உடலை உறைய வைக்கும் குளிர்காற்று குப்பென்று, திறக்கப்பட்ட காரின் கண்ணாடி ஜன்னல் வழியாக முகத்தில் அறைந்ததைக் கூட பொருட்படுத்தாமல் மாலா கனடாவின் 401 பெருந்தெருவில் காரை லாவகமாக ஓட்டிக் கொண்டு இருந்தாள். அவள் எதையும் பொருட்படுத்தியாகத் தெரியவில்லை கண்கள் தெறித்து விழும் அளவு குளிர் உடலில் பட்டது கூடத் தெரியாமல் இல்லை இல்லை பட்ட உணர்வு கூட இல்லாமல் அவள் சிந்தனை எங்கோ சிறகடித்துக் கொண்டு இருந்தது. அவள் மனம் காரைவிட, குளிர் காற்றைவிட வெகு வேகமாகப் பறந்து பறந்து சிந்தனையில் ஆழ்ந்து வேதனை உணர்வுகளால் குழம்பி இருந்தது, ஆனால் அவள் காரை ஓட்டிச் சென்ற விதம் அவளின் மன உறுதிக்கும் அவள் பட்ட அனுபவத்திற்கும் சான்று வழங்குவது போல் கட்டியம் கூறியது

அவள் உள்ளம் வேதனையால் துவண்டு போய் இருக்கின்றது என்பதை அவ்வப் போது அவள் நெற்றிப் புருவங்கள் ஏறி இறங்குவதிலும் சுருங்குவதிலும் தெரிந்தது. ஆனால் அவள் உடல் மட்டும் இது என்ன எவ்வளவு பட்டாச்சு என்பது போல் துவண்டு விடாமல் கம்பீரமாக இருந்தது.
 
நேரஞ் செல்லச் செல்ல வேதனைகளின் முடிவாய் கண்களின் வழி உண்டு கன்னத்தில் தவழ்ந்த கண்ணீர் கூட அவளின் மன உறுதியைப் போல கன்னத்தின் நடுப்பகுதியிலேயே குளிரினால் உறைந்து நின்று விட்டு இருந்தது.

ஏதோ ஒரு அவசரத்திற்காக கூவிக் கொண்டு அவளைத்தாண்டிச் சென்ற பொலிஸ் காரின் அலாரச் சத்தம் கேட்டு தெளிவு நிலைக்கு வந்த மாலா தான் வெளியேற வேண்டிய பாதை நெருங்கிவிட்டதை உணர்ந்தாள். காரின் வேகத்தைக் குறைத்து செல்ல வேண்டிய பாதையினூடாக பெருந்தெருவில்  இருந்து வெளியேறி, தன் வேலைத் தளத்தை அடைந்தாள்.

இரத்தம் போன்ற சிவப்பு எழுத்துக்களினால் எழுதப்பட்ட “ரிம் ஹோட்டன்” என்ற எழுத்துக்கள் சூரியனின் ஒளியினால் புத்துணர்வுபட்டது போல் பளபளவென்று மின்னியது.
அந்தப் பளபளப்பில் லயித்துப் போன மாலாவிற்கு அது அவளை அன்பாக வரவேற்பது போன்ற பிரமையைக் கொடுத்தது ‘’ ஆம் அது தான் அவள் தினம் தினம் வந்து தன்னை மறந்து வேலை செய்து விட்டுப் போகும் தளம்”

கவலைகளை உதறி விட்டு முகத்தில் புன் சிரிப்பைத் தவழவிட்ட படி வேலைக்குத் தயாரானவள் போல உள்ளே நுழைந்தாள். தினமும் வரும் வாடிக்கையாளர்களோடு சினக்காமல் சிரித்தபடி வேலை பார்ப்பது எவ்வளவு கடினம் அதுவும் மனதில் வேதனைகளை மூட்டை, மூட்டையாக சுமந்து கொண்டு வெளியில் சிரிக்க வேண்டும் அன்பான வார்த்தைகளை உச்சரிக்க வேண்டும்.  அப்பப்பா எத்தனை கடினம்..;.?  ‘’ஆடைகளை மாற்றி, தலையால் கறுப்பு நிற வலையைப் போட்டு முடிக்கவும், அவள் மனம் உற்சாகத்துடன் வேலையை ஆரம்பிக்கும் நிலைக்கு வரவும் சரியாக இருந்தது.
 
