உழைப்பால் உயர்ந்த “அன்னை புத்தகசாலை” – செவ்வேள் விஜிதரன்

annai-bookகரம்பொன் சண்முகநாத மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளையின் ஒருங்கிணைப்பாளராக அங்கிருந்து செயற்பட்டு வரும் திரு. செவ்வேள் விஜிதரன் இள வயதில் தனது தாய், தந்தையை இழந்த நிலையில் இளம் பராயத்திலேயே படிப்பை தொடர முடியாமல் குடும்ப சூழ்நிலை காரணமாக யாழ்ப்பாணம் பூபாலசிங்கம் புத்தக சாலையில் முதலில் விற்பனையாளனாக பணியைத் தொடர்ந்தார். பின்னர் தனது கடின உழைப்பாலும், விடாமுயற்சியினாலும் முதலாளியின் அன்பிற்கும், நம்பிக்கைக்கும் பாத்திரமாகி சிறப்பான முறையில் பல வருடங்கள் புத்கசாலையை தனது தலைமையில் திறம்பட நிர்வகித்து வந்தார்.


சைவசித்தாந்த மெய்யியல் அறிவு நிறைந்த சபாரத்தினத்துக்கு பல்கலைக்கழகம் கௌரவ முதுமாணிப் பட்டம் வழங்கியுள்ளது.

sabaratnamஆசான் திரு. ஆ சபாரத்தினம் அவர்கள் நாரந்தனையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆறுமுகம், அன்னம்மா அவர்களின் கடைசி மகனாவார். இவரது மூத்த தமக்கையார் கரம்பொன்னில் திருமணம் முடித்திருந்த படியால், இவருக்குக் கரம்பொன் தொடர்பு கல்வி பயிலும் காலத்தில் ஏற்பட்டது. பின்னர் ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் பாடசாலையில் ஆசிரியராக இருந்தமையாலும், கரம்பொன்னில் திருமணம் செய்தமையாலும், சண்முக நாத மகா வித்தியாலயத்தில் அதிபராக இருந்தமையாலும் இவர் கரம்பொன்னிலேயே வாழ்ந்து வந்தார்.


கல்வி அறிவாலும் கண்ணியமான கடின உழைப்பாலும் கட்டுப்பாட்டாளராகி கரம்பனூருக்கு பெருமை சேர்த்த சிவலிங்கம்

sivalingamதென் கரம்பொன் கிராமத்தில் படித்துப் பட்டம் பெற்று அரச பதவிகளில் பணிபுரிந்தோர் அன்றைய கால கட்டத்தில் விரல் விட்டு எண்ணக் கூடிய வெகு சிலரே ஆவர். அவர்களுள் தனது கல்வி அறிவினாலும், கண்ணியமான கடின உழைப்பினாலும் அரச பதவியில் சாதாரண எழுது வினைஞராக இணைந்து படிப்படியாக முன்னேற்ற மடைந்து இலங்கையின் தலைநகரான கொழும்பில் குடியமர்வு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றிய பெருமைக்குரிய திரு.வி.சிவலிங்கமும் ஒருவராவர்.


எழுத்தாளரும் பத்திரிகையாளருமான செல்லத்துரை தெட்சணாமூர்த்தி

thedchanaசிறந்த எழுத்தாளரும் பத்திரிகையாளருமான தெட்சணாமூர்த்தி காவலூர் கரம்பொன் மேற்கு கிராமத்தில் பிறந்தவர். மலாயன் பென்சனியரான திரு.செல்லத்துரை, இரெத்தினம் தம்பதிகளின் ஐந்தாவது மகனான இவர் தனது இருபதாவது வயதிலிருந்தே சிறுகதைகள் எழுத ஆரம்பித்து தற்போதும் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கின்றார்.1983ம் ஆண்டு முதல் கனடாவில் வசித்து வரும் இவர் 2001ம் ஆண்டு 'சுதந்திர மண்'என்ற சிறுகதைத் தொகுதியினை வெளியிட்டிருந்தார்.