கனடா ‘கந்தர்மடம் மக்கள் ஒன்றியம்” நடத்திய குளிர்கால ஒன்றுகூடல் சிறப்பாக நடைபெற்றது!

கனடாவில் கடந்த பல வருடங்களாக ஒவ்வொரு வருடமும் தவறாது தங்கள் ஒன்றுகூடல்கள் மற்றும் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்திவரும்’ கந்தர்மடம் மக்கள் ஒன்றியம்’ நடத்திய குளிர்கால 2026ம் ஆண்டுக்கு உரிய ஒன்றுகூடல் கடந்த 7ம் திகதி சனிக்கிழமையன்று ஸ்காபுறோ எஸ்டேட் பேங்குவற் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது!


அனைவருக்கும் (Happy New Year 2026) இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!

2025-ஆம் ஆண்டின் நினைவுகளுடன் 2026-ஆம் ஆண்டை இனிதே வரவேற்போம். பிறந்துள்ள இந்தப் புத்தாண்டு, நம் அனைவருக்கும் முன்னேற்றத்தையும், வெற்றியையும், மன அமைதியையும் தரும் ஆண்டாக அமைய மனதார வாழ்த்துகிறேன்.


உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவை நடாத்தும் 2025 ஆம் ஆண்டுக்கான 10வது பூப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி

உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவை நடாத்தும் 2025 ஆம் ஆண்டுக்கான 10வது பூப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி April மாதம் 19 ஆம் 20 ஆம் திகதிகளில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு நாட்டில் ஒழுங்கு செய்யப்படும். இந்தப் போட்டி இந்த வருடம் பிரான்ஸ் நாட்டில் Corday, Argentan நகரில் இடம் பெற உள்ளது.

சுவிற்சர்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜேர்மனி, கனடா, டென்மார்க், நோர்வே, அமெரிக்கா, பெல்ஜியம், சுவீடன், அவுஸ்திரேலியா, அயர்லாந்து, போத்துக்கல், நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா, இந்தியா, இலங்கை ஆகிய 18க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 300 போட்டியாளர்களுக்கு மேல் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.


அனைவருக்கும் (Happy New Year 2025) இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இந்த புத்தாண்டு அனைவர் இல்லங்களிலும் உள்ளங்களிலும் பெரு மகிழ்ச்சி, மன அமைதி பல்கிப் பெருகட்டும். அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள். சமத்துவம் தழைக்கட்டும். அறம் வெல்லட்டும்,


சொற்கோ வி.என்.மதிஅழகன்- தமிழ் ஒலிபரப்பில் பொற்காலப்பதிவு ” நூல் அறிமுக விழா

தமிழ்பேசும் நல்லுலகத்தின் புகழ்பூத்த பெரும் தமிழ் அறிவிப்பாளர் திரு வி.என்மதியழகன் அவர்களின் “சொற்கோ வி.என்.மதிஅழகன்- தமிழ் ஒலிபரப்பில் பொற்காலப்பதிவு ” நூல் அறிமுக விழா கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவில் ஸ்காபறோ நகரசபை மண்டபத்தில் இணையத்தின்
தலைவர் அகணி சுரேஸ் அவர்களின் தலைமையில் இருபத்திமூன்றாம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 01:30 மணிக்கு தமிழர்களால் நிறைந்து வழிந்த ஒன்றாக வெற்றிகரமாக
நடைபெற்றது.


உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தில்!

உலகில் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடுகள் பட்டியலை தற்போது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பு வெளியிட்டுள்ளது.

உலகில் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது என்று கேட்டால் பலரும் அமெரிக்கா, இங்கிலாந்து என பதிலளிப்பார்கள்.

ஆனால் அமெரிக்காவையும், இங்கிலாந்தையும் பின்னுக்கு தள்ளி பல நாடுகள் கல்வி அறிவில் முன்னிலை வகிக்கின்றன.


அனைவருக்கும் (Happy New Year 2024) இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ஆங்கில புத்தாண்டு உலகில் உள்ள அனைத்து மக்களும் மகிழ்ச்சியாக வரவேற்கும் ஒரு இனிய நாளாகும். குறிப்பிட்ட மக்கள் மட்டும் இதனை வரவேற்பார்கள் என்று நாம் சொல்ல முடியாது. அனைத்து மக்களும் ஆவலாக அவர்களுடைய புது வருடத்தின் நாளை வரவேற்க தயாராக காத்திருப்பார்கள்.


கரம்பொன் அருள்மிகு சீரடி சாய்பாபா ஆலய விசேஷ பூஜைகள்

கரம்பொன் சுருவில் வீதியில் ஸ்ரீ பொன் சாயியாக வீற்றிருக்கும் சீரடி சாயி ஆலயத்தின் வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றி லண்டனில் வசித்து வரும் திருமதி. கமலா பாலசுப்பிரமணியம் அவர்கள் ஆலயத்திற்கு சென்று ஆலயத்தின் மகிமை பற்றி விபரமாக உரையாற்றினார். இன்று கரம்பொன் சீரடி சாயி இல்லத்திலே ஸ்ரீ பொன்சாயி தொண்டர்களின் சேவையானது மிகவும் சிறப்பான ஒன்றாக அமைகிறது.


‘விலா கருணா’ மூத்தோர் இல்லம் நடத்திய ‘சந்தியாராகம்’ சுப்பர் சிங்கர் போட்டி நிகழ்ச்சி

கனடாவில் நீண்ட காலமாக இயங்கிவருபவதுடன் தமிழ் பேசும் மூத்தவர்களின் உடல் நலம் குன்றிய நாட்களில் அவர்களைப் பராமரிக்கும் அற்புதமான மனித நேயப் பணியை மேற்கொண்டு வரும் திருமதி இந்திராணியின் ‘விலா கருணா’ மூத்தோர் இல்லம் நடத்திய ‘சந்தியாராகம்’ சுப்பர் சிங்கர் போட்டி நிகழ்ச்சி கடந்த 16ம் திகதி சனிக்கிழமை ஒன்றாரியோ இசைக் கலா மன்றத்தின் கலா மண்டபத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


கரம்பன் திருமதி சாரதா பரநிரூபசிங்கம் அவர்கள் எழுதிய “ அம்மு அம்மாவுக்குச் சொன்ன” நூல் வெளியீட்டு விழா 2023

கடந்த ஞாயிறு 22/01/2023 அன்று மேலைக் கரம்பனைச் சேர்ந்த திருமதி சாரதா பரநிரூபசிங்கம் அவர்கள் எழுதிய “ அம்மு அம்மாவுக்குச் சொன்ன” என்று தலைப்பிட்ட கவிதை நூல் ஸ்கார்புரோ ஒன்ராறியோ கனடாவில் வெளியீடு கண்டது. அமானா மகாநாட்டு மண்டபத்தில் நூற்றுக்கும் அதிகமான பார்வையாளர்களும் , அபிமானிகளும் கலந்துகொண்டிருக்க விழா வெகுவிமரிசையாக ஆரம்பித்தது.