கரம்பொனூர் மக்களின் ஒன்றுகூடல் முதலாவது வைபவமாக இருந்த போதிலும் எதிர்பார்த்ததை விட வெகு சிறப்பாக  நடைபெற்றது. இதனால் இதனை ஏற்பாடு செய்த கரம்பொன் சண்முகநாத மகாவித்தியாசாலை பழைய மாணவர் சங்கத்தினர் மாத்திரமன்றி இதில் கலந்து கொண்ட அனைவருமே பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.

சண்முகநாத மகா வித்தியாசாலையின் முன்னாள் அதிபர்களான திரு.திருநாவுக்கரசு, திரு.நடராசா (ப.மா.சங்கத் தலைவர்) ஆகியோரும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மோர்னிங் சைட் பார்க்கில் நடைபெற்ற இவ்வைபவத்தில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டிகளுள் கயிறிழுத்தல் போட்டியும், முட்டி அடித்தல் போட்டியும் மிக சுவராஸ்யமாக இருந்தன. பெரும்பாலானோர் வெவ்வேறு வகையான உணவுகளையும், குளிர்பானங்களையும் தாராளமாகக் கொண்டு வந்திருந்ததினால் எதுவித குறைபாடுகளும் இன்றி ஒன்றுகூடல் பெரும் மகிழ்வினை ஏற்படுத்தியது.

போட்டிகளில் வெற்றியீட்டிப் பரிசில்களைப் பெற்றுக் கொண்ட சிறுவர்கள் மாத்திரமன்றி பெரியோர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

[Best_Wordpress_Gallery id=”7″ gal_title=”gallery4″]