ஈழத்து வள நாடு
இனிய நல்ல நாடு
பாலும் தேனும் நிறைந்த
பழைய பெரும் நாடு
தேங்காய் மாங்காய் பலாக்காய்
தேவைக் கேற்ற பழங்கள்
வாழை தோடை கமுகு
வளமாய்க் கொண்ட நாடு (ஈழ)
எனது பாட்டன் பாட்டி
இருந்த நல்ல நாடு
இங்கு பேசும் மொழியோ
இனிய தமிழ் மொழிதான் (ஈழ)
தமிழை நாமும் கற்போம்
தமிழைப் பேசி மகிழ்வோம்
தமிழில் பாட்டுப் பாடி
தாயைப் போலக் காப்போம் (ஈழ)