கரம்பொன் புனித செபஸ்தியார் ஆலயம் புனரமைக்கப்பட்டு 130வது ஆண்டு நிறைவு விழா யாழ். மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய பேரருட்கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலமையில் இடம்பெற்றது. நிகழ்வில் அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் மற்றும் பெருமளவு மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வுகள்
கரம்பொன் சீரடி சாயி இல்லத்தில் நடைபெறும் நிழ்வுகள்!
"கரம்பொன் சீரடி சாயி இல்லத்தின் ஆதரவில் ஆஞ்சனேயரின் மார்கழி மூலநட்கத்திர நன்நாளில் 12-01-2021 செவ்வாய் கிழமையான இன்று "ஸ்ரீ பொன் சாயி" தொண்டர் சேவையின் முன்னோக்கி நகரும் செயல் திட்டத்தின் கீழ் ஸ்ரீபொன்சாயி இல்லத்தில் ஆஞ்சனேயர் விம்பம் பிரதிஷ்டை, சீரடி சாயி சத்சரித கைநூல் வெளியீடு, மரம் வளர்ப்போம் வளம் பெறுவோம் மற்றும் பொங்கல் பொதிகள் வழங்குதல் ஆகிய நான்கு நிழ்வுகள் நடைபெற்றன.
<
“கரம்பொன் சீரடி சாயி இல்லம்” பக்தி பூர்வமாக இன்று (23-08-2020) திறந்து வைக்கப்பட்டது
சீரடி சாயியின் திருவருளால் இன்று சார்வரி ஆண்டு ஆவணித் திங்கள் 7ம் நாள் (23-08-2020) ஞாயிறு காலை 8.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரையுள்ள சுபநேரத்தில் "ஸ்ரீ பொன் சாயி" கரம்பொனுக்கு வருகை தரும் வைபவம் மிகவும் பக்தி பூர்வமாக நடைபெற்றது.
இந்தியாவின் புண்ணிய சீரடி மண்ணிலுள்ள பாபாவின் மகா சமாதியில் "ஸ்ரீ பொன் சாயி" ஆசீர்வதிக்கப்பெற்று பின் இலங்கை " யாழ் மத்தி ஸ்ரீ பகவான் சத்திய சாய் சேவா நிலையத்தில்" சௌகரியமாக தனது பொன்னான நாளை எதிர்பார்த்து இன்று நல்லூர் " யாழ் மத்தி ஸ்ரீ பகவான் சத்திய சாய் சேவா நிலையத்தின்" தலைமையில் "ஸ்ரீ பொன் சாயியின்" நிழல் உருவப்படம் அங்கு எழுந்தருளல் காயத்ரி, அஷ்ரோத்ர சத நாமாவளி, வைகறை ஆராத்தி ஆராதனையைத் தொடர்ந்து காலை 9.15 மணியளவில் பக்தர்கள் புடை சூழ கரம்பொன் தெற்கு ஒழுவில் "ஸ்ரீ ஞானவைரவர் அரச மரத்தடிக்கு 10.00 மணியளவில் வந்தடைந்து கோவிலில் இருந்து சுருவில் வீதி வழியாக மங்கள வாத்தியங்களுடன் "ஸ்ரீ பொன் சாயி" ஊர்வலமாக கரம்பொன் சுருவில் வீதியில் அமைந்துள்ள கனிஷ்ட பாடசாலைக்கு (Karampon little flower convent) அருகிலுள்ள "கரம்பொன் சீரடி சாயி" இல்லத்தில் தனது இருப்பிடத்தில் வந்தமர்ந்து கொண்டார்.
உலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்!
உலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் "லிடியன் நாதஸ்வரம்" பெற்றுள்ளார்
அமெரிக்காவில் நடைபெற்ற தொலைக்காட்சி போட்டியில் பங்குபற்றி பல்வேறுநாடுகளில் இருந்து வந்தவர்கள் மத்தியில் இவர் தெரிவாகியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அபிஷா செல்வமோகனின் பரநாட்டிய நிகழ்வின் நேரடி ஒளிபரப்பை இங்கே காணலாம்
ஆடற் செல்வி அபிஷா செல்வமோகனின் முழுமையான கலையாற்றலைக் காண்போம் வாரீர்! -ஆர்.என். லோகேந்திரலிங்கம்
வடமொழியானது தனது செல்வாக்கை இந்த அற்புதக் கலை வடிவத்தின் மீது செலுத்திய வண்ணம் இருக்க, தமிழ்நாட்டிற்குரிய ஒருகலை வடிவமாகத் திகழ்ந்த பரதநாட்டியம் தற்போது உலகெங்கும் பரந்து விரிந்து தன் பாதங்களைப் பதித்தவண்ணம் அழகுமங்கையர்க்கு மேலும் அழகூட்டிவருகின்றது. ஆற்றல் நிறைந்தவரை அணைத்து தொடர்ந்து அழைத்துச் செல்லுகின்றது.இவ்வாறான அற்புதக் கலையை பயிலும் ஒரு நடனமங்கை அல்லது ஒரு ஆடவன் தனது பாதங்களை அடித்தளமாகக் கொண்டு ஒரு நடனத்தை பார்வையாளர்களுக்கு சமர்ப்பித்தாலும், தனது உடல் உறுப்புக்கள் மற்றும் உணர்வுகள் போன்ற அனைத்தையும் ஒருங்கிணைத்து ஆடுதலே இந்த பரதநாட்டியத்தின் சிறப்பு என்று சொல்லலாம்.
