பழங்களும் காய்கறியும்
பல கதைகள் சொல்லும்
பட்டகதை தொட்டகதை
பலருடனே நெரிந்தகதை
பெட்டிகளில் அடைபட்டுப்
பேரவலப் பட்ட கதை
கெனியாவில் வாழ்வெடுத்துக்
கென்ரனுக்கு வந்த கதை
இந்திய மண்ணில்
எழிலாய் வளர்ந்தகதை
இத்தாலிய நாட்டில்
இனப்பெருக்கம் செய்தகதை
இஸ்ரவேல் நாட்டில்
இன்பழமாய் முதிர்ந்த கதை
பார்வைக்கும் பல்லிற்கும்
பக்குவமாய் ருசிக்கும் கதை
தேன் சொரியும் தின்பழங்கள்
தினைப்பான காய்கறிகள்
கதை சொல்லி முடிப்பதற்குள்
கலரிகளாய் மாறிவிடும்.