கனடா மகாஜனக் கல்லூரி பழைய மாணவர்கள் வருடந்தோறும் கொண்டாடும் நிகழ்வுகளில் கோயில் திருவிழாவும் ஒன்றாகும். ரொறன்ரோவில் உள்ள றிச்மன்ஹில் பிள்ளையார் ஆலயத்தில் சென்ற புதன் கிழமை மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஆதரவில் 12 ஆம் நாள் திருவிழா சிறப்பாக இடம் பெற்றது. இந்த நிகழ்ச்சியில் பழைய மாணவர் சங்கத்தின் நிர்வாகசபை உறுப்பினர்கள், முன்னாள் தலைவர்கள், காப்பாளர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வுகள்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2026
பிறக்கும் புதுவருடம் எல்லா மக்களுக்கும் அன்பையும், நிம்மதியான வாழ்க்கையை வழங்கும ஆண்டாக அமைய இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2026. புதிய வருடம் புதிய கனவுகளின் தொடக்கம். தைரியத்துடன் முன்னேறுங்கள், வெற்றி உங்களைச் சேரும். இந்த இனிமையான நன்னாளை உங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து, மகிழ்ச்சி, ஒற்றுமை, அன்பு இவை அனைத்தோடும் கொண்டாடுங்கள்.
இரங்கல் செய்தி – டாக்டர் தி. ஞானசேகரன்
ஈழத்து மூத்த படைப்பாளியும், இனிய நண்பருமான தி.ஞானசேகரன் அவர்கள் எம்மைவிட்டுப் பிரிந்தது (12-4-26) ஈழத்தமிழ் இலக்கிய உலகிற்குப் பெரும் இழப்பாகும்.
யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவனில் பிறந்த இவர் கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டிருந்தார். ஆயுள்வேத வைத்திய கலாநிதியான இவர், இலங்கையில் இருந்து வெளிவரும் ஞானம் என்ற மாதாந்த இதழின் முதன்மையாசிரியராகப் பணியாற்றினார்.
மருத்துவ பீடத்தை சேர்ந்த நற்குணம் அபிராமி என்ற மாணவி 8 தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவானது ஆரம்பமாகியுள்ளது.
இன்றையதினம் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தை சேர்ந்த நற்குணம் அபிராமி என்ற மாணவி 8 தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
யாழ்.பல்கலைக்கழக வரலாற்றில் மருத்துவ பீடத்திலிருந்து ஒருவரே எட்டு தங்க பதங்கங்களை பெற்ற இந்த விடயமானது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
நல்லூர் கந்தசாமி கோவில் தேர் திருவிழா 2025
கடந்த மாதம் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறுகிறது. 20ஆம் திகதி புதன்கிழமை சப்பரத் திருவிழாவும்இ 21ஆம் திகதி வியாழக்கிழமை தேர் திருவிழாவும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை தீர்த்தத் திருவிழாவும் நடைபெற்றுள்ளது.
நயினை நாகபூசணி அம்பாள் இரதோற்சவம்!
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் – நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய தேர்திருவிழா, ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ புதன்கிழமை 9ஆம் திகதி நடைபெற்றுள்ளது. நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த மாதம் 26ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான ஆரோக்கியமான பாடசாலைக்கான விருதினை பெற்றது யாழ் இந்து.
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பங்கேற்ற 8,000க்கும் மேற்பட்ட பாடசாலைகளில், Active Lifestyle பிரிவில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி முதலிடத்தைப் பெற்றுள்ளது!
விருது வழங்கும் விழா ஜூலை 3, 2025 அன்று வியட்நாமின் டனாங்கில் உள்ள Pullman Beach Resort இல் நடைபெற்றது.
முன்னதாக, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி இலங்கையின் ஆரோக்கியமான பாடசாலையாக தெரிவு செய்யப்பட்டு ஆசிய-பசிபிக் பிராந்திய போட்டியில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் இரதோற்சவம்!
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவம் அலைதிரளான பக்தர்களுக்கு மத்தியில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா கடந்த 9 ஆம் திகதி காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது
அந்தவகையில், நல்லூர் கந்தனின் மகோற்சவ பெருவிழாவின் 23ஆம் நாளான நேற்றையதினம் (31) மாலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து பாரம்பரிய பறை முழங்க முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினரான கரம்பொனைச் சேர்ந்த‘தமிழ்மகள்’ உமா குமரன்!
உலகத்தமிழர்கள் தமிழராய் பெருமை!
பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போ நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார் உமா குமரன். இவர் கரம்பொன் சுருவில் வீதியைப் பிறப்பிடமாகக் கொண்ட பாலசிங்கம் கமலாம்பிகை தம்பதிகளின் பேத்தியாவார். இவர் லேபர் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அந்த கட்சி பிரிட்டனில் சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கிறது.
அவர் போட்டியிட்ட தொகுதியில் மொத்தம் 54.18 சதவீத வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர். அதில் 19,415 வாக்குகளை உமா குமரன் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
கரம்பொன் ஸ்ரீ பொன் சாயி “இராம நவமி”மகா உற்சவம் – வீதி உலா 2024
கரம்பொன் சீரடி சாயி இல்லத்தில் இராம நவமி (பாபாவின் அவதார நாள்) இன்று 19-04-2024 வெள்ளிக்கிழமை இரவு கரம்பொன் திரு வீதி ஊர்வலமும் பூசை வழிபாடும் சிறப்பாக நடைபெற்றன. பக்தர்கள் கூடி சந்தோஷமாக இந்நிகழ்வை பக்தி பூர்வமாக கொண்டாடி மகிழ்ந்தார்கள். கரம்பொன் கிராமத்தின் முன்னேற்றத்திற்காக பல அரிய பணிகளைச் செய்து வரும்; ” ஸ்ரீபொன் சாயி” குழுமத்தினரையும் அத்துடன் இந்நிகழ்வை அழகுற வீடியோ ஒளிப்பதிவு செய்த “ஓம்” தொலைக்காட்சி அமைப்பினரையும் “கரம்பொன்.நெற்” இணையத்தளம் மூலம் உளமாரப் பாராட்டி நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.