சிரித்த முகத்துடன் ஓடர்களை எடுத்து அவற்றை ஒழுங்காக கொடுப்பதில் கவனம் செலுத்திய அவளுக்கு மதிய நேரம் நெருங்கி விட்டதை உணர முடியவில்லை திடீரெண்டு கையில் குழந்தையை வாரி அணைத்தப்படி வந்த ஆங்கிலப் பெண் சுவீற்றி டுயு வோன்ற் அப்பிள் ய+ஸ்? என்று  தன் பிள்ளையை அன்பு பொங்க கேட்டுவிட்டு சிரித்த முகத்துடன் மாலாவிற்கு ஹலோ சொல்லவும், குழந்தை “ஜெஸ் மம்மி, ஐ லவ் ய+”  சொல்லவும் சரியாக இருந்தது.

ஐ லவ் ய+ என்ற வார்த்தை மாலாவின் நெஞ்சில் பாயந்து யாரோ சம்மட்டியால் அடிப்பது போன்ற உணர்வு. சிரிக்க முயன்றும் முடியாமல் முனகிய குரலில் பதிலுக்கு ஹலோ சொல்லிவிட்டு தன் கடமையில் ஈடுபட்டாள்.

மாலாவால் வேலையைத் தொடர முடியவில்லை. மதிய இடை வேலையாதலால்  வெளியே சாப்பிடப் போவதாக சாக்குச் சொல்லிவிட்டு காரிற்குள் நுழைந்தவளுக்கு கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தன அவளால் அடக்க முடியவில்லை கதவை நன்றாகப் ப+ட்டி விட்டு கதறிக் கதறி அழுதாள். அவள் பட்ட கஸ்ரம்கள் எத்தனை எத்தனை அவை யாவும் வலிகளாய் அவள் மனதில் கட்டம் கட்டமாகப் படிந்து இருந்தன, ப+மியில் படிந்துள்ள பாறைகளைப் போல. இலங்கையில் தொடாந்து வந்த இனப் பிரச்சினையில் செல்பட்டு வீடு இடிந்ததினால் இருக்க இடம் இன்றி பயத்துடன் பிறந்த ஊரைவிட்டு வெளியேறியதால் பல்கலைக்கழத்தில் படித்துக் கொண்டு இருந்த  பட்டப்படிப்பை தொடரமுடியாமல் போனபோது ஏற்பட்ட முதல் வலியை எப்படியோ தாங்கிவிட்டாள்.

வவுனியாவில் வந்து அகதிக்காம்பில் இருந்தபோது பட்ட துயரங்கள் சொல்ல முடியாத துன்பங்கள் காலைக்கடன்களை முடிக்கவே பட்ட வேதனைகள் எல்லாமே இரண்டாம் வலியாக உருவெடுத்திருந்த போது கூட மன உறுதியோடு சாமாளித்து மீண்டு விட்டாள். எப்படியோ யார், யாரோ உதவியுடன் ஒரு சிறு வீடு பிடித்து பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து அக்கா, அம்மா, தங்கை, தம்பி அனைவரையும் ஆகா, ஓகோ என்று இல்லைவிட்டாலும் ஆனவரை பார்த்து பசியாற்றியதில் பெருமைப்பட்டு மகிழ்ந்திருந்தாள். செல்பட்டதால் அப்பாவின் கால்கள் ஊனம், இந்த அதிர்ச்சியால் அம்மா உடல் ஊனம் இல்லாவிட்டாலும் மனத்தில் ஊனம் பட்டவள்போல் எப்போதும் பிரம்மை பிடித்தவள் போல் எதிலும் ஆசை அற்றவள் போல் இருந்ததால் எல்லாம் மாலாவின் சுமையைக்கூட்டி அவளை சுமக்க வைத்து விட்டு இருந்தன.

