கடந்த வாரம் கனடா ஸ்காபுரோ நகரில் அமைந்துள்ள WOODSIDE CINEMA திரையரங்கில் எமது கலைஞர்களின் படைப்பில் உருவான ” டக் டிக் டோஸ்” திரைப்படம் மதியம் 1.00 மணிக்கு பார்வையாளர்களுக்காக திரையிடப்பட்டது. நிகழ்வில் திரையரங்கின் ஆசனங்கள் முழுவதும் பார்வையாளர்களால் நிறைந்து காணப்பட்டது ஈழத்து கலைஞர்களின் படைப்பை ஊக்குவிப்பதற்கான கனடா வாழ் தமிழ் மக்களின் பேராதரவாகும். நிகழ்வில் “புத்திகெட்ட மனிதர் எல்லாம்” படத்தில் சைந்தவி கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்த சிந்துஜா அவர்கள் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு தனது அனுபவங்களை வழங்கியிருந்தார்.

ஈழத்து இளைஞர்களால் தயாரிக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்ற “புத்தி கெட்ட மனிதரெல்லாம்” திரைப்படத்தினை தொடர்ந்து, அந்த படத்தின் இயக்குனர் ராஜ் சிவராஜ் இயக்கத்தில் “டக் டிக் டோஸ்” எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளமையால் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரைப்படம் இலங்கையின் அனைத்து பக்கங்களிலும் உள்ள திரையரங்குகளில் திரைக்கு வருகின்றது.

புத்திகெட்ட மனிதர் எல்லாம்” எனும் ஈழத்து வெற்றிப்பட இயக்குநர் சிவராஜ் அவர்களால் இயக்க அதே பட இசையமைப்பாளர் – பாடலாசிரியர் – பாடகர் பூவன் மதீசன் இசைமைக்க புத்திகெட்ட மனிதர் படத்தில் நடித்த நடிகர்களோடு இன்னும் பலர் இணைந்து நடித்த படம்தான் “டக் டிக் டோஸ்“ திரைப்படம்.
இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெறுகின்றன. அந்தப் பாடல்களில் விசர் பாட்டு முதலாவதாக அரங்கிலே பாடப்பட்டது. ஓ… விசர் பாட்டு.. ஆனா அதன் முதலடி, “அ ஆவன்னா இ.. நான் படப்போறன் கானா!”
ஒரு அருமையான பாடல். இந்த பாடலை பூவன் மதீசன் எழுதியிருந்தார். அவரோடு சேர்ந்து சுபாஷ் பாடியிருந்தார். நல்ல வரிகள், மனதோடு ஒட்டக்கூடிய வகையில் வரிகள் அமைத்திருக்கின்றன. ”என் மனிசி சிங்கிணி நோனா!” போன்ற வரிகளை குறிப்பிடலாம். இந்த பாடல் 4.29 நிமிடங்களை கொண்டிருக்கிறது.
அடுத்து ”தேடிக்கொண்ட வாழ்வில்..” எனும் பாடல். அழகிய காதல் மெலோடி என்று கூறலாம். அந்த பாடலில் காதல் பற்றி முளு சாந்தகுமார் சிறப்பாக எழுதியிருக்கிறார். அனுபவம் எல்லாம் சேர்த்து இக்காலத்துக்கு ஏற்ப எழுதி இருக்கிறார். காதலி, காதல் மனைவி எப்படி இருக்கணும் என்றும் இந்த பாடலை கேட்டால் தெரியும். காதலனும் கூட.
இந்த பாடலை வெற்றி சிந்துஜன் மற்றும் தரங்கினி ஆகியோர் பூவன் மதீசனின் இசையமைப்பில் பாடியிருந்தார்கள். ”வாடி நிற்கும் போது வரமாய் என்னை தாங்கியது
கூடி நீ வருகையில கவலை குறைய பார்க்குது” இந்த பாடல் 3.54 நிமிடங்களாக இருக்கிறது. ஆழமான வரிகள். ஒரு முறை hநயனளநவ அணிந்து கேட்டால் நிச்சயம் வாய் இந்த பாடலை முணு முணுக்கும்.
”நாங்க நாங்க தான்..” எனும் ஒரு கெத்தான பாடலை இன்றைய இளைஞர்களின் கெத்துக்கு ஏற்ப உமாகரன் இரசையா, பூவன் மதீசன், சுஜித் ஜீ ஆகியோர் இணைந்து எழுதி பூவன் மதீசன், சுஜித் ஜீ ஆகியோர் பாடியிருந்தார்கள். “வட்டி மணியம் அம்பிட்டா கும்பிட்டாலும் விடமாட்டம்” எனும் வரிகள் மிக அருமை. இந்த பாடல் 3.33 நிமிடங்களுக்குள் பலவற்றை சொல்லிவிடுகிறது.
அகம் பேசும் என்னால் புறத்தில் உள்ள புரட்சி பாடலும் முடியும் என்று ”திசையே இல்லாத..” எனும் பாடலை சாந்தகுமார் சொற்களை கோர்த்து வரிகளாக்கி கொடுக்க அந்த பாடலுக்கு குரல் வழங்கி இருக்கிறார் நல்லூரான் வரவு பாடல் புகழ் விஸ்வ பிரசன்ன சிவாச்சாரியார்.

“திசையே இல்லாத தீவிது”
“தெரிவில் நிற்கும் தேர் கோவில் வந்து சேரும்?”
“திரும்பி கிடைக்க மனம் ஏங்குதே”
வியப்பான வரிகள். சாந்தகுமாருக்கு புகழ் தேடக்கூடிய பாடல். 1.55 நிமிடம் தான் அவ்வளவும் உணர்வை தட்டிவிட்டிருக்கின்றன.
டக் டிக் டோஸ் எனும் படத்தில் டக் டிக் டோஸ் எனும் பாடலும் தந்து இடத்தை பிடித்திருக்கிறது. இந்த பாடலை பிரதீப் விஜயமாலா தானே எழுதிப் பாடியிருக்கிறார்.
“உயிரை எடுக்க வந்தாய்,
” எலிகள் பூனைக்கு பொறிவைச்சு
யாரென்று கேட்காத கடை இது”
3.18 நிமிடத்தினுள் பல உவமான உவமேயங்களோடு உள்ளுறை சார்ந்து சொல்லியிருக்கிறது இந்த பாடல்
இந்த இசைப்பாடல்கள் பூவன் மதீசன் தொடர்பான பார்வையை மாற்றியிருக்கிறது. மாறியிருக்கிறார். பாடகர்கள், பாடலாசிரியர்கள் என எல்லோருக்கும் பெயர் சொல்லும் பாடல்கள்.
மதீசனுக்கு இது ஒரு புது அத்தியாம். அவர் தனித்துவமாகியிருக்கிறார். யாரோடும் அவரை ஒப்பீடு செய்ய தேவையில்லை. வாழ்த்துகள் மதீசன்.
இந்த பாடல் வெளியீட்டை தொலைக்காட்சி பிரபலங்கள், வலையொளி பிரபலங்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள், கிழக்கு மாகாண நடன குழுக்கள், இசையமைப்பாளர்கள் என பலர் சிறப்பாக்கி இருந்தனர்.
அரசியல்வாதிகள், கவிஞர்கள், ஊடகவியலாளர்கள், பிரபலங்கள் என அரங்கு நிறைந்த பார்வையாளர்கள் மத்தியில் இந்த பாடல்கள் வெளியீடு செய்யப்பட்டன.
இந்த பாடல்கள் TRM PICTURES எனும் வலையொலி பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.

நன்றி: குவியம்