இன்று 20-05-2025 செவ்வாய்கிழமை தனது நூறாவது ஆண்டு பிறந்த நாளை உற்றார் உறவினர்னளுடன் கொழும்பில் கொண்டாடும் தென் கரம்பொனைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் வினாசித்தம்பி செல்வநாயகம் அவர்களை இன்னும் பல ஆண்டுகள் நீண்ட ஆயுளோடு நலமாக வாழ கரம்பொன்.நெட் இணையத்தளத்தின் சார்பில் வாழ்த்துகின்றோம்.

ஒரு நூற்றாண்டின் ஆச்சரியம்
கரம்பொன் தந்த உழைப்பின் உயரம்
மாற்றத்தின் காற்றை உள்வாங்கி
இளம்பருவத்தில் இடம்பெயர்ந்து
தொட்டதோ வாழ்க்கைச் சிகரம்…

கனவுகள் மறைக்கப்பட்ட ஒரு
கடலோரக் கிராமத்தின்
சொல்லப்படாத கதைகளுடன்
தங்கத் தெருக்களாலான நகரில்
வியர்வையும் தொலைநோக்குப் பார்வையுமாய்
செதுக்கிய வாழ்க்கை…

செல்வத்திற்காக மட்டுமன்றி
சுற்றம் உறவுகளுக்காய்
மகனாய் சகோதரனாய்
கணவனாய் தந்தையாய் பேரனாய்
அலைகள் அடித்தாலும் புன்னகையுடன்
ஆழமாய் ஊறி நிற்கும் உங்கள் வேர்கள்…

ஒரு நூற்றாண்டைத் தொட்டு விட்டீர்கள்
ஒரு ஆச்சரியத்திற்கு வயது நூறு
வினாசித்தம்பி செல்வநாயகம் என்னும்
எங்கள் முகவரியான நீங்கள்
நீண்டு நெடுங்காலம் வாழ
வாழ்த்தி வணங்குகிறோம்…