மார்க்கம் ஸ்ரீசத்ய சாயி நிலையத்தினர் கொண்டாடிய ஸ்ரீசத்ய சாயி பாபாவின் 90வது ஆண்டு ஜெயந்தி தினம்

Sai 90-1aநேற்றைய தினம் மாலை 5.30 மணியளவில் மார்க்கத்திலுள்ள Armadale Community Centre இல் பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் 90வது ஆண்டு ஜெயந்தி தினம் மார்க்கம் ஸ்ரீ சத்ய சாயி நிலையத்தினரால் பக்தி பூர்வமாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்வில் வயலின் இசை, ஆன்மீகவுரை, பஜனைகளுடன் ஊஞ்சல் மற்றும் மங்கள ஆரத்தியும் இடம்பெற்றன. இச் சாயி சேவா நிலையம் கடந்த 16 வருடங்களாக மாதம் இரு ஞாயிற்றுக்கிழமைகளில் இளம் சிறார்களுக்காக சமய வகுப்புகளையும், முதியோர்களுக்காக பஜனைகளையும் தொடர்ந்து நடாத்தி சேவையாகச் செய்து வருகிறார்கள். அத்துடன் பகவான் சாயிபாபாவின் ஜெயந்தி  தினத்தையும் சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள்.


ராஜகீதங்கள் -2015 இசை நிகழ்வில் தமிழில் பாடி அசத்திய சீன மொழி பேசும் கலைஞன்

 Rajageethangal-2015-1aஇன்று மாலை 25 ஒக்டோபர் 2015 ஞாயிற்றுக்கிழமை Bur Oak  உயர்தர பாடசாலையில் T.M.S VS  தெய்வேந்திரன் பெருமையுடன் வழங்கிய “ராஜகீதங்கள் -2015" இசை நிகழ்ச்சி இடம்பெற்றது. இந்நிகழ்வில் மலேசியாவிலிருந்து வருகை தந்த சீன மொழி பேசும் இசைக்கலைஞன் வில்லியம் தமிழ் பாடல்களை இனிமையாகப் பாடி அசத்தியதுடன் ஆடியும் சபையோரை மகிழ்வித்தார். 


ஆனந்த விகடனின் “சந்திரஹாசம்” – கிராஃபிக் நாவல் வெளியீட்டு விழா

Ananda Vikatan - book-relase-1aகடந்த திங்கட்கிழமை 10-12-2015 கனடா தமிழர் தகவல் சஞ்சிகையின் ஆதரவில் ஆனந்த விகடன் வெளியீட்டகத்தின் பிரசுரமான “சந்திரஹாசம்”; – நாவல் வெளியீட்டு விழா மார்க்கம் நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. இந்திய சாகித்ய மண்டல பரிசு பெற்றவரும், “காவல் கோட்டம்” நாவலை எழுதியவருமான திரு.சு.வெங்கடேசன் அவர்களால் எழுதப்பெற்று, பிரபல ஓவியர் க.பாலசண்முகம் அவர்களின்  ஓவியங்களோடு நவீன கிராஃபிக் தொழில் நுட்பத்தால்


யாழ் இந்துக் கல்லூரியின் கலையரசி – 2015

JHC kalaiyarasi-2015- 1aகடந்த வாரத்தில் சனிக்கிழமையும் (10-10-2015), ஞாயிற்றுக்கிழமையும் (10-11-2015) இரண்டு நாள் நிகழ்வாக யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் நடாத்திய கலை, கலாச்சார நிகழ்வான கலையரசி -2015 மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் மத்தியில் சபையோர் பாராட்டும் வகையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 


எழுத்தாளர் ஜெயமோகனுடன் ஓர் இலக்கிய கலந்துரையாடல்

with writer Jeyamohan-1கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் பதினைந்தாவது இயல் விருது விழா வழமைபோல ரொறொன்ரோவில் நடைபெற்றது. இம்முறை வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான இயல் விருது பா. ஜெயமோகன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. நவீனத் தமிழின் முக்கிய அடையாளங்களில் ஒருவராகத் திகழும் திரு ஜெயமோகன் அவர்கள் நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் விமர்சனங்கள், நாடகங்கள், சினிமா என பல தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறார். அச்சமயம் அவருடனான ஓர் இலக்கிய கலந்துரையாடலை ரொறன்ரோ தமிழ் சங்கம் நடாத்தியிருந்தது.


பச்சிளம் பாலகியின் பரவசமான பரத நாட்டிய அரங்கேற்றம்! – வீரகேசரி மூர்த்தி

abissha-1cஒன்பது வயதுச் சிறுமியான செல்வி அபிஷா செல்வமோகனின் பரத நாட்டிய அரங்கேற்றத்தைக் கண்டு களிக்கும் அரிய வாய்ப்பு அண்மையிலே கிடைத்தது. பத்தோடு பதினோராவது அரங்கேற்றமாக இருக்குமென எண்ணிக் கொண்டு சென்ற எனக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. எனக்கு மாத்திரமல்ல ஏனைய அனைவருக்குமே ஆச்சரியமாகத் தான் இருந்தது என்பதனை அவர்களது பலத்த கரகோஷங்களின் மூலம் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.


