கனடா உதயன் விருது பெற்ற வவுனியூர் இரா. உதயணன்

கனடாவில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை நடத்தும் உதயன் சர்வதேச விருது விழா சென்ற சனிக்கிழமை 6-6-2026 அன்று ரொறன்ரோவில் நகெட் அவென்யூவில் உள்ள எஸ்டேட் பாங்குவிற் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து வருகை தந்த மனோ கணேசன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.


கனடா – மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கலைவிழா

கனடா மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் 37 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக நடந்த கலைவிழா நிகழ்ச்சி – 2026 சென்ற சனிக்கிழமை 1355 ஹார்வுட் அவென்யூ வடக்கு, ஏஜாக்ஸ், ஜே. கிளார்க் ரிச்சர்ட்சன் கல்லூரி கலையரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் காப்பாளர்களில் ஒருவரான திரு. சிவதாசன், திருமதி சிவதாசன் ஆகியோர் பிரதம அதிதியாகக் கலந்து நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.


சண்டிலிப்பாயின் கலைச்சங்கமம் – 2026

கனடாவில் உள்ள சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தின் கலைச்சங்கமம் – 2026 ஆண்டு விழாவும் மற்றும் இரவு விருந்தும் சென்ற சனிக்கிழமை 2300, ரொறன்ரோ லோறன்ஸ் வீதியில் உள்ள ‘வயிட்சீல்ட் விருந்தினர் மண்டபத்தில்’ சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அவுஸ்ரேலியாவில் இருந்து வருகை தந்திருந்த சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்ட வாசுகிதேவி மகாதேவன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.


யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி கனடா பழைய மாணவர் சங்கத்தின் Annual Gala Dinner-2026

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி கனடா பழைய மாணவர் சங்கத்தின் Annual Gala Dinner-2026
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி கனடா பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த இராப்போசன ஒன்று கூடல் விழா (Annual Gala Dinner-2026) ஸ்காபுரோவில் அமைந்துள்ள கொன்வென்சன் விழா மண்டபத்தில் 04-25-2026 சனிக்கிழமை மாலை 6:00 மணிக்கு நடைபெற்றது.


கனடா – ரொறன்ரோவில் கவிஞர் அகணி சுரேஸ் அவர்களின் நூல்கள் வெளியீட்டு விழா!

சென்ற ஞாயிற்றுக்கிழமை 12-4-2026 கனடாவில் ரொறன்ரோவில் உள்ள ஸ்காபரோ சிவிக் சென்ரர் மண்டபத்தில் பண்டிதர் ம.செ. அலெக்ஸாந்தர் அரங்கில் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம், கனடா கவிஞர் கழகம் ஆகியவற்றின் முன்னாள் தலைவரான கவிஞர் அகணி சுரேஸ் அவர்களின் நூல்கள் வெளியீட்டு நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை குமரகுரு கணபதிப்பிள்ளை,ஜோதி ஜெயகுமார் ஆகியோர் கொண்டு நடத்தினர்.முதலில் மங்கல விளக்கேற்றல்,கனடாப் பண், தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து அகவணக்கம் இடம் பெற்றது. தொடர்ந்து ‘அகணிவிருதுகள்’ அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு, சயனிகா சுரேஸ் அவர்களின் தலைமையுரை இடம் பெற்றது.


13வது ஆண்டு விழாவும், விருதுகள் வழங்கும் விழாவும் “வர்த்தக தீபம் -2025”

இவ்வருடத்தின் இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கம் கனடா நடத்திய தனது 13வது ஆண்டு விழா கடந்த சனிக்கிழமை 27-12-2025 அன்று கனடா ஸ்காபுறோ கொன்வென்சன் விழா மண்டபத்தில் நடைபெற்றது. விருதுகள் வழங்குவதினூடாக சமூக நோக்கம் கொண்ட தனது பாதையில் தொடர்ந்தும் செயற்படுவதை கண்கூடாக காண முடிந்தது என்ற திருப்தியும் விழாவில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் தோன்றியது.


பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 100வது ஜெயந்தி தினம்

கனடா மார்க்கம் மற்றும் ஸ்காபுறோ சத்ய சாயி நிலையத்தினர் கொண்டாடிய பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 100வது ஜெயந்தி தினம் இன்று நவம்பர் 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலையும், மாலையும் 5321 Fich Ave East இல் அமைந்துள்ள Sri Sathya Sai Mandir இல் பக்தி பூர்வமாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்வில் ஆன்மீகவுரை, பஜனைகளுடன் ஊஞ்சல் மற்றும் மங்கள ஆரத்தியும் இடம்பெற்றன. அத்துடன் பக்தர்களுக்கு பிரசாதத்துடன் உணவும் வழங்கப்பட்டது.


கனடாவில் க.பாலேந்திராவின் நூல் அறிமுகமும்,அரங்க நினைவலைகள் நிகழ்வும்!

உலகின் பல பாகங்களில் நாடக நிகழ்வுகளை நடத்தி வரும், லண்டனைத் தளமாகக் கொண்ட தமிழ் நாடக நெறியாளர் க.பாலேந்திராவின் ‘பிரத்தியேகக் காட்சி ஏழு நாடகங்களும் பதிவுகளும’ நூல் அறிமுகமும் அரங்க நினைவலைகள் நிகழ்வும், 02.11.2025 அன்று மாலை 3:00 மணி அளவில் Agincourt Community Centreஇல் நடைபெற்றது. கனடாவில் வசிக்கும் எழுத்தாளர் ப.ஸ்ரீஸ்கந்தன் தலைமை வகித்தார்.


Elson Badminton Club நடாத்திய 30வது வருடாந்த Gala 2025!

கனடாவில் இயங்கிவரும் Elson Badminton Club நடாத்திய 31வது வருடாந்த இராப்போசன விருந்து நவம்பர் 1ம் திகதி சனிக்கிழமை மாலை மார்க்கத்தில் அமைந்துள்ள ‘” New Jaasmin Banquet Hall ” மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது.


யாழ் இந்துக்கல்லூரிக் கனடாக் கிளையினரின் கலையரசி விழா-2025

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் கலை மரபுரிமைக் கழக உபகுழு ஒருங்கிணைக்கும் வருடாந்த நிகழ்வான கலையரசி விழா-2025 ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 12, 2025, இல் அமைந்துள்ள Flato Markham Theatre மண்டபம் நிறைந்த பார்வையாளர்களின் மத்தியில் வெகுசிறப்பாக நடைபெற்றது.