அன்னையின் மடியில் 30-04-1952 ஆண்டவன் அடியில் 11-08-2025

ஊர்காவற்றுறை கம்பொன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியின் தலைநகர் பேர்லினை நீண்டகால வதிவிடமாகவும் கொண்ட திரு. முத்துக்குமார் நாகரட்ணராஜா(நவம்) அவர்கள் 11-08-2025 திங்கட்கிழமையன்று இறைபதமடைந்தார்

அன்னார் காலஞ்சென்றவர்களான முத்துக்குமார் அகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் புவனேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

நந்தினி அவர்களின் ஆருயிர் கணவரும்,

துர்க்காதேவி, நிவேதா ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,

அன்னலட்சுமி(பேபி) திருகோணமலை, காலஞ்சென்ற சுந்தரவல்லி(ராணி), சிவராஜா(சிவம்) பிரான்ஸ் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான பேரம்பலம், தில்லையம்பலம் மற்றும் பரிமளா(பிரான்ஸ், மாலினி(கனடா), காலஞ்சென்ற வாகினி மற்றும் தியாகினி(வவுனியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான யோகநாதன், சத்த்pயநாதன் மற்றும் சிவபாலன்(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

RIP BOOK ஊடாக இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்;.

கிரியை திகதி: வியாழக்கிழமை 21-08-2025, 11:00 மு.ப — 14:00 பி.ப
முகவரி: Felerhallen Krematorium Berlin, Kiefholzstraße-221, 12347 Berlin

தகவல்: குடும்பத்ததினர்
தொடர்புகளுக்கு

நந்தினி (மனைவி) ஜேர்மனி
சிவம் (சகேகாதரர்)பிரான்ஸ் — 033(0)652596699 கண்ணன் — 0049(0)17684414562

கரம்பொன் மக்களின் கண்ணீர் அஞ்சலி

ஓம் நமசிவாய 🙏🏽
அமரர் முத்துக்குமார் நாகரத்தினராஜா- ( நவம் ) அவர்களுக்கு கரம்பன் மக்கள் சார்பாக எங்களது கண்ணீர் அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஊ்ர்காவற்றுறை பிரதேசத்தில் , கரம்பொன் என்னும் கிராமத்தில் முத்துக்குமார் , மகேஸ்வரி தம்பதிகளின் நான்கு பிள்ளைகளில் மூன்றாவது பிள்ளையாகவும், மூத்த புத்திரனாகவும் பிறந்தவர்தான் நவம் அண்ணா,

இவர்கள் குடும்பத்தின் குல தெய்வமாக வைரவரை வழிபட்டு வாழ்ந்து வந்தார்கள், சுற்றுப்புறமாக உள்ள சிவன் , அம்மன், முருகன் கோவில்கள், மற்றும் நயினை நாகம்மாள் என தங்கள் ஆன்மீக வாழ்வை பக்திமார்க்க வழியில் வாழ்ந்துவந்தார்கள், நவம் அண்ணா பெற்றோரின் வழியில் வெளிநாட்டு வாழ்விலும் தனது மனைவி மக்களுடன் இறைவழிபாட்டை பக்திபூர்வமாக, சமூகசேவைகளுடன் தொடர்ந்தார்.
பேளின் முருகன் கோவிலில் அங்கத்தவராக இருந்து வந்தார்.

இவர் வஞ்சகம் சூது வாது அறியாதவர், நல் உள்ளம் கொண்டவர் என இவரின் மலர்ந்த புன்னகையே கூறும்.

நவம் அண்ணா நவம் மாமா என அன்பால் அழைக்கப்பட்டார்.
இவர் நண்பர்கள் , உறவினர்கள் , சிறியவர்கள் , பெரியவர்கள் மட்டுமல்ல ஜெர்மனியில் வாழும் அனைத்து இன மக்களுடனும் சகஜமாக அன்பாக எல்லோரையும் அரவணைத்து வாழ்ந்து வந்தார். இதை நாங்கள் இவரின் இழப்பில் கண்கூடாக பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. இலங்கையில் உள்நாட்டு யுத்தகாலத்தில் பல அச்சுறுத்தல்களை சந்தித்த இவர் ‘யாமிருக்க பயம் ஏன்’ எனக்கிணங்க தனது குலதெய்வ வைரவரிடம் சென்று வைரவர் வழிபாட்டை நடத்தி வந்தது மாத்திரமின்றி வைரவர் கோவிலின் சிறு கட்டட திருத்தங்களையும் பரும்படியாக கவனித்து வந்தார் , போர்முடிந்த பின் 2016 ஆண்டில் கரம்பொன் சென்று தனது முயற்சியால் குலதெய்வத்தின் திருப்பணி வேலைகளை கரம்பொன் மக்களுடன் இணைந்து நடாத்தி , அதன்பின் 2018ம் ஆண்டில் கரம்பொன் மக்களுடன் சேர்ந்து குலதெய்வ வைரவருக்கு கும்பாபிஷேகத்தையும், சங்காபிஷேகத்தையும் நிறைவாக நடத்தி ஞானவைரவருக்கு மீண்டும் ஒளியேற்றி வைத்தார்.🔥

