தேவையான பொருட்கள்:
புடலங்காய் – ½ கிலோ
துவரம் பருப்பு – 4 கரண்டி (வேக வைத்து மசித்தது) 
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
மிளகாய்ப் பொடி – ¼ ஸ்பூன்
மல்லிப்பொடி – 1 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு
கடுகு – ¼ ஸ்பூன்
உபருப்பு- 1½ ஸ்பூன்
பெருங்காய்ப் பொடி- ¼ ஸ்பூன்
சீரகம் – ½ ஸ்பூன்
எண்ணெய் – 1 ஸ்பூன்
நெய் – ½ ஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு

செய்முறை:
புடலங்காயை சின்னத் துண்டுகளாக நறுக்கிக் கழுவி கொஞ்சம் தண்ணீர் விட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். பாதி வெந்ததும் மல்லிப் பொடி, மிளகாய்ப் பொடி சேர்த்து நன்றாக வேக வைக்கவும். வெந்ததும் பருப்பைக் கலந்து கொதிக்க வைத்து கெட்டி ஆனதும் எண்ணெய், நெய் விட்டு கடுகு, பெருங்காயம், சீரகம் தாளித்து கறிவேப்பிலை போடவும். காரப் பொடிக்குப் பதிலாக இரண்டு மிளகாய் வற்றலை முழுதாகத் தாளிக்கலாம். பீர்க்கங்காய், சௌசௌ, அவரைக்காய், முருங்கக்காய், பிஞ்சுக் கத்தரிக்காய்களிலும் இதேபோல் கூட்டு செய்யலாம்.