என்னருமைத் தோழா!
     மயக்கத்தில்
     புற்றுநோய்த் தடியின்
     புகை மண்டலத்தில்
     பூரிப்பா?

     வட்டப் புகை விட்டு
     ஆயுளின் நீட்டம் குறைத்து
     சூழ்ந்தோரின் சுகம்
     சிதைப்பதில்
     புதுச் சுகமா?

     உடலரசின்
     உட்துறை மந்திரி
     சுவாசப்பைக்கு
     ஒலிபரப்பு மந்திரி
     வாயூடாய்
     புகைச் செய்தி
     அனுப்புவதில் என்ன
     பேரின்பமோ?

     ஓ தோழா!
     புகைத்தடி செய்திடும்
     லீலைதான் அறியாயோ!

     சுவாசச் சுவர் கறுக்க
     சுகம் கெட்டு நீ படுக்க
     பிரணவன் உன் பிராணனை எடுக்க
     பிந்திய செய்தியில்
     உன் மனைவிக்குப்
     புதுப் பெயர்!
     அதில் உனக்குப்
     பெரு விருப்பா?

     ஓ தோழா!
     குஞ்சுப் பறவையின்
     புதிய சிறகு போல்
     உனது தீர்மானம்
     புதிய உணர்வுடன்!
     சத்திய உறுதியுடன்
     அத்தரித்திரப் புகைத்தடி
     தொட்டிடேன்
     உயிர் குடிக்கும்
     புற்று நோய்தடி
     தொட்டிடேன்
     புற்று நோய்த் தடி
     இனித் தொட்டிடேன்
     என்று நீ
     – விஜயநாதன். பெ

வகைப்படுத்தப்பட்ட பகுதி: கவிதைகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: November 27, 2014