கும்பாபிஷேகத்தின் போது பைரவரே தனது திரிசூலத்தை இவரின் கையில் கொடுத்து மூலஸ்தானத்தில் பிரதிஷ்டைக்காக வைக்குப்படி கேட்டுக் கொண்ட மாத்திரம் இன்றி இவரின் மார்பில் அணிந்த தங்கத்தால் கட்டிய உருத்திராட்ச பதக்கத்தையும் பறித்து தனது திரிசூலத்தின் அடிப்பாகத்தில் நிரந்தரமாக ஆக்கி கொண்டார்.

மக்கள் சேவையே மகேஸ்வரன் சேவை எனக்கமைய அவர் தனது பிறந்த ஊரின் பணியை கரம்பொன் சீரடி சாய்பாபா தொண்டர் சேவையின் அங்கத்தவராக முன்நின்று கடைசிவரை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். 2023 ம் ஆண்டு கரம்பொன் ஶ்ரீ பொன்சாயின் கும்பாபிஷேகத்தையும் முறைப்படி செய்தார் , 2024ம் ஆண்டு ‘ஶ்ரீ சாயி ஸ்ரோர்’ கடையின் திறப்புவிழாவையும் நடத்தினார். தனது பெற்றோர்கள் கட்டிய கரம்பொன் இல்லத்தையும் ‘ சாயி வாஸம் ‘ என பெயரிட்டு ஶ்ரீ பொன்சாயி அறக்கட்டளைக்கு அர்ப்பணித்த மாமனிதராவார்.

கடந்த ஆண்டு 2024 இல் ஊர்காவற்றுறை கணபதீஸ்வரர் சிவன் கோவிலின் திருப்பணிக்காக தன்னாலான உதவிகளை செய்த இவரை, சிவனே எதிர்பாராதவிதமாக கும்பாபிஷேகத்திற்கு அழைத்தார், சிவனின் அழைப்பையேற்று , தண்ணீர் பந்தல் அமைத்து பக்தர்களின் தாகத்தை தீர்த்த புண்ணியவான் .

இவரின் ஆன்மீக வாழ்வையும் உண்மையான பக்தியையும் சோதிக்குமுகமாக சிவனாகிய குலதெய்வ வைரவர் தனது திருவிளையாடல்களின் மூலம் இவரை சிலகாலங்கள் தடுத்தாட்கொண்டார் .

எல்லாம் அறிந்த சிவனாகிய வைரவர் பெருமான் இவரின் பூவுலக வாழ்வின் காலத்தையும் அறியாமலா இருந்திருப்பார்? எனவே இவரை ஆட்கொள்ளும் விதமாக, 2024 ம் ஆண்டு வைரவர் தனது வருடாந்த உற்சவத்தின் விசேடமான பத்தாம் திருவிழாவன்று தன்னை இவர் வெறும் பாதத்தைடன் கல்லும் முள்ளும் குற்ற சுமந்து திருவீதி உலா வரவேண்டும் என ஆணையிட்டு நாயன்மார்கள் போலவே இவரையும் ஆட்கொண்டு அருள்பாலித்தார்.

இதனால் மனமுருகி மெய்மறந்த நவம் அண்ணா, வைரவர்க்கு பெயர் பொறிக்கப்பட்ட குற்றுவிளக்கை அன்பாக பரிசளித்து வைரவரை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார் 🙏🏽
குருவழிபாட்டாலும் புதுமையான ஶ்ரீ பொன்சாயியின் லீலைகளையும் தனது அநுபவங்களையும் தனது கடைசிகாலத்தில் மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டார்!

இவரின் இழப்பால் கரம்பொன் மக்கள் அனைவரும் கவலையில் ஆழ்ந்துள்ளோம்
எனினும் இறைவனுடன் இரண்டறக்கலக்க வேண்டி பிரார்த்தனை செய்வோமாக!
ஓம் நமசிவாய 🙏🏽
ஒம் சாந்தி 🪔🙏🏽

——————————————————————————————————————–

உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது
பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது”
 

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் “கரம்பொன் நெட்” இணையத்தளத்தின் மூலம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.