நயாகரா நீர் வீழ்ச்சி
        நாடுவோர் கண்காட்சி
        வெண்பனி வீழ்வதுபோல்
        வீழ்ந்திடும் நீரலைகள்

        விசிறியே தண்ணீரால்
        விளையாட்டாய் நனைத்துவிடும்
        ஓடத்தில் போவோரங்கே
        ஓடவே முடியாதப்பா

        நயாகரா நீர் வீழ்ச்சி
        நமக்கெல்லாம் கண்காட்சி
        சளசளெனச் சொரிந்து வந்து
        சளைக்காது ஓடி விழும்