இராமநவமி தினமான இன்று 30-03-2023 வியாழக்கிழமை கரம்பொன் சீரடி சாயி இல்லத்தில் ஸ்ரீ பொன்சாயி உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம் நடைபெற்று ஆஞ்சநேயர் தரிசனத்துடன் புதிய இரதத்தில் வீதி உலா(சாவடி ஊர்வலம்) சுருவில் வீதி செபஸ்தியார் கோவிலடியால் புறப்பட்டு சாதி , சமய வேறுபாடின்றி வீதி தோறும் இல்லங்களில் சாயி மகாராஜாவிற்கு ‘பூரணகும்ப மரியாதைகள்’ நடைபெற்று ஒழுவில் வைரவர் கோவிலடியால் ஸ்ரீP பொன்சாயி இருப்பிடத்திற்கு மீண்டும் வந்தடைந்தார்.
நிகழ்வுகள்
கனேடிய மக்கள் அதிர்ஸ்டசாலிகள்! வாழ்த்து தெரிவித்த பிரதமர் ஜஸ்டின்
கனேடிய மக்கள் மிகவும் அதிர்ஸ்டசாலிகள் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
நத்தார் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சமாதானமான நாடு ஒன்றில் வாழக் கிட்டியமையினால் கனேடிய மக்கள் அதிர்ஸ்டசாலிகள் என தெரிவித்துள்ளார்.
மகிழ்ச்சி, ஆரோக்கியம், அன்பு மற்றும் சமாதானம் நிறைந்த நத்தார் பண்டிகையாக அமைய பிரார்த்தனை செய்வதாக ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
மேலைக்கரம்பொன் அருள்மிகு ஸ்ரீ முருகமூர்த்தி தேவஸ்தான கந்தசஷ்டி விரத உற்சவ விஞ்ஞாபனம்-2022
மேலைக்கரம்பொன் பதியில் வேண்டும் வரங்களை வாரிவழங்கும் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத முருகமூர்த்தி சுவாமியின் கந்தசஷ்டி உற்சவம் 26-10-2022 புதன்கிழமை அரம்பமாகி 30-10-2022 ஞாயிற்றுக்கிழமை சூரன்போர், தொடர்ந்து திருக்கல்யாணத்துடன் பக்தி பூர்வமாக நடைபெற்றது. அத்துடன் முதல் வாரத்தில் 20-10-2022 வியாழக்கிழமை இரவு புதிதாக உருவாக்கப்பட்ட சப்பறம் வர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளோட்ட நிகழ்வும் கண்கொள்ளாக் காட்சியாக மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
மேலைக்கரம்பொன் அருள்மிகு ஸ்ரீ முருகமூர்த்தி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்-2022
மேலைக்கரம்பொன் பதியில் வேண்டும் வரங்களை வாரிவழங்கும் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத முருகமூர்த்தி சுவாமியின் வருடாந்த மகோற்சவம் மங்களகரமான சுபகிருது வருஷம் ஆடி மாதம் 3ம் நாள் (19-07-2022) செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்துத் தினங்கள் நடைபெற்று, 11ம் நாள் (27-07-2022) புதன்;கிழமை தேர்த்திருவிழாவும் 12ம் நாள் (28-07-2022) வியாழக்கிழமை எம்பெருமானுக்குத் தீர்த்த உற்சவமும் நடைபெற்றது. இவ் உற்சவ காலங்களில் அடியார்கள் விரதம் அனுஷ்டித்து ஆசார சீலராய் ஆலயத்திற்கு வருகை தந்து ஸ்ரீ முருகப்பெருமானின் திருவருளைப் பெற்றனர்!
இன்று ஆஞ்சநேயரின் வாரதினமான சனிக்கிழமையுடன் கூடிய ஹனுமான் ஜயந்தியும், சித்திரை பௌர்ணமியும்!
ஆஞ்சநேயரின் வாரதினமான சனிக்கிழமையுடன் கூடிய ஹனுமான் ஜயந்தியும் அத்துடன் சேர்ந்த சித்திரை பௌர்ணமி தினமான இன்று கரம்பொன் சீரடி சாயி இல்லத்தில்ஸ்ரீசுயம்பு ஆஞ்சநேயருக்கு செந்தூரம் இட்டு , 108 வடை மாலை, வெற்றிலை மாலை, அவரின் வாலைச்சுற்றி துளசி மாலை அணிவித்தும், நாற்பது புகழ்மாலை (ஹனுமான் சலிசா) பாடி, 108 போற்றிகளுடன் பூசை வழிபாடும் சிறப்பாக நடைபெற்றன.ஸ்ரீபொன்சாயிக்கு ஆராத்தியுடன் உழுந்துப் பிரியன் ஹனுமானின் இட்டலியும் பிரசாதமாக அடியவர்களுக்கு வழங்கப்பட்டன.
கரம்பொன் கண்ணகி அம்மன் ஆலயத்தில் இன்று சித்ரா பௌர்ணமி தினத்தில் நடைபெற்ற அபிஷேகமும் அன்னதான நிகழ்வும்!