“சுமைதாங்கி என்று சொல்லவது அவளுக்கு பொருத்தமற்றது” ஏன் எனில் சுமைதாங்கிக் கல் வெறும் கல் தானே! ஆனால் மாலா உயிருள்ள கல்.
வலியுடன் தொடர்ந்த வாழ்க்கையில் ஒத்தடம் கொடுப்பது போல் கனடாவில் இருந்து வந்த மாப்பிள்ளையின் வருகை அமைந்து இருந்தது.

யாரோ ஒரு உறவினர் மூலமாக வந்த சம்மந்தம், கனடாவில் இருந்து வந்த மாப்பிள்ளைக்கு பத்து நாட்களுக்குள் அழகான கஸ்ரப்பட்ட குடும்பப் பெண் தேவை சீதனம் எதுவும் தேவையில்லை என்று வித்தியாசமாக வந்தவருக்கு மாலாவின் அழகு பிடித்து விட்டிருந்தது ஒப்பனை இல்லாமலே பளிச்சென்று இருக்கும் முகம்.. மெல்லிய உடல்வாகு சாதாரண புடவையில் கூட பார்ப்போரை விறைக்க வைக்கும் மாலாவின் அழகும் அவளது கள்ளமற்ற சிரிப்பும், அவளுக்கு மேலதிக சான்றுகளாக அமைந்து மாப்பிளையின் தாயாருக்கு பிடித்து விட்டிருந்தது.

திடீர் என்று மாலாவின் மனதில் எழுந்த சந்தேகத்திற்கு மாப்பிளையின் அம்மா  கூறிய பதில் ‘கஸ்ட்டப்பட்ட குடும்பப் பெண் தான்” குடும்பத்தை கனடாவில் பொறுப்பாய்ப் பாhப்பாள். மாலாவிற்கு மனநிறைவைத் தந்தது ஆயினும் அம்மா, அப்பாவை தம்பி தங்கையை விட்டுட்டு போவது அவர்களின் நிலையைச் சொல்லி அவள் சங்கடப்பட்டபோது “ப்ப+ இவ்வளவு தானா”? அவர்களின் பேரில் 5 லட்சம் ரூபா போடுகின்றோம். தவிர வேறு வசதிகளும் செய்து தருகிறோம் மாலா மட்டும் ஒத்துக் கொண்டால் சரி என்று ஒற்றைக்காலில் நின்ற மாப்பிள்ளையை தட்டிக் களிப்பது சரியல்ல என்று எல்லோரும் சொன்னதும் மாலாவால் மேற் கொண்டு மறுக்க முடியவில்லை.

சொன்னது போல் எல்லா எற்பாடுகளும் விரைவாக நடந்தது. மாலாவின்  கலியாணம் உட்பட மகிழ்ச்சி துக்கம் எல்லாம் ஒன்று சேர விமானத்தில் பறந்தவளுக்கு கணவனின் அரவணைப்பு ஆறுதலாக இருந்தது. 
 நாட்கள் நகர்ந்தன இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயானாள் மாலா அன்பைக் கொட்டிக் கொட்டி வளர்ந்தாள். தன் பிள்ளைகளின் பிஞ்சுக் கரங்கள் தன்னை வாரியணைக்கும் போதும், “ அம்மா நான் உங்களைப் பார்ப்பன் ஐ டழஎந லழர” என்று தினம் பிள்ளைகள் சொல்வதையும் கேட்டு ப+ரித்து, எல்லா வேதனைகளையும் மறந்து தான் வாழ வேண்டும் என்ற துடிப்பு, அவளுக்குள் முழுமை அடைந்து உறுதியாக நெஞ்சில் இறங்கி இருந்தது. பிள்ளைகளைப் பொறுத்தவரையில் எல்லாமே  அவள்தான் குளிக்க வார்ப்பது தலை சீவிவிடுவது, பள்ளிக்கூடம் கூட்டிப் போவது சாப்பாடு ஊட்டுவது மட்டுமல்ல அவள் அவர்களுக்கு ஒரு விளையாட்டுப் பொம்மை கூட. காலையில் பாடசாலையில் விட்டு விட்டு வேலைக்குப் போய் விடுவாள். பின்பு மாலை பாடசாலையில் இருந்து கூட்டி வந்து, மிகவும் அன்புடனும் பாசத்துடனும் பார்த்துப் பார்த்து வளர்த்தாள். அப்பா வேலைக்குப் போவதோடு சரி.

