கனடாவில் நீண்ட காலமாக இயங்கிவருபவதுடன் தமிழ் பேசும் மூத்தவர்களின் உடல் நலம் குன்றிய நாட்களில் அவர்களைப் பராமரிக்கும் அற்புதமான மனித நேயப் பணியை மேற்கொண்டு வரும் திருமதி இந்திராணியின் ‘விலா கருணா’ மூத்தோர் இல்லம் நடத்திய ‘சந்தியாராகம்’ சுப்பர் சிங்கர் போட்டி நிகழ்ச்சி கடந்த 16ம் திகதி சனிக்கிழமை ஒன்றாரியோ இசைக் கலா மன்றத்தின் கலா மண்டபத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அன்றைய நாளில் மண்டபம் நிறைந்த இரசிகர்கள் கூட்டமும் வர்த்தக மற்றும் கலைத்துறை சார்ந்தவர்களும்கூடியிருக்க. இசையும் கொண்டாட்டமுமாக இடம்பெற்ற மூத்தோருக்கான முத்தான விழா அனைவரையும்மகிழ்வித்தது என்றே கூற வேண்டும்.
“சந்தியாராகம்’ 2023 போட்டி நிகழ்ச்சியில்இறுதிப் போட்டிக்கு ஒரு பெண் போட்டியாளர் உட்பட ஆறு பேர்தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் மேடையில் பாடிய போதுஅவர்களின் பாடல்களுக்கு ‘விண்ட் ‘ இசைக்குழுவினர் பின்னணி இசை வழங்கினார்கள். கனடாவில் இசைத்துறை அனுபவமும் புலமையும் நிறைந்தவர்கள் நடுவர்களாக பணியாற்றினார்கள்.

அன்றைய சந்தியாராகம் போட்டியின் இறுதியில் முதல் மூன்று இடங்களைத் தட்டிக் கொண்டவர்களின் பெயர்கள் மேடையில் அறிவிக்கப்பெற்றபோது சபையினர் உற்சாகமாக கரகோசம் செய்து பாராட்டினார்கள்.இவ்வருடத்திற்கான சந்தியாராகம் மூத்தோருக்கான இசைப் போட்டியில் முதலாவது இடத்திற்கான சிறப்புப் பரிசை பாடகர் சிவா தர்மலிங்கம் அவர்கள் பெற்றுக் கொண்டார். இரண்டாவது இடத்தை திரு நவரட்ணம் அவர்களும் மூன்றாவதுஆனந்த் குமாரசாமி அவர்களும் பெற்று பரிசுகளைப் பெற்றுக் கொண்டனர்.