ஆங்கில புத்தாண்டு உலகில் உள்ள அனைத்து மக்களும் மகிழ்ச்சியாக வரவேற்கும் ஒரு இனிய நாளாகும். குறிப்பிட்ட மக்கள் மட்டும் இதனை வரவேற்பார்கள் என்று நாம் சொல்ல முடியாது. அனைத்து மக்களும் ஆவலாக அவர்களுடைய புது வருடத்தின் நாளை வரவேற்க தயாராக காத்திருப்பார்கள்.

புத்தாண்டை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கொண்டாடுவார்கள். ஒரு சிலர் தங்களின் குடும்பங்களுடன் இரவு விழித்திருந்து கேக் வெட்டி கொண்டாடுவார்கள். ஒரு சிலர் நண்பர்களுடன் இரவில் வெளியில் சென்று ஆட்டம் பாட்டம் என ஆடி பாடி கொண்டாடுவார்கள். இன்னும் சிலர் கோயில், கடற்கரை, போன்ற பல பொழுதுபோக்கு இடங்களுக்கு சென்று வருடத்தின் முதல் நாளை மகிழ்ச்சியாக வரவேற்பார்கள்.

சிலர் புத்தாண்டு பிறக்கும்போது இரவு தூங்காமல் இருந்து கண்விழித்து அனைவருக்கும் முதல் ஆளாக இருந்து வாழ்த்து சொல்வார்கள். இந்த பழக்கத்தை அவர்கள் வழக்கமாக வருடாவருடம் தொடர்வார்கள். இது அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியை கொடுக்கும் என்றே சொல்லலாம். ஆங்கில புத்தாண்டு ஆங்கில மாதத்தின் முதல் நாள் ஜனவரி 1 என்றாலும்  இந்த உலகத்தில் வாழும் மக்கள் அவர்களின் மொழியில் வாழ்த்துக்கள் சொன்னால் கூடுதல் மகிழ்ச்சி அடைவார்கள். அவர்கள் மனதில் நினைக்கும் எண்ணங்களை அவர்களின் சொந்த மொழியில் சொன்னால் இன்னும் அழகாக இருக்கும். அனைவருக்கும் நமது வலைதளத்தின் சார்பாக (Happy New Year 2024) இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்