கரம்பொன் ஸ்ரீ பொன் சாயி “இராம நவமி”மகா உற்சவம் – வீதி உலா 2024

கரம்பொன் சீரடி சாயி இல்லத்தில் இராம நவமி (பாபாவின் அவதார நாள்) இன்று 19-04-2024 வெள்ளிக்கிழமை இரவு கரம்பொன் திரு வீதி ஊர்வலமும் பூசை வழிபாடும் சிறப்பாக நடைபெற்றன. பக்தர்கள் கூடி சந்தோஷமாக இந்நிகழ்வை பக்தி பூர்வமாக கொண்டாடி மகிழ்ந்தார்கள். கரம்பொன் கிராமத்தின் முன்னேற்றத்திற்காக பல அரிய பணிகளைச் செய்து வரும்; ” ஸ்ரீபொன் சாயி” குழுமத்தினரையும் அத்துடன் இந்நிகழ்வை அழகுற வீடியோ ஒளிப்பதிவு செய்த “ஓம்” தொலைக்காட்சி அமைப்பினரையும் “கரம்பொன்.நெற்” இணையத்தளம் மூலம் உளமாரப் பாராட்டி நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


கரம்பொன் சீரடி சாயி பாபா கோவிலில் பாபா சிலை பிரதிஷ்டை (குடமுழுக்கு விழா-10-09-2023)

கரம்பொன் சுருவில் வீதியில் ஸ்ரீ பொன் சாயியாக வீற்றிருக்கும் சீரடி சாயி பாபாவிற்கு ஸ்வஸ்தி ஸ்ரீ நிகழும் மங்களகரமான சோபகிருது வருஷம் ஆவணித் திங்கள் 24ம் நாள் (10-09-2023) ஞாயிற்றுக்கிழமை புனர்பூச நட்சத்திரமும் ஏகாதசி திதியும் சித்த யோகமும் கூடிய சுபதினத்தில் காலை 8.32 மணிமுதல் 10.36 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெற்றது. மீண்டும் எங்கள் ஊர் பொன்னாக மிளிர ஸ்ரீ பொன்சாயியைப் போற்றுவோமாக!.


திரு& திருமதி தர்மசோதி, ஷீலா தம்பதிகளின் மகவுகளாகிய அண்ணன், தங்கை, ஹரிகரன், ஹரிணி இரட்டையர்களின் நாட்டிய அரங்கேற்றம்.

நிமிடத்துக்கு நிமிடம்,வியர்வைத் துளிகளை வழித்தெறியத் தேவையற்ற,குளிருக்கான ஆடைகள் எவற்றினும் தேவைகளற்ற, ஒரு கச்சிதமான காலநிலை.பூமி விரைவாகச் சூடாகி, உலகம் முழுவதுமே குழப்பமான காலநிலையை எதிர்கொள்கின்ற இந்தக் காலகட்டத்தில் , கனடா போன்ற ஒரு நாட்டில் இத்தகையதான நாட்கள் கிடைப்பதென்பது மிக அரிது.

அத்தகையதொரு கச்சிதமான காலநிலையைக் கொண்டிருந்த நாளில் மண்டபம் நிறைந்த பார்வையாளர்களாக உறவுகளும் நண்பர்களும் ஒன்று கூடினோம். இடம்: ஸ்கார்புரோ சீனக் கலாச்சார மண்டபம் நாள்: ஆவணி 19,2023


இன்று 14-08-2023 ஊர்காவற்றுறை கரம்பொன் மேற்கு அருள்மிகு ஸ்ரீ முருகமூர்த்தி ஆலய இரத உற்சவம்!

மேலைக்கரம்பொன் பதியில் வேண்டும் வரங்களை வாரிவழங்கும் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத முருகமூர்த்தி சுவாமியின் வருடாந்த மகோற்சவம் மங்களகரமான சுபகிருது வருஷம் ஆடி மாதம் 21ம் நாள் (06-08-2023) ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்துத் தினங்கள் நடைபெற்று, 11ம் நாள் (14-08-2023) திங்கட்கிழமை தேர்த்திருவிழாவும் 12ம் நாள் (15-08-2023) செவ்வாய்க்கிழமை எம்பெருமானுக்குத் தீர்த்த உற்சவமும் நடைபெறுகிறது. இவ் உற்சவ காலங்களில் அடியார்கள் விரதம் அனுஷ்டித்து ஆசார சீலராய் ஆலயத்திற்கு வருகை தந்து ஸ்ரீ முருகப்பெருமானின் திருவருளைப் பெற்றுச் செல்கின்றனர்!


நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பெருவிழா தற்போது நடைபெற்றுக்கெண்டிருக்கின்றது. தொடர்ந்து பதினாறு நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில், இன்றைய தினம்(02.07.2023) ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழா நடைபெற்றது.


