வற்றாத நீருற்று
        வரட்சி இல்லாப் பூஞ்சோலை
        தென்றல் விளையாடும்
        தென்னை மரத்தோட்டம்
        வாழை இளஞ்சோலை
        வளமுள்ள மாங்காடு
        முந்திரிகைப் பந்தல்
        முதிர்ந்த பழக்குலைகள்

        தலைசாய்க்கும் நெற்கதிர்கள்
        தண்ணளி சேர்நற்குரல்கள்
        பால் சொரியும் பசுவினங்கள்
        பண்புள்ள மனிதஇனம்
        அன்பைத் தழுவிவரும்
        அசையாத மன உறுதி
        ஊக்கம் உயர் நினைவு
        உள்ளத்தில் உண்மைநெறி
        இவையாவும் உண்டாயின்
        இவ்வுலகம் பொன்னுலகம்.