Abishekah Anne Benedict
1995-2025

அணைந்த ஒரு ஒளிக்கான
அழகிய விளக்கம் உன் மறைவு
விரைந்து விடிந்த விடியல் நீ
ஏன் இவ்வளவு வேகமாக மங்கினாய்

கடந்த காலத்தில் மறைக்கப்பட்ட
உன் பிரகாச வாழ்க்கை
சிரிப்பு நின்றுவிட முழுமையடையாமல் போய்விட்ட நம் கனவுகள்

ஒரு பாடல் தேய்ந்தொலித்துப் போனது
ஒரு தாளம் அதன் துடிப்பை இழந்தது
வாக்குறுதி மங்கிய நிகழ்காலத்தின் மென்மையான ஆண்டுகளில் நம்மனங்கள்

ஏன் என்று எந்த கேள்வியும் இல்லை
எந்தக் கெஞ்சலும் உன்னைத்
தங்க வைக்கவும் முடியவில்லை
நட்சத்திரங்கள் உன்னைத் திருடியதுமேன்

துக்கமும் ஏக்கமும் சந்திக்கும்
அமைதியில் உன் ஆன்மா
நீடித்து நிற்கிறது ஒவ்வொரு
பூவிலும் ஒவ்வொரு தங்கக் கதிரிலும்

நீ விட்டுச் சென்ற அன்பை நாங்கள் சுமக்கிறோம் இன்னும் அது அப்படியே கண்ணீர் மற்றும் வலிக்கு அப்பால்
அன்பான இதயமாய் காலம் நகர்ந்தாலும்
நீ இன்னமும் இங்கேதான்

ஆகவே இப்பொழுது ஓய்வெடு
முப்பது ஆண்டுகள் அல்ல எங்கள் பெருமூச்சுகளின் வாழ்நாள் முழுவதும்
மறைந்தாலும் என்றும் நீ மறைவதில்லை🙏

ஓம்சாந்தி🙏