புற்று நோய் (Cancer)
உடல் மெலிதல், களைப்பு என்பன இருக்கும்
வாய்ப்புற்று நோய்: வாயில் மாறாத புண் ஏற்படல்
குரல்வளைப் புற்றுநோய்: குரல் மாறும்
களப்புற்று நோய்: உணவு விழுங்குதல் கடினமாகும், நீராகாரம் எடுக்கலாம், வாந்தி இருக்கும்.
இரப்பை புற்றுநோய்: வயிறு எரிவு, வாந்தி இருக்கும்.

பெருங்குடல் புற்றுநோய்: மலச்சிக்கல், மலத்துடன் குருதி போதல், வயிறு நோ இருக்கும்.
பித்தப்பைப் புற்றுநோய்: கண் மஞ்சளாகும், வயிற்று நோ இருக்கும்.
ஈரல் புற்று நோய்: கண் மஞ்சளாகும், வயிறு வீங்கும்
முன்னிற்கும் சுரப்பி புற்றுநோய்: சிறுநீர் கழித்தலில் தடங்கள், அடிக்கடி கழித்தல், கழித்த பின் மீண்டும் சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வு.
மார்புப் புற்றுநோய்: புதிதாக கட்டிகள் உருவாகும்.
மூளைப் புற்று நோய்: வலிப்பு ஏற்படலாம், உணவு மாற்றங்கள் ஏற்படலாம்
இரத்தப் புற்றுநோய்: நல்லிரத்தம் இராது உடலில் கட்டிகள் ஏற்படும்.

மாரடைப்பு நோய் (Heart Attack)
அசௌகரியமான நெஞ்சுஅழுத்தம், நெஞ்சு நிறைந்த தன்மை, நெஞ்சின் நடுப்பகுதியில் நோ, இறுக்குதல், பிழிதல் போன்ற உணர்வுகள் 5-15 நிமிடங்கள் நீடிக்கும். நோ தோள் மூட்டிற்கும், கை, கழுத்து, முகம் என்பவற்றிற்கும் பரவலாம். நெஞ்சு அசௌகரியமாக இருக்கும். தலைப்பாரமின்மை காணப்படும். மயக்கம் ஏற்படலாம். வியர்த்தல், வாந்திக்குணம், மூச்சுத்திணறல் காணப்படும்.

சலரோகம் (Diabetis Melitus) வகை 11
உடற்பருமன் அதிகரித்தல், கழுத்து, அக்குள் முகம் ஆகிய பகுதிகளில் மேற்றோல் கழலைகள் தோன்றல். மூக்கின் நுனி, கழுத்து, முழங்கை கருமை நிறமாதல், சலம் அடிக்கடி கழித்தல், அதிக தாகம், திடீரென மெலிதல், மயக்கம்.

தொய்வு நோய் (Bronchia / Asthma)
மூச்சுவிடல் கடினம், சத்தத்துடன் சுவாசம், இருமல், நெஞ்சு இறுக்கம் என்பன இருக்கும்.

காசநோய் (Tuberculosis)
மாலைநேரக் காய்ச்சல், தொடர்ச்சியான இருமல், உடல் மெலிதல், இரவு வியர்த்தல், இருமலுடன் இரத்தம் வெளியேறல், உணவில் நாட்டமின்மை.

வயிற்றுப்புண் (Ulcer)
நெஞ்சு எரிவு, உணவு உண்டபின் வயிறு எரிவு இருக்கும், வாந்தி ஏற்படலாம், அதிகாலையில் வயிறு எரிவு இருக்கும்.

உயர் குருதி அழுத்தம் (hypertension)
தலைச்சுற்று, தலையிடி, வாந்தி என்பன இருக்கும் நெஞ்சு படபடப்புக் காணப்படலாம்

ஈரல் அழற்சி (Hepatitis)
கண் மஞ்சள் நிறமாகும். வயிற்றுநோ இருக்கும். காய்ச்சல் ஏற்படும். வாந்தி ஏற்படும் உணவில் நாட்டம் இராது. சலம் மஞ்சள் நிறமாகும்.

இதயம் செயல் குறைதல் (Heart failure)
மூச்செடுத்தல் கடினம், இருமல், தலையணை வைத்து அடுக்கியே நித்திரை செய்தல் வேண்டும். இரு கால்களும் வீங்கும், களைப்பு என்பன இருக்கும். நெஞ்சுநோ இருக்கும்.

குமட்டல் (Nausea)
சத்தி எடுப்பதற்கான உணர்வு, அதிக உமிழ்நீர் சுரக்கும்.

வயிற்றுப் பிரட்டல் (Retching)
சக்தி எடுப்பதற்கான தன்னிச்சையான முயற்சி.

வாந்தி – உணவு வெளியேற்றப்படல்
வாந்தி ஏற்படுவதற்கான காரணங்கள்.
தொற்றுநோய்கள் மூளையில் உள்ள அமுக்கம் கூடல், கபாலக்குத்து, சலரோகம்,
மருந்துகள், மகப்பேறு, மதுப்பாவனை, உளவியல் காரணம்;

வயிற்றோட்டம்
பக்றீரியாத்தொற்றலில் சீதம், இரத்தம் செல்லும்.
வைரசு தொற்றலில், சீதம், நீர் அதிகம். 
கொலராவில், கஞ்சி போன்று அமையும்.

வகைப்படுத்தப்பட்ட பகுதி: மருத்துவம்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: October 15, 2014