யாழ் இந்துக் கல்லூரி மாணவர்கள் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் சாதனை

கல்வி பொது தராதர சாதராண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியதை தொடர்ந்து யாழ் இந்துக் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து யாழ்.இந்துக்கல்லூரி மாணவர்கள் 99 சதவீதம் சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதனைப்படைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.


யாழ் இந்துக் கல்லூரிக்கும் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கும் இடையில் நடைபெற்ற 11வது ஆண்டு துடுப்பாட்டப்போட்டி!

JHC & CHC 2022-1aஇந்துக்களின் பெரும்சமர் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கும், கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரிக்குமிடையிலான 11ஆவது துடுப்பாட்ட போட்டி சமநிலையில் முடிவுற்றது.

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டிகள் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் இடம்பெற்றன.


கரம்பொன் சீரடி சாயி இல்லத்தின் தமிழ் புதுவருட கொண்டாட்டமும், நன்றி வழங்கலும்!

Araneri students-1bகரம்பொன் சீரடி சாயி இல்லத்தில் தமிழ் புதுவருட தினமான இன்று 14-04-2022 வியாழக்கிழமை பக்தர்கள் கூடி சந்தோஷமாக கொண்டாடி மகிழ்ந்தார்கள். அத்துடன் திருவாளர் சோமசுந்தரம் கனகநாதன் (குமரன்) அவர்கள் தான் பிறந்த கரம்பொன் ஊரின் வளர்ச்சிக்காக கனடாவிலிருந்து சென்று சாயி தொண்டாற்றிய அவரது சேவைக்காக குழந்தைகளும் ஏன் பெரியவர்களும் கூட எங்கள் 'சாயி அப்பா' என வாழ்த்தி அவருக்கு நன்றியுரை கூறி, மீண்டும் மீண்டும் கரம்பொன் சீரடி சாயி இல்லத்திற்கு வருகை தந்து தங்களுக்கு அன்பு வழிகாட்டும்படி வேண்டி பயணம் அனுப்பி வைத்தார்கள்.


கலாநிதி செ.திருநாவுக்கரசு அவர்களால் வெளியிடப்பட்ட ‘தமிழ் வளர்த்த தீவகச் சான்றோர்கள்’ வாழ்க்கை-இலக்கிய-வரலாற்று ஆவண நூல்

book1aஅல்லைப்பிட்டி மண்டதீவைச் சேர்ந்த கலாநிதி செ.திருநாவுக்கரசு என்ற தனிமனிதனின் முயற்சியால் 1289 பக்கங்கள் கொண்ட 'தமிழ் வளர்த்த தீவகச் சான்றோர்கள்' என்ற வாழ்க்கை-இலக்கிய-வரலாற்று ஆவண நூலை வெளியிட்டுள்ளார். இந்நூலில் அவர் 109 தீவகச் சான்றோர்கள் பற்றி எழுதியுள்ளார்கள். ஊர்hவற்றுறையிலிருந்து 9 சான்றோர்கள் பற்றியும், மண்டைதீவு அல்லைப்பிட்டியிலிருந்து  13 தமிழ் சான்றோர்கள் பற்றியும், சரவணை பள்ளம்புலத்திலிருந்து 8 தமிழ் சான்றோர்கள் பற்றியும், வேலணையிலிருந்த 17 தமிழ் சான்றோர்கள் பற்றியும்,புங்குடுதீவிலிருந்து 14 தமிழ் சான்றோர்கள் பற்றியும், நயினாதீவிலிருந்து 15 தமிழ் சான்றோர்கள் பற்றியும், நெடுந்தீவிலிருந்து 8 தமிழ் சான்றோர்கள் பற்றியும்,


மருத்துவப் படிப்பில் 13 தங்கப் பதக்கம்: இலங்கை தமிழ் பெண் தர்ஷிகா சாதனை!

tharshika1-13.jpgகொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட பட்டமளிப்பு விழாவின் போது, முதன்நிலை மற்றும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட பட்டதாரிகளுக்கென வழங்கப்படும் 37 தங்கப் பதக்கங்களில் 13 பதக்கங்களை பெற்று தமிழ் பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.இலங்கையின் கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த தர்ஷிகா தணிகாசலம் என்பவரே இந்த வியப்பு மிகுந்த சாதனையை நிகழ்தியுள்ளார்.


அதிசய குணம் கொண்ட ஐந்தறிவு சிறிய பறவை…மனிதர்களுக்கு கற்றுக்கொடுக்கும் பாடம்!

Barn-Swallow1aபார்ன் சுவாலோ  (Barn Swallow ) இது ஆர்ஜென்டினா நாட்டிலே வாழும் ஒரு அதிசய பறவையினம் , ஐந்தறிவு ஜீவனான சின்னஞ்சிறு பறவையினம் தான் ஆனால் , இதனிடம் மனிதர்களாகிய நாம் படிக்க வேண்டிய பாடம் ஏராளம்.

தன்னம்பிக்கை , தைரியம் , முயற்சி , சாமர்த்தியம் என்று பல தகைமைகளை தன்னகத்தே கொண்ட இக்குருவி  (Barn Swallow ) , மனித படைப்பிற்கான இறைவனின் இன்னொரு பாடமாகும்.


ஊர்காவற்துறை அரசினர் வைத்தியசாலைக்கு Interferential therapy machine”பிசியோதெரபி” உபகரணம் அன்பளிப்பு!

interferential therapy machine1aகடந்த வாரம் ஊர்காவற்துறை அரசினர் வைத்தியசாலைக்கு அங்குள்ள மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அத்தியாவசியமாக தேவைப்பட்ட (தசை, நரம்பு சிகிச்சைக்கு உதவும் இயந்திரம்) Interferential therapy machine "பிசியோதெரபி" உபகரணத்தை "ஸ்ரீ பொன்சாயி சேவையின்" ஆதரவாளர்களான அமரர்கள் குமாரசாமி அருளமணி அவர்களின் (கரம்பொன் தெற்கை பிறப்பிடமாகவும் கனடாவில் வசித்து வருபவர்களான)  குடும்பத்தினர் கொள்வனவு செய்ய உதவினார்கள்.


வாட்ஸ் ஆப்பிற்கு நிகரான செயலியை உருவாக்கிய 15 வயதேயான யாழ் இந்து கல்லூரி மாணவன் !

Makiliniyan

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் நக்கீரன் மகிழினியன் என்ற 15 வயது மாணவன் வாட்ஸ்அப் மற்றும் வைபர் போன்ற செயலிகளுக்கு இணையான புதிய செயலி ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

mSQUAD என்ற செயலி தொலைத் தொடர்பாடல் துறையில் ஒரு முக்கியமான செயலியாக தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சிறுவயதில் இருந்தே மென்பொருள் விஞ்ஞானியாக வர வேண்டும் என்று தனது கல்வியைத் தொடர்ந்த இந்த மாணவன் கடந்த ஒரு மாத காலமாக நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருந்த பயணத் தடையினை சிறந்த முறையில் பயன்படுத்தி வீட்டில் இருந்து இந்த புதிய செயலியை கண்டுபிடித்துள்ளார்.


யாழ்ப்பாணம் சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவன் கணிதப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

thanraj2020 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய, யாழ். சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவரான சேர்ந்த தனராஜ் சுந்தர்பவன் அகில இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

2014 ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெற்ற கணித ஒலிம்பியாட் போட்டியிலும் தனராஜ் சுந்தர்பவன் பதக்கம் வென்று சாதித்திருந்தார்.


கரம்பொன் கண்ணகி அம்மன் ஆலயத்தில் இன்று சித்ரா பௌர்ணமி தினத்தில் நடைபெற்ற சித்திரைக் கஞ்சி மற்றும் அன்னதான நிகழ்வு! 

Amman1aகாவலூரில் உள்ள கரம்பொன் கிராமத்தில்; கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் கண்ணகி அம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி தினமான இன்று 26-04-2021 திங்கட்கிழமை விசேஷ பூஜைகளுடன் வெகு விமரிசையாக அன்னதான நிகழ்வும், சித்திரைக் கஞ்சி நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.

நம்மைப் பெற்று, சீராட்டி வளர்த்தெடுத்த தாயாரை அவர் மறைந்த பின்பும் நன்றியுடன் நினைவு கூரும் நாளான இந்நாளில் விரதமிருந்து வழிபாடு செய்வதன் மூலம் தாயின் தூய்மையின் பெருமையை மனதிலிருத்தி அவரது ஆன்மா இறைவன் திருவடியில் அமைதி பெற இறைவனைத் தொழும் நாளாகவும் சித்ரா பவுர்ணமி தினம் அமைகின்றது.