கடந்த சனிக்கிழமை 27-09-2025 அன்று தமிழிசைக் கலாமன்ற மண்டபத்தில். கனடா ஸ்காபுறோ- Villa Karuna Home for Seniors அமைப்பு நடத்திய Golden Super Singer Season 7 பாடல் போட்டியின் இறுதிச் சுற்றில் ஸ்காபுறோவை வதிவிடமாகக் கொண்ட பாடகர் குகதாசன் சோமசுந்தரம் அவர்கள் முதலிடம் பெற்று வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார்.

Villa Karuna Home for Seniors அமைப்பின் நிறுவனரும் தலைவருமான இந்திராணி நாகேந்திரம் அவர்கள் தலைமையில் இந்த போட்டி நிகழ்ச்சி சிலமாதங்களாக தேர்வுப் போட்டிகள் நடைபெற்று பின்னர் இறுதிச் சுற்றுப் போட்டி 27ம் திகதி அன்றைய தினம் நடைபெற்றது.