அம்மா எனக்கு வலூன் வேண்டித்தாறியா? சொக்க வாங்கித்தாறியா? பாக்கிலபோய் விளாடலாமா? சு;சினோமான் கட்டி விளாடவாறியா? என்று அவர்கள் மலழையெல்லாம் கேட்டு இசையை விட ரசித்து அவற்றைத் தனக்கு விற்ற மின்களான மாற்றிக் கொண்டவளுக்கு ஏதாவது கவலைகள் வந்து அழும்போது சின்னவன் சுஜி(சுஜன்) அம்மா அளவாண்டாம் நான் உங்களை அழ விடமாட்டன், படிச்சு பெரியாளாக வந்து பெரிய வீடு கட்டித் தருவன். அது மட்டுமா கஜான், கஜான் (கஜானனன்) என்று  அண்ணாவைக் கூப்பிட்டு அண்ணா அம்மா அழறா கட்டிப் புடியுங்கோ, அம்மாவைக் கொஞ்சி விடுங்கோ என்று செல்லமாகக் கூறி தானும் அம்மாவைக் கட்டிப் பிடித்து பிஞ்சுக் கையால் முகத்தைத் தடவிடும்போது மாலாவின் உடல் பூரா மின்hரம் பாய்ந்தது போன்ற ஒரு தெய்வீக உணர்வு தனது வாழ்க்கையில் ஒரு அர்த்தம் உண்டு என்று மகிழ்ந்து போனாள்.

மாலாவின் கணவன் வேiயால் வந்ததும் குடி, குடி. அது அவரது அண்டாடத் தொழில். இரண்டு தடைவ மைல்ட் ஆக இதய நோய் வந்தும் பொருட்டுத்திக் கொள்வதில்லை. குடி குடி. அது அவரது நெருங்கிய நண்பன். வேலையால் வந்ததும் ஹாய் ஹலோ அவ்வளவு தான். குடிப்பதற்கு ஏதாவது இறைச்சியை ருசியாகச் செய்து கொடுக்க வேண்டும். கணவன் என்றால் மனைவிதான் எல்லாம் செய்ய வேண்டும். 50ம் ஆண்டுகளில் எப்படிப் பெண்கள் இருந்தார்களோ அப்படி இருக்க வேண்டும். அதுவும் சீதனம் எதுவும் இல்லாமல் வாழ்க்கைப்பட்ட மாலாவிற்கு எதுவும் பேசமுடியாத நிலை.அன்பான மனைவியா அல்லது அன்பான அடிமையா? இந்தக் கேள்வி அடிக்கடி அவுளுக்குள் எழும்போது அவளுக்கே விடை nதியாது முழிப்பாள். மொத்தத்தில் அவள் ஒரு காசு குடுத்து வாங்கப்பட்ட மி~pன் அவள்கணவனுக்கும் அவனது குடும்பத்தாருக்கும்.

அவருடைய அம்மா அவரது தங்கை வீட்டில் அவளது குழந்தைகளைப் பார்ப்பது என்று எல்லா ஒத்தாசையும் மகளுக்கு மட்டும் வழங்கினார். அங்கு அவரது தங்கைக்கு காய்ச்சல், அம்மாவிற்கு சுகமில்லை என்றால் அடுத்தடுத்து வரும் போனில் சொல்வது எல்லாம் மாலா செய்து கொடுக்க வேண்டும். சூப்பு, ரசம், உணவு வகைகள் நாக்கு ருசிக்க அரைச்ச மீன் குழம்பு, இஞ்சிச் சம்பல் என்று செய்து கொடுக்க வேண்டும். ஆனால் மாலாவிற்கு ஒன்று என்றால் யாரும் இல்லை. அவள் எதிர்பார்க்கவும் முடியாது. ஆனால் இவை யாவற்றையும் அவள் வலிகளாக எடுத்துக் கொள்வதில்லை. காரணம் கலியாணத்தால் ஏற்பட்ட பலனாக முத்துக்களாக இரண்டு குழந்தைகள். அவர்கள் காட்டும் அன்புகள், முத்தங்கள் எல்லாம் வலியையும் மீறி ஒத்தடம் கொடுத்து அவளை பரவசத்தில் ஆழ்த்தி இருந்தன.

