கடந்த 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று மொன்றியால் மாநகரில் 40 அமைப்புக்கள் ஒன்றிணைந்து பிரமாண்டமான முறையில் நடத்திய ‘தமிழ் மரபுத் திங்கள்’ விழா காலை தொடக்கம் மாலை வரை சிறப்பாக நடைபெற்றது. மேற்படி விழாவில் எமது ஸ்காபுறோ தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி உட்பட தனது பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் சகிதம் கலந்து கொண்ட கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அவர்கள் தனது உரையில் அவரது அன்பையும் பொழிந்து கனடா வாழ் தமிழ் மக்கள் நிகழ்த்தும் சாதனைகளுக்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
கண்ணைக் கவரும் நடனங்களும் காதுக்கினிய பாடல்களும் நவரசங்களை அள்ளி வழங்கிய பாராம்பரிய நடனங்களும் கருத்தாளமிக்க உரைகளும் இடம்பெற்ற மேற்படி விழாவில் அழகிய முறையிலும் ஏற்பாடு செய்யப்பெற்று கலந்து கொண்ட சுமார் 3000 பேருக்கு உணவு மற்றும் பானங்கள் வழங்கப்பெற்று நன்கு உபசரிக் கப்பெற்றார்கள்.