரு உறவுக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்
ஆனால் உன் உறவுக்கு மட்டும் தான்
எந்த எதிர்பார்ப்பும் இல்லை அம்மா!
நான் அழுத பொழுது என்னை சிரிக்க வைத்த முகம்..
என்றுமே என்னை வெறுக்காத குணம்..
தவறுகளை மன்னிக்கும் குணம்..
அளவு இல்லாத பாசம், மற்றவர்கள் காட்டிடாத
நேசம் உடையவள் தான் அம்மா!
அழுவதற்கு கண்கள், அணைப்பதற்கு கைகள்
சாய்து கொள்ள தாயின் மடி,
எப்பொழுதும் காத்திருக்கும்
எனக்கு உயிர் தந்த உன்னை
என் உயிர் உள்ளவரை மறவேனோ
மகள்களின் இதயக்கூட்டில் உண்மையான ராணி
அம்மா மட்டும் தான்
அன்பு என்ற சொல்லுக்கு அர்த்தம் நீயே!
பாசம் என்ற சொல்லுக்கு பொருளும் நீயே!
நிலா காட்டி சோறூட்டும் போது தெரியாது அம்மா
என்னையே சுற்றி வந்த நிலா நீ தான் என்று
இவ்வுலகில் அன்பை மட்டுமே எதிர்பார்க்கும்
ஒரு உறவு நீ மட்டுமே.
கருவில் சுமந்த உன்னை என் வாழ்நாள் வரை
என் மனதில் சுமந்து கொண்டிருக்கிறேன்
ஏனெனில் என் கடமைக்கு அல்ல
உன் பாசத்திற்கு அம்மா!
என்ன தவம் செய்தேன்
உனக்கு நான் மகவாய் பிறக்க
என்ன தவம் செய்தேன்
நீ என் தாயாய் வந்திட
அடுத்த பிறவியிலும் இதே வரம் பெற்றிட
இறைவனை வேண்டுகிறேன்….

“உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது”