யாழ்ப்பாணம் புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியின் பழைய மாணவரும் அணு விஞ்ஞானியும் பேராசிரியரும் தொழிலதிபரும் கனடிய அரசியல் செயற்பாட்டாளருமான கனடா வாழ் தமிழ் பேசும் அணு விஞ்ஞானி. பேராசிரியர் வேலுப்பிள்ளை இலகுப்பிள்ளை எழுதிய ‘அணுவைத் துளைத்து’ என்னும் நூலின் வெளியீட்டு விழா ஸ்காபுறோவில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு முன்னாள் அதிபர் சின்னையா சிவனேசன் தலைமை தாங்கினார். பேராசிரியர்கள் இ. பாலசுந்தரம். ஜோசப் சந்திரகாந்தன் மற்றும் சாமி அப்பாத்துரை. பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி. ‘உதயன்’ லோகேந்திரலிங்கம்’யுகம் வானொலி’ கணபதி ரவீந்திரன் ஒலிபரப்பாளர் இளையபாரதி உட்பட பலர் உரையாற்றினார்கள். நூலாசிரியர் பேராசிரியர் வேலுப்பிள்ளை இலகுப்பிள்ளை ஏற்புரை வழங்கினார்.









