அவதானியின் கவிதைகள்…!

வேறொன்றுமில்லை……✍️

உரையாடல்கள் வேண்டும்
நல்லோருடன் நல்லோர்களென தம்மை எண்ணிக் கொண்டிருப்பவர்களுடன் அசத்தலான புத்திசாலிகள்
சூட்சுமமான புத்திஜீவிகள் என….

இவர்களில் எவரிடம் எங்களை நாங்கள்
எங்ஙனம் பொருத்த முடியுமென்பதை
அறிந்து கொள்ள இவர்களுடனான
உரையாடல்கள் வேண்டும் அவர்கள்
வார்த்தைகளை உட்கொள்ள வேண்டும்


இலைசொரியும் இயற்கை அழகு! – மரபுக் கவிதைப் பாவலன் தேசபாரதி-தீவகம் வே.இராஜலிங்கம்

thesa-paarathyஉதிருங் காலத்தும் உயிருள்ள அழகு!
காலத்தை வென்ற கனடியம்!

பூக்களாய் இருந்த மேனி
பிரிகின்ற போதும் அந்த
ஆக்கமும் அறிவும் கூடி
ஆகிடும் அறிஞன் போலே
வீக்கமாய் மரத்துக் காகி
விருட்சமாய்ப் பழுத்துப் பின்பு
பூக்களாய்த் தோன்றும் இந்தப்
பொழுதிலும் அழகு என்னே!


நீயே நான்!

thai1அணுவாய் அலைந்த என்னுடலை- அடக்கி 
அண்டம் விழுங்கச்
சுமந்தவளே!

கனவில் என்னை நினைத்துக்கொண்டு-தினம்
கருவில் என்னை
வளர்த்தவளே!

அலுங்கிக் குழுங்கி நடக்காமல்-என்
அங்கம் வளரப்
பொறுத்தவளே!


அம்மா…. திருமதி. ரமோனா

விடிந்தது முதல் மீண்டும் படுக்கைக்கு
செல்லும் வரை முடிவிலி போல் நீண்டு
செல்லும் வேலைகள் சுமைகள்
அலுக்காமல் சலிக்காமல் அனைத்தும் செய்து 
இரவில்  பல்துலக்கி உடல்கழுவி
படுக்கைக்கு செல்லும் முன் சில
கணங்கள் ஒரு சில கணங்கள்
மட்டுமாவது தலைசாய்க்க உன் 
மடியும் தலை கோத உன் விரல்களும் 
தேடி தவியாய் தவிக்கிறது மனது….


நெஞ்சின் வருடல்கள்.

எந்தையும் தாயும் கூடிக்குலவி
சொந்தமுடன் நம் மண்ணில்
மனை மக்கள் நலனே என்று
மகோன்னதமாய் வாழ்ந்த நிலை
மந்த மாருதம் போல்
நெஞ்சை மெல்ல வருட
பந்த பாசங்களுடன் கூடி
பள்ளி சென்ற பருவம் – இன்றும்
சந்திரப் பிம்பமாய் கண்ணில் 
காட்சியளிக்கின்றதே..


அதோ அந்தப் பறவைகள் போல.

குளிர்… குளிர்… குளிர்…
கதிரவன் கனடாவில் தன்
கடமையைக் குறைத்துக் கொண்டான்
காரிருளின் காலம் அதிகமாகியது
பறவைகள் பறக்கின்றன அவை
பரவசமாய் பாடிப்பாடிக் கொண்டு பறக்கின்றன..


பூரணமாணவளே தாயே!

அன்னை ..
என்னைப் படைத்ததால்…
உயர்ந்தாளில்லை
தன்னைத் தேய