தமிழ்பேசும் நல்லுலகத்தின் புகழ்பூத்த பெரும் தமிழ் அறிவிப்பாளர் திரு வி.என்மதியழகன் அவர்களின் “சொற்கோ வி.என்.மதிஅழகன்- தமிழ் ஒலிபரப்பில் பொற்காலப்பதிவு ” நூல் அறிமுக விழா கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவில் ஸ்காபறோ நகரசபை மண்டபத்தில் இணையத்தின்
தலைவர் அகணி சுரேஸ் அவர்களின் தலைமையில் இருபத்திமூன்றாம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 01:30 மணிக்கு தமிழர்களால் நிறைந்து வழிந்த ஒன்றாக வெற்றிகரமாக
நடைபெற்றது.

கனடாவில் வாழும் தமிழர்கள் மத்தியில் உள்ள ஊடகவியலாளர்கள். நடன
இசை ஆசிரிய ஆசிரியைகள் கலை இலக்கிய நண்பர்கள். கல்வியாளர்கள்.
பேராசிரியர்கள் நண்பர் மானிப்பாய் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள்
வர்த்தகப் பெருமக்கள் உட்பட 500க்கும் அதிகமான பார்வையாளர்கள்
மண்டபத்தை நிறைத்த வண்ணம் அமர்ந்திருக்க பாராட்டுரைகள் மற்றும்
சிறப்புரைகள் ஆகியன இடம்பெற்றன