(இளைப்பாறிய HNB அலுவலர்)


அன்னையின் மடியில் 03-06-1956
ஆண்டவன் அடியில் 26-07-2024

சங்கரத்தை, வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வாழ்விடமாகவும் கொண்ட பாலரூபன் சகுந்தலா அவர்கள் 26-07-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான திரு.திருமதி அ.க.வேலுப்பிள்ளை பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,

கரம்பனைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு.திருமதி பாலசுப்பிரமணியம், சதாரூபவதி தம்பதிகளின் அன்பு மருகளும்,

பாலரூபன் (இளைப்பாறிய HNB கடன் பகுதி முகாமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி கேசவன் மனுவித்தியா, திருமதி பாலவினோதன் ரதிப்பிரியா, கௌரிநந்தன் ஆகியோரின் பாசமுள்ள தாயாரும்,

ஆர்யா, ஆரபி, ஆதிரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற சண்முகநாதன் மற்றும் சரோஜினிதேவி, கனகசுந்தரம், விக்னராஜா, சரஸ்வதி, சிறீதரன், காலஞ்சென்ற சதானந்தன், காலஞ்சென்ற யோகேஸ்வரி மற்றும் வசந்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 27-07-2024 சனிக்கிழமை காலை 9:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 28-07-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிக்கு கிரியைகள் நடைபெற்று 11:30 மணிக்கு தகனக் கிரியைகளுக்காக கல்கிசை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
தொலைபேசி இல: 0777587144

“உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது”
 

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் “கரம்பொன் நெட்” இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.