ஆனால்..? திடீர் என்று வந்த மாரடைப்பினால் அவள் கணவன் ஆஸ்பத்திரியில் உடனடிக் கவனிப்பில் அனுமதிக்கப்பட்ட போது அவள் பதறிப் போய்விட்டாள். இங்கு ஆரும் அற்ற அனாதை அவள், பச்சிளங் குழந்தைகளை வைத்துக் கொண்டு எப்படி? கல்லானாலும் கணவன் அல்லவா? ஆயிரம் இருந்தாலும் தாலி கட்டிய புரு~ன். தாய்மை என்ற உன்னத நிலையைத் தந்தவன். எப்படிப் பதறாமல் இருக்க முடியும். மீண்டும் அவள் இதயம் வலித்தது.

பை பாஸ் சேஜரிக்காக அனுமதிக்கப்பட்ட மாலாவின் கணவனின் முடிவு அவளுக்கு சாதகமாக அமையவில்லை. அதிகம் குடித்ததாலும், இறைச்சி வகைகளை அதிகமாக உட்கொண்டதாலும் தான் இப்படி நடந்துள்ளது என்று டாக்டர்கள் கூறியதைக் கேட்டு அவரது தாயார் அவள் மீது பொழிந்த வசை மொழிகளைக்கூட அவள் பொருட்படுத்தவில்லை. “அவள் பேச்சு எப்போது எடுபட்டது” கணவனை இழந்ததால் ஏற்பட்ட வலியால் உறைந்தவளுக்கு இவை எதுவும் காதில் எடுபடவில்லை.

ஒரு வாரம் பறந்து போனது. “கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு காரியம் நடக்கட்டும் துணிந்து விடு” றேடியோவில் ஒலித்த பாடல் அவளை மீண்டும் இயற்கை நிலைக்கு அழைத்து வந்தது. அவள் அழ தாங்காத குழந்தைகள் கஜனும், சுஜனும் அவளைக் கட்டிப் பித்து அணைத்த ஆறுதல் அவளை அவர்களுக்காக வாழவைக்கத் துடித்தது.

எங்கிருந்தோ வந்த ஒரு தைரியத்தால் அசுரவேகத்தில் இயங்கினாள். வேலை வீடு பிள்ளைகள், பிள்ளைகள், பிள்ளைகள் அது அவளது தேவாரம், உலகம் எல்லாம்.
அளவுக்கு அதிகமாக இல்லை இல்லை கடுகளவு கூட ஒப்பனை செய்யாத அவளுக்கு பிள்ளைகளின் கல்வித் திறமையும், விளையாட்டுத் திறமையும்மற்றவர்களால் பாராட்டப்படும் போது ஏற்பட்ட மகிழ்ச்சியால் அவள் முகத்தில் ஏற்பட்ட பிரகாசம் அவளுக்கு வண்ணம் பூசியது போல் அமைந்தது.

தவிர கஜனும் சுஜானும் மிருதங்கத்தில் தேர்வு பெற்று, அதன் சான்றாக அவள் கஸ்ரப்பட்டு நடாத்திய அரங்கேற்றத்தில்  அவளை எல்லோரும் பாராட்டியபோது அவளையும் அறியாமல் நிமிர்ந்த நடையும், தெளிவும், தன்னம்பிக்கையும் பூவில்லாத   அவள் உடலுக்கு பூச்சூடியது போல் அழகு சேர்த்தது.