கரம்பொன் சீரடி சாயி இல்லத்தில் நடைபெற்ற “ஹனுமான் ஜயந்தி”

குருவார வியாழன் கூடிய “ஹனுமான் ஜெயந்தி” தினமான இன்று 06-04-2023 ஸ்ரீ பொன்சாயி இளைய தலைமுறை தொண்டர்களால் (Sri Ponsai Youth Wing) கரம்பொன் சீரடி சாயி இல்லத்தில் ஸ்ரீசுயம்பு ஆஞ்சநேயருக்கு செந்தூரம் இட்டு , 108 வடை மாலை, துளசி மாலை அணிவித்தும் செந்தூரம் இட்டும் பொங்கல் பொங்கி பூசை வழிபாட்டுடன் அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

மீண்டும் எங்கள் ஊர் பொன்னாக மிளிர ஸ்ரீ பொன்சாயியைப் போற்றுவோமாக!


கரம்பொன் சீரடி சாயி இல்லத்தில் நடைபெற்ற இராமநவமி வீதி ஊர்வலம்

இராமநவமி தினமான இன்று 30-03-2023 வியாழக்கிழமை கரம்பொன் சீரடி சாயி இல்லத்தில் ஸ்ரீ பொன்சாயி உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம் நடைபெற்று ஆஞ்சநேயர் தரிசனத்துடன் புதிய இரதத்தில் வீதி உலா(சாவடி ஊர்வலம்) சுருவில் வீதி செபஸ்தியார் கோவிலடியால் புறப்பட்டு சாதி , சமய வேறுபாடின்றி வீதி தோறும் இல்லங்களில் சாயி மகாராஜாவிற்கு ‘பூரணகும்ப மரியாதைகள்’ நடைபெற்று ஒழுவில் வைரவர் கோவிலடியால் ஸ்ரீP பொன்சாயி இருப்பிடத்திற்கு மீண்டும் வந்தடைந்தார்.


கனேடிய மக்கள் அதிர்ஸ்டசாலிகள்! வாழ்த்து தெரிவித்த பிரதமர் ஜஸ்டின்

கனேடிய மக்கள் மிகவும் அதிர்ஸ்டசாலிகள் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

நத்தார் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சமாதானமான நாடு ஒன்றில் வாழக் கிட்டியமையினால் கனேடிய மக்கள் அதிர்ஸ்டசாலிகள் என தெரிவித்துள்ளார்.

மகிழ்ச்சி, ஆரோக்கியம், அன்பு மற்றும் சமாதானம் நிறைந்த நத்தார் பண்டிகையாக அமைய பிரார்த்தனை செய்வதாக ட்ரூடோ தெரிவித்துள்ளார்.


மேலைக்கரம்பொன் அருள்மிகு ஸ்ரீ முருகமூர்த்தி தேவஸ்தான கந்தசஷ்டி விரத உற்சவ விஞ்ஞாபனம்-2022

மேலைக்கரம்பொன் பதியில் வேண்டும் வரங்களை வாரிவழங்கும் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத முருகமூர்த்தி சுவாமியின் கந்தசஷ்டி உற்சவம் 26-10-2022 புதன்கிழமை அரம்பமாகி 30-10-2022 ஞாயிற்றுக்கிழமை சூரன்போர், தொடர்ந்து திருக்கல்யாணத்துடன் பக்தி பூர்வமாக நடைபெற்றது. அத்துடன் முதல் வாரத்தில் 20-10-2022 வியாழக்கிழமை இரவு புதிதாக உருவாக்கப்பட்ட சப்பறம் வர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளோட்ட நிகழ்வும் கண்கொள்ளாக் காட்சியாக மிகவும் சிறப்பாக நடைபெற்றது.


மேலைக்கரம்பொன் அருள்மிகு ஸ்ரீ முருகமூர்த்தி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்-2022

மேலைக்கரம்பொன் பதியில் வேண்டும் வரங்களை வாரிவழங்கும் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத முருகமூர்த்தி சுவாமியின் வருடாந்த மகோற்சவம் மங்களகரமான சுபகிருது வருஷம் ஆடி மாதம் 3ம் நாள் (19-07-2022) செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்துத் தினங்கள் நடைபெற்று, 11ம் நாள் (27-07-2022) புதன்;கிழமை தேர்த்திருவிழாவும் 12ம் நாள் (28-07-2022) வியாழக்கிழமை எம்பெருமானுக்குத் தீர்த்த உற்சவமும் நடைபெற்றது. இவ் உற்சவ காலங்களில் அடியார்கள் விரதம் அனுஷ்டித்து ஆசார சீலராய் ஆலயத்திற்கு வருகை தந்து ஸ்ரீ முருகப்பெருமானின் திருவருளைப் பெற்றனர்!