மதுவுண்டு மயங்குகின்ற தேனீயாகும்
        மதுவையே சுவைக்காத ஈயுமாகும்

        பாடியே பறக்கின்ற குயிலுமாகும்
        பாடாது வட்டமிடும் பருந்துமாகும்

        மழையினையே பொழிகின்ற முகிலுமாகும்
        மக்கள் தமை வாட்டுகின்ற வெப்பமாகும்

        பற்றைதனில் ஒளிக்கின்ற முயலுமாகும் 
        பயமின்றித் தாவி வரும் சிங்கமாகும்

        மலர்ந்து நின்று மணம் வீசும் புட்பமாகும்
        மணமில்லாப் பாவைவனப் ப+வுமாகும்

        தாவியே படருகின்ற கொடியுமாகும்
        தங்கி ஓரிடத்திருக்கும் பாறையாகும்

        மகிழ்வுடனே சிரித்து நிற்கும் குழந்தையாகும்
        மனமுடைந்து சினந்து நிற்கும் மங்கையாகும்

        வட்டத்துள் ஓடுகின்ற குதிரையாகும்
        வானத்தில் பறக்கின்ற சிட்டுமாகும்

        ஓங்கி உயர்ந்த மலை உச்சியாகும்
        உள்ளாழம் காணாத மடுவுமாகும்

        கட்டின்றிப் புரண்டு வரும் காட்டாறாகும்
        கடைசியிலே கவிசிந்தும் கவியேயாகும்.