கரம்பொன் கிராமத்தில் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் கண்ணகி அம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி தினமான இன்று 16-04-2022 சனிக்கிழமை விசேஷ பூஜைகளுடன் அபிஷேகமும் அன்னதான நிகழ்வும்; சிறப்பாக நடைபெற்றது.
சித்ரா பவுர்ணமி என்பது சித்திரை மாதம் பவுர்ணமி திதியில் சித்திரை நட்சத்திரமும் கூடி வருவதால் சித்ரா பவுர்ணமி என அழைக்கப் பெறுகின்றது. மாதத்தின் பெயரும் நட்சத்திரத்தின் பெயரும் ஒன்றாகி (சந்திரன் சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கையில்), சூரியன் உச்ச பலம் பெறும் மேஷ ராசியில் (சித்திரை மாதத்தில்) வரும் பவுர்ணமி தினம் சிறப்புப் பெறுகின்றது.
கரம்பொன் மக்களால் அழைக்கப்பட்ட ‘பொன்னர் வளவு’ ஸ்ரீ பொன்சாயி மாதிரிக் கிராமமாக குருவருளால் உருவாகவுள்ளது
கரம்பொ
ன் மக்களால் அழைக்கப்பட்ட 'பொன்னர் வளவு' ஸ்ரீ பொன்சாயி மாதிரிக் கிராமமாக குருவருளால் உருவாகவுள்ளது. புதுவருடப் பிறப்பை முன்னிட்டு இன்று 13-04-2022 புதன்கிழமை சுருவில் வீதி, கரம்பொன் தென்கிழக்கு ஊர்காவற்றுறை J53 பிரிவில் அமைந்துள்ள 25 பரப்புடைய இக்காணி காணியற்ற கரம்பொன் குடிமக்களான பத்து குடும்ப அங்கத்தவர்களுக்கு (அரசாங்க வீட்டுத் திட்டத்திற்காக) பிரித்து குலுக்கல் சீட்டு முறையில் பாரபட்சமின்றறி வழங்கப்பட்டன.
பக்தி பூர்வமாக நடைபெற்ற ‘கரம்பொன் ஸ்ரீ சுயம்பு ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம்’
கரம்பொன் ' ஸ்ரீபொன் சாயி' தொண்டர் சேவையின் முன்னோக்கி நகரும் செயல் திட்டத்தின் கீழ் இன்று 23-03-2022 புதன் கிழமை கரம்பொன் சுருவில் வீதியில் அமைந்துள்ள கரம்பொன் ஸ்ரீ சுயம்பு ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் நல்லூர் ' யாழ் மத்தி ஸ்ரீ பகவான் சத்திய சாய் சேவா நிலையத்திலிருந்து சிவாச்சாரியார்கள் சகிதம் பக்தர்கள் புடை சூழ சுருவில் வீதி வழியாக மங்கள வாத்தியங்களுடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, சுயம்பு ஆஞ்சநேயர் பிரதிஷ்டா, கும்பாபிஷேகம் குருவருளாலும் இறையருளாலும் மிகச் சிறப்பாக நடைபெற்றென.
கரம்பொன் புனித செபஸ்தியார் ஆலயத்தில் நடைபெற்ற பொங்கல் நிகழ்வு 2022!
கரம்பொன் புனித செபஸ்தியார் ஆலயத்தில் கரம்பொன் வாழ் மக்களால் தைமாதம் 14ஆம் நாள் வெள்ளிக்கிழமை பொங்கல் நிகழ்வு ஆரம்பமாகி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்தச் சிறப்பு விழா ஒரு கலைவிழாபோல், தமிழ்மரபுத் திங்கள் அடையாளங்களை உள்ளடக்கியதாக, மிளிர்ந்தது என்றால் அது மிகையில்லை.; கரம்பொன் வாழ் மக்களும் அவர்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டு பொங்கலை உண்டு மகிழ்ந்தனர்.
உலகின் தலை சிறந்த ஆசிரியத்துவத்திற்கான 2021 விருது பெற்ற யாழ் இந்துக் கல்லூரி ஆசிரியர் திரு.இ.இரமணன்
2021 ம் ஆ
ண்டிற்கான தலை சிறந்த ஆசிரியத்துவத்திற்கான BIC Cristal Pen விருதினை யாழ் இந்துக் கல்லூரி ஆசிரியர் திரு.இ.இரமணன் பெற்றுக் கொண்டுள்ளார்.
விசேடமாக கொவிட் -19 இடர் காலத்தில் தலை சிறந்த அர்ப்பணிப்புடன் எதிர்கால சந்ததியினரின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி கற்பித்தலில் புத்தாக்க முறைமைகளைப் புகுத்தி நிகழ்நிலை கற்பித்தலில் மாணவர்கள் வெற்றிகரமாக ஈடுபடுவதற்கான வழிவகைகளைக் கையாண்டு மாணவர்களை கல்வியின் பால் தூணடுவதன் மூலம் மாணவர்களுக்கும் சமூகத்திற்கும் கல்விப் பணியாற்றியமைக்காகவும் உலகின் அனைத்து தமிழ் மாணவர்களும் பயன்பெறும் வண்ணம் இலவசமாக ஆசிரிய பணியினை முன்னெடுத்தமைக்காகவும் வழங்கப்படுகிறது.




