ஆழக் கடலின் அலையோசை
        அன்பு தெறிக்கும் மணியோசை
        அம்மையின் அற்புத அருளோசை
        அமைதி நாடும் அடியோசை
        அன்பர் தம் காலின் தனியோசை
        அன்னையின் நிழலில் ஆறுதலை
        அடைந்து நிற்பவர் பேறுகளை
        எண்ணிட நாமும் முடியாது
        ஏற்றுவோம் வேளாங்கணித்தாயை.