யுனைரெட் விளையாட்டுக்கழகம் நடாத்திய – பூப்பந்தாட்ட சுற்றுப் போட்டி

1bஓன்பதாவது ஆண்டு நிறைவையொட்டி United Tamil Sports Club  நடாத்திய Badminton சுற்றுப் போட்டி கடந்த 20ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுரோவில் அமைந்துள்ள Malvern GYM இல் நடைபெற்றது. ஆண்கள், பெண்கள்  சிறுவர்கள் பெரியவர்களென பல பிரிவுகளில் போட்டி  காலை 9.30 மணி தொடக்கம் இரவு 10.00மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. போட்டி முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றிக்கேடயங்களும் வழங்கப்பட்டன. வருடாவருடம் தவறாமல் யுனைரெட் விளையாட்டுக்கழகம் இப் பூப்பந்தாட்டப் போட்டியை நடாத்தி வருவது பாராட்டுதற்குரியது. 


ரொறன்ரோவில் திருவையாறு-2015

Thiruvaiyaru in Toronro-தமிழ்ப் பண்பாட்டு மேம்பாட்டு ஒன்றியம் – கனடா
Tamil Cultural Progressive Organization – Canada (TCPO-CAN) 

பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்களின் தலைமையில் 2011 இல் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்ப் பண்பாட்டு மேம்பாட்டுஒன்றியம் – கனடா என்ற அமைப்பு ரொறன்ரோவில்,தமிழர் பண்பாட்டு நிகழ்ச்சிகளை மிகவும் சிறப்பான முறையில் நடத்திக் கொண்டு வருவதை வாசகர் அறிந்திருப்பார்கள். இவ்வமைப்பு ரொறன்ரோவில் முதன் முதலாக திருவையாறு நிகழ்ச்சியை மார்ச். 01, 2014 நடத்திச் சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது. அதன் தொடச்சியாக இவ்வாண்டும் இரண்டாம் முறையாக ரொறன்ரோவில் திருவையாறு நிகழ்ச்சியை 28.03.2015 ஸ்காபரோவிலுள்ள பெரிய சிவன் ஆலய கலாச்சார மண்டபத்தில் மிகப் பிரமாண்டமான முறையில் நடத்தினர்.


ஞானம் சஞ்சிகையின் “ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் – சிறப்பிதழ்” அறிமுக விழா

gnanam book releaseன்று ஞானம் தனது 175 இதழாக வெளியிட்டிருந்த சிறப்பு இதழான 'ஈழத்துப்புலம் பெயர் இலக்கியச் சிறப்பிதழின் வெளியீட்டு விழா 'டொராண்டோ'வில் நடைபெற்றது. கனடாத்தமிழ்ச்சங்க ஆதரவில் வைத்திய கலாநிதி லம்போதரனுக்குச்சொந்தமான 'டொராண்டோ' தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில். எழுத்தாளர் அகில் தொடக்கவுரையினையும், வைத்திய கலாநிதி இ.லம்போதரன் தலைமையுரையினையும் ஆற்ற அறிமுக உரையினைப் பேராசிரியர் அ.ஜோசப் சந்திரகாந்தன் ஆற்றினார். அதன்பின்னர் நூல் நிகழ்வுக்கு வந்திருந்தோருக்கு விற்பனைக்கு விடப்பட்டது. தொடர்ந்த நிகழ்வில் கலாநிதி நா.சுப்பிரமணியன் அவர்கள் சிறப்புரையினையும், இறுதியாக நன்றியுரையினை எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனி விஜேந்திராவும் ஆற்றினார்கள்.


தனக்கென தனிப்பாதை வகுத்து துளிர் விடும் “தளிர்” சஞ்சிகை!

Thalir 1st year-1“தளிர்” ஆண்டு விழாவில் டாக்டர் போல் ஜோசெப்

“தளிர் சஞ்சிகை தனக்கென தனிப்பாதை வகுத்து, சவால்களை சாதனையாக்கி வெற்றிகரமாக வெளி வந்து ஓராண்டினை நிறைவு செய்துள்ளது. அதன் ஆசிரியர் சிவமோகனும், துணைவியார் நந்தினியும் நீ பாதி, நான் பாதியென சிவசக்தியாக ஒன்றிணைந்து செயலாற்றி வருவது பாராட்டுக்குரியதாகும். கலாநிதி பாலசுந்தரம், கதிர் ஒளி ஆசிரியர் திரு.போள் ராஜபாண்டியன், டாக்டர் கென் சந்திரா, வீடு விற் பனை முகவர் திரு.சங்கர் மாணிக்கம் ஆகியோரது பேராதரவினால் “தளிர்” மேலோங்கி வருகின்றது.