காலங்கள் உருண்டன. பிள்ளைகள் இருவரும் ஒன்பதாம் பத்தாம் வகுப்பை எட்டி இருந்தார்கள். அவளது மகிழ்ச்சியும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வந்தது. தினமும் பாடசாலையில இருந்து வந்த குற்றச்சாட்டுக்கள் அவளைக் கலங்க வைத்தன. உங்கள் பிள்ளைகளின் வரவு ஒழுங்கில்லை. எந்த விதமான வீட்டுப்பாடங்களும் செய்வது இல்லை. சிகரெட் பிடிப்பது, குடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள். அவ்வப்போது போதை மருந்து பாவிக்கிறார்கள். இப்படி எத்தனையோ?
இது பற்றிக் கேட்டால்.. அம்மா உங்களுக்கு ஒண்டும் தெரியாது. பி குவயற், ஸட்அப், வி நோ எவிரிதிங்க் இவைகள் தான் பதிலாகக் கிடைத்தன. அழுதாள் கெஞ்சினாள் பலன் இல்லை. சிறுவயதில் அவர்கள் காட்டிய அன்பையெல்லாம் நினைவு கூர்ந்து பார்த்தாள் எதுவித பலனும் இல்லை.
இரவு ஒரு மணி, இரண்டு மணிவரை கம்பியூட்டர் கம்பியூட்டர். கிட்டப் போனால் மம்மி கோ எவே என்ற சீறல்.
கீழே விழுந்து விடுமோ என்று அஞ்சும் அளவிற்கு உடுக்கும் காற்சட்டைகள். காதில் தக தக வென ஒலிக்கும் தோடுகள். இவையாவும் அவளைக் கேட்காமலேயே கஜன், சுஜானின் உடலை அலங்கரித்தன.
ஏன் இந்த மாற்றம்? வயதா? இல்லை இல்லை இநத நாட்டின் பழக்க வழக்கமா? நான் இப்படி வளர்க்க இல்லையே?

ஐ லவ் யூ மம்மி என்ற வார்த்தையில் வாழ்ந்து கொண்டு இருந்த அவளுக்கு இப்போது அதுவே கசந்து விட்டு இருந்தது. இப்போது அந்த வார்த்தைகளை அவர்கள் யாரோ கேர்ள்ஸ் பிரண்டாம் அவர்களுக்கு போனிலும், கம்பியூட்டரிலும் பாவிக்கின்றார்கள். பதினாலு வயசிலும், பதினைந்து வயசிலும் கேர்ள்பிரண்ட் அவளுக்கு அடி வயிறோ குமட்டியது. அப்படியானால் நான் பட்ட க~;டங்கள், கண்ட கனவுகள்.
அதிகப்படியான பாடங்களின் புள்ளிகள் தோல்வியையே தழுவி நின்றன.. சரி திருந்தி விடுவார்கள் திருந்தி விடுவார்கள் என்று நம்பியவளுக்கு இடிவிழுந்தது போல் இருந்தது அந்தச் சம்பவம்..

ஆம் இருவரும் குடித்து இருந்தார்கள், அன்று வீட்டுக்கு வரும்போது தள்ளாடினார்கள். ஏதோ என்று பதறியவளுக்கு மதுவின் நெடி. நெஞ்சில் வலியைக் கொடுத்தன. கண்கள் பாவம் என்ன செய்யும் அழுவதைத் தவிர! அப்போதும் துக்கம் தொண்டையை அடைக்க சுதாகரித்துக் கொண்டு ராசா ஏன் அப்பன் இப்படி செய்கிறீர்கள் அம்மாவிற்கு உங்களை விட்டால் யாரு இருக்கினம். படிச்சு பெரியவனானதும் இதைச் செய்யலாம். இப்ப வேண்டாம்.

ஸட் அப் மம்மி. யூ ஓல்வேஸ் அட்வைஸ். வுp ஆர் நொட் சின்னப் பிள்ளைகள் இளையவன் சுஜானின் பதில்.
என்ன சொல்வது என்று தெரியாமல் விளித்தவளுக்கு சுஜானின் கையில் வரைந்து இருந்த சித்திரங்கள் வலியைக் கூட்டின. இருதயமே முழு வளர்ச்சி அடையாத பருவத்தில் நல்லது கெட்டது சரி, பிழை, அன்பு, ஆசை என்பதைப் பிரித்து அறிய முடியாத வயதில் ஏற்படும் பலமில்லாத உணர்வுகளின் மிகுதியால் ஏற்பட்ட உந்தலினால் வரையப்பட்டனவா? இந்தச் சித்திரங்கள்……?