கனா ஆறுமுகம் அவர்களின் “நினைவுகள் 2016”
கனடாவில் நினைவுகள்.கொம் என்றால் நம் எல்லோர் மனங்களிலும் உடனே பதிவாகுவது அதன் அதிபர், ஸ்தாபகர் திரு.கனாவின் முகமே!!. இந்த நினைவுகள் அதிபர் திரு.கனா ஆறுமுகம் அவர்கள் நடாத்திய 2016ம் ஆண்டுக்குரிய “நினைவுகள் 2016” என்னும் அட்டகாசமான விழா கடந்த 20.02.2016 சனிக்கிழமை ஸ்காபுரோவில் அமைந்துள்ள கொன்வென்சன் விழா மண்டபத்தில் நிகழ்வுகள் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது.
கனடிய தமிழ் வல்லுநர் சங்கத்தின் “Black & White Affair 2015”
கனடிய தமிழ் வல்லுநர் சங்கத்தின் (Canadian Tamil Professionals Association) “Black & White Affair 2015” என்னும் நிகழ்வு இராப்போசனத்துடன் கடந்த மாதம் 27 ஞாயிற்றுக்கிழமை மாலை ஸ்காபுரோவில் அமைந்துள்ள கொன்வென்சன் விழா மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கண்கவர் நடனங்கள், இசைப் போட்டிகள் என பல விதமான நிகழ்வுகள் நடைபெற்றது.
மார்க்கம் ஸ்ரீசத்ய சாயி நிலையத்தினர் கொண்டாடிய ஸ்ரீசத்ய சாயி பாபாவின் 90வது ஆண்டு ஜெயந்தி தினம்
நேற்றைய தினம் மாலை 5.30 மணியளவில் மார்க்கத்திலுள்ள Armadale Community Centre இல் பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் 90வது ஆண்டு ஜெயந்தி தினம் மார்க்கம் ஸ்ரீ சத்ய சாயி நிலையத்தினரால் பக்தி பூர்வமாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்வில் வயலின் இசை, ஆன்மீகவுரை, பஜனைகளுடன் ஊஞ்சல் மற்றும் மங்கள ஆரத்தியும் இடம்பெற்றன. இச் சாயி சேவா நிலையம் கடந்த 16 வருடங்களாக மாதம் இரு ஞாயிற்றுக்கிழமைகளில் இளம் சிறார்களுக்காக சமய வகுப்புகளையும், முதியோர்களுக்காக பஜனைகளையும் தொடர்ந்து நடாத்தி சேவையாகச் செய்து வருகிறார்கள். அத்துடன் பகவான் சாயிபாபாவின் ஜெயந்தி தினத்தையும் சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள்.
ராஜகீதங்கள் -2015 இசை நிகழ்வில் தமிழில் பாடி அசத்திய சீன மொழி பேசும் கலைஞன்
இன்று மாலை 25 ஒக்டோபர் 2015 ஞாயிற்றுக்கிழமை Bur Oak உயர்தர பாடசாலையில் T.M.S VS தெய்வேந்திரன் பெருமையுடன் வழங்கிய “ராஜகீதங்கள் -2015" இசை நிகழ்ச்சி இடம்பெற்றது. இந்நிகழ்வில் மலேசியாவிலிருந்து வருகை தந்த சீன மொழி பேசும் இசைக்கலைஞன் வில்லியம் தமிழ் பாடல்களை இனிமையாகப் பாடி அசத்தியதுடன் ஆடியும் சபையோரை மகிழ்வித்தார்.
ஆனந்த விகடனின் “சந்திரஹாசம்” – கிராஃபிக் நாவல் வெளியீட்டு விழா
கடந்த திங்கட்கிழமை 10-12-2015 கனடா தமிழர் தகவல் சஞ்சிகையின் ஆதரவில் ஆனந்த விகடன் வெளியீட்டகத்தின் பிரசுரமான “சந்திரஹாசம்”; – நாவல் வெளியீட்டு விழா மார்க்கம் நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. இந்திய சாகித்ய மண்டல பரிசு பெற்றவரும், “காவல் கோட்டம்” நாவலை எழுதியவருமான திரு.சு.வெங்கடேசன் அவர்களால் எழுதப்பெற்று, பிரபல ஓவியர் க.பாலசண்முகம் அவர்களின் ஓவியங்களோடு நவீன கிராஃபிக் தொழில் நுட்பத்தால்