தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 1 கப்
பால் – 3 லிட்டர்
சர்க்கரை- ½ கப்
ஏலப்பொடி – ½ ஸ்பூன்

மில்க் மெய்டு- ½ கப்
முந்திரிப் பருப்பு – 25 கிராம்
நெய் – 2 ஸ்பூன்

செய்முறை:
பச்சரிசியைக் கழுவி, பால், தண்ணீர் கலந்து குக்கரில் குழைவாக வைத்து குக்கரில் இருந்து எடுத்து வேறொரு பாத்திரத்தில் (அடி கனமான களிம்பு ஏறாத பாத்திரம்) மாற்றி திக்காக உள்ள பாலை விட்டுக் கொதிக்க வைத்து சீனி கலந்து ஏலப்பொடி போட்டு நெய்யில் முந்திரியை வறுத்துப் போட்டு மில்க்மெய்டு அல்லது கண்டென்ஸ்டு மில்க் கலந்து கொதிக்க வைக்கவும்.