இருந்த நம்பிக்கைக்கும் சமாதி கட்டியது போல் அமைந்தது அந்தச் சித்திரங்கள். “ஆம் வலிகள் தொடர்கின்றன” ஆனால் இவ்வலிகளை அவளால்தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஏன் இந்த இயற்கை இப்படி?

“பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு” என்றோ எப்போ படித்தது. திடீர் என்று அவளுக்குள் புகுந்து நெஞ்சை விறைக்க வைத்தது. ஆனாலும் “கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்ற வாசகங்கள் ஒரு பக்கத்தில் ஒத்தடம் கொடுத்தன”

“முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்” இப்படித் தன்னம்பிக்கையூட்டும் வாசகங்களையெல்லாம் இவளுக்காகத்தான் எழுதினார்களோ? ஆம் அவளுக்கு நேரிய பாதைகளைக் காட்டும் வாசகங்கள் தான் நினைவுக்கு வந்தன.

வலிகளுடனும், தன்னம்பிக்கையுடனும் பிள்ளைகளை நல்வழிப்படுத்த முடியும் என்ற அசைக்காத நம்பிக்கையுடன் தொடர்கிறாள் வாழ்க்கையை மாலா..?
அவள் வெற்றி பெறுவாளா? நம்பிக்கை தானே வாழ்க்கை.

எது எப்படியோ என் பிள்ளைகளுக்கு நான் அன்பாக, ஆதரவாக இருந்து அவர்களை இந்த உலகுக்கு ஒரு நல்ல மனிதர்களாகத் தரவேண்டும். இவையெல்லாம் கால மாற்றத்தினால் வந்துபோன சுனாமியாக நினைத்து, மதியுள்ள தாயாக நடந்து கொள்ள வேண்டும். மாலாவின் மனதில் மீண்டும் ஒரு உறுதி பிறந்தது. பிள்ளைகளைத் தூற்றுவதாலோ கடிந்து பேசுவதாலோ எதையும் சாதித்து விட முடியாது. நுpனைத்து நினைத்து அழுது நிலை குலைந்து போவதாலும் எதையும் வெற்றிகரமாக முடிக்க முடியாது. என் உணர்வுகளை ஊமையாக்கிக் கொண்டு எடுத்த முயற்சியில் வெற்றி காண வேண்டும்.
“ கண்டிப்பாக என்றோ ஒரு நாள் அவர்கள் என் புரிந்துணர்வை உணர்ந்து நடந்து கொள்வார்கள்”
“ஆம் நாம் சந்தோஷமாக இருப்பதற்கு  நம்மை நாமே உறுதியாக்கி சந்தோஷப்படுத்திக் கொள்ள வேண்டும்”
இது அவளுக்குள் உதித்த ஒரு பொறி. அன்பும், பாசமும் எதையும் கேட்பது இல்லை. ஆனால் கொடுக்கின்றது. தாய்ப்பாலை அன்புடன் ஊட்டி வளர்த்த அன்பான அன்னை அவள் எப்படி அவளால் தன் பிள்ளைகள் எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்று விடமுடியும். கண்கள் கலங்கி, கண்ணீராய் வடிய தெளிவு பெற்றாள் மாலா.

“உன் அறைக்கு ஒரு சிறு ஜன்னல் இருக்கும் வரைக்கும் வரை உன் வாழ்க்கை குறுகிப் போய் விடாது” யாரோ ஒருவர் எழுதிய தன்னம்பிக்கை வசனம்.
“தன்னம்பிக்கையும் முயற்சியும் மாலாவின் வலிகளை நிட்சயம் ஆற்றும் ஒரு நாள்” ஆனாலும் தற்சமயம் வலிகள் தொடர்கின்றன……

 – காவலூர் வரதன்

வகைப்படுத்தப்பட்ட பகுதி: சிறுகதைகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: January 14, 2015