“கலை, இலக்கியம் என்பனவற்றின் இன்றியமையாத பண்புகளிலொன்று மனித நேய உணர்வாகும். இவற்றைப் படைக்கும் கலைஞர், இலக்கியக்காரர் ஆகியோர் தம்மளவிலும் இவ்வுணர்வை உடையவர்களாகவே திகழ்வர் எனச்சமுதாயம் எதிர்பார்ப்பது இயற்கையே. ஆயினும் பெரும்பான்மையான கலைஞர், இலக்கியக்காரர் ஆகியோரிடம் இவ்வுணர்வை நிறைவாக நாம் கண்டுகொள்ள முடிவதில்லை. ஓரு சிலரிடம் அதனை நாம் முழுமையாக அவதானிக்க முடிகிறது. அத்தகைய மிகச் சிலருள் ஒருவர் நம் மத்தியில் வாழும் இலக்கியவாதி என இன்று மாலை தனது 94 ஆவது அகவையில் ( 28.01.2021) மறைந்த டொமினிக் ஜீவாவைப் பற்றி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் கலாநிதி சு.வித்தியானந்தன் புகழ்ந்துரைத்துள்ளார்.
கட்டுரைகள்
Google ஐ மடக்கி யாழ் இந்துக் கல்லூரி மாணவன் சாதனை!
அன்றாடத் தேவைகளில் ஒன்றாக மாறியிருக்கிறது கூகுள் நிறுவனம். தேடி பொறியாக இருக்குக் கூகுளை பயன்படுத்தாதவர்கள் இல்லை என்கிற அளவிற்கு ஒட்டுமொத்த உலக மக்களையும் தன்னகத்தை வைத்திருக்கிறது.
யாழ் இந்துக் கல்லூரியில் உயிரியல் பிரிவில் கல்வி கற்கும் மாணவன் நித்தியானந்தன் மாதவன் சர்வதேச ரீதியில் நடாத்தப்பட்ட Google Code-In 2019 போட்டியில் Grand Prize Winner பட்டத்தை வென்றுள்ளார்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் (“பாடும் நிலா”) எனும் சகாப்தம்..
வைகறை முதல் வான் நிலவு மறையும் வரை இசை ரசிகா்களின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் ஒலிக்கும் காந்தக் குரலுக்குச் சொந்தக்காரா் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
காதல், பிரிவு, நட்பு, சோகம், தாபம் என தனி மனித வாழ்வின் எல்லா தருணங்களிலும் ஏதோ ஒரு பாடல் மூலம் நமக்குத் துணை நிற்கும் எஸ்பிபியின் குரல். அதனால்தான் எத்தனையோ பாடகா்கள் வந்தாலும், எஸ்பிபிக்கு மட்டும் மக்கள் மனதில் எப்போதும் நீங்கா இடம் இருப்பதாகக் கூறுகின்றனா் திரை விமா்சகா்கள்.
சைவசித்தாந்தத்திலும் தமிழிலும் மற்றும் சமயம் சார்ந்த ஒப்பியல் துறையிலும் புலமைத்துவமிக்க மறைந்த ஆசான் ஆறுமுகம் சபாரத்தினம் அவர்களுக்கு சமர்ப்பணம்!
சைவசித்தாந்தத்திலும் தமிழிலும் மற்றும் சமயம் சார்ந்த ஒப்பியல் துறையிலும் புலமைத்துவமிக்க ஆறுமுகம் சபாரத்தினத்துக்கு யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் கௌரவ முதுமாணிப் பட்டத்தை வழங்கிக் கௌரவித்துள்ளது. அவ்விழாவில் அப்போது கலைப் பீடாதிபதியாக இருந்த பேராசிரியர் ப. கோபால கிருஷ்ண ஐயர் அவர்கள் இவரை அறிமுகம் செய்து வைத்த போது வழங்கிய உரையைக் கீழே பிரசுரிக்கிறோம்.
ஆசான் திரு. ஆ சபாரத்தினம் அவர்கள் நாரந்தனையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆறுமுகம், அன்னம்மா அவர்களின் கடைசி மகனாவார். இவரது மூத்த தமக்கையார் கரம்பொன்னில் திருமணம் முடித்திருந்த படியால், இவருக்குக் கரம்பொன் தொடர்பு கல்வி பயிலும் காலத்தில் ஏற்பட்டது. பின்னர் ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் பாடசாலையில் ஆசிரியராக இருந்தமையாலும், கரம்பொன்னில் திருமணம் செய்தமையாலும், சண்முக நாத மகா வித்தியாலயத்தில் அதிபராக இருந்தமையாலும் இவர் கரம்பொன்னிலேயே வாழ்ந்து வந்தார்.
கொரோனா வைரஸின் தொடக்கமும் அதன் தொடர்ச்சியும்.. -குரு அரவிந்தன்
உலகரீதியாக எடுத்துப் பார்ப்போமேயானால் 215 நாடுகளில் கொரோனா வைரஸ் இதுவரை பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. உலகநாடுகளைச் சேர்ந்த 15,550,133 பேர் இதுவரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கொரோனா வைரஸின் பாதிப்பால் இதுவரை 633,372 மரணமடைந்திருக்கிறார்கள். 9,457,782 பேர் நோயில் இருந்து குணமடைந்து இருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் ஏதோ ஒரு வடிவத்தில் புதிய வைரஸ்சுகள் உருவாகிக் கொண்டே இருப்பதால் கொரோனா வைரஸை அடையாளம் காண்பதற்காக, 2019 ஆம் ஆண்டு முதன் முதலாக அடையாளம் காணப்பட்டதால் கோவிட்-19 என்று பெயரிட்டிருக்கிறார்கள்.
இந்திய மண்ணில் இனிதே ஒலிக்கும் ஈழத்தின் இன்னுமொரு இனியகுரல் சின்மயி!
ஈழத்தின் இன்னுமொரு இளவரசியாய், மிகப் பிரபலமான விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் ஈழத்தமிழரின் இசைக்குரலாய் ஒலித்துக் கொண்டிருக்கும் இசைக்குயில் சின்மயி சிவகுமார். கணீரென்று இதமாய் ஒலிக்கும் இனிய குரல், அழகான சிரிப்பு, எதற்காக இந்திய மண்ணில் காலடிவைத்து இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றுக் கொண்டிருக்கின்றோம் என்ற தெளிவோடும், முயற்சியும் உறுதியும் நிறைந்த கண்களோடும் தோன்றும் சிறுமி. பலப்பல தடைகள் சோதனைகளைத் தாண்டி இன்று இறுதிப்போட்டிக்கு நேரடியாகத் தெரிவாகியுள்ள முதல் மூன்று போட்டியாளர்களுள் ஒருவராக எமக்கெல்லாம் பெருமை சேர்த்திருக்கிறார்.
Musical Blendx நிகழ்ச்சி மூலம் இருபதாயிரம் டாலர்கள் ரொறன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கை நிதிக்காக வழங்கப்பட்டது
கனடாவில் இயங்கி வரும் இரண்டு அமைப்புக்களான Veenalayam Temple of Music மற்றும் Toronto Voice of Humanity ஆகியன இணைந்து நடாத்திய Musical Blendx என்னும் இசை நிகழ்ச்சி மூலம் இருபதாயிரம் டாலர்களை ரொறன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக சேகரித்து வழங்கப்பட்டன.
நாட்டிய கலா சேஸ்த்திரா நடனப் பள்ளியின் 17வது ஆண்டுவிழா!
கனடாவில் கடந்த பல ஆண்டுளாக வெற்றிகரமாக இயங்கிவரும் நாட்டிய கலா சேஸ்த்திரா நடனப் பள்ளியின் 17வது ஆண்டுவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்காபுறோ சீனக் கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மாகாண பாராளுமன்ற உறுப்பினர் திரு லோகன் கணபதி உட்பட பல விருந்தினர்கள் கலந்து சிறப்பித்த இந்த ஆண்டு விழாவில் நடனப் பள்ளியின் நிறுவனரும் குருவுமாகிய ஸ்ரீமதி தேனுஜா திருமாறனை அழைக்கப்பட்ட சிறப்பு விருந்தினர்கள் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவித்தார்கள்.
இனிய நந்தவனம் இதழ் தனது மார்ச் மாதம் 2019 ஆண்டு இதழைக் கனடா மலராக வெளியிட்டிருக்கின்றது
தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் இனிய நந்தவனம் இதழ் தனது மார்ச் மாதம் 2019 ஆண்டு இதழைக் கனடா மலராக வெளியிட்டிருக்கின்றது. கனடிய இலக்கியத்தில் ஈடுபாடு கொண்ட சிலரின் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதை, நேர்காணல், விமர்சனம் போன்ற ஆக்கங்கள் இந்த மலரில் இடம் பெற்றிருக்கின்றன. சர்வதேசம் அறிந்த கனடிய எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் 50 ஆண்டுகள் இலக்கிய சேவையைப் பாராட்டி, அவரைக் கௌரவிக்கும் முகமாக அவரது படத்தை தனது இதழில் அட்டைப்படமாக வெளியிட்டு கௌரவித்திருக்கின்றார் நந்தவனம் ஆசிரியர் திரு. த. சந்திரசேகரன் அவர்கள்.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி கனடா பழைய மாணவர் சங்கத்தின் Annual Gala Dinner-2019
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி கனடா பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த இராப்போசன ஒன்று கூடல் விழா (Annual Gala Dinner-2018) ஸ்காபுரோவில் அமைந்துள்ள கொன்வென்சன் விழா மண்டபத்தில் 04-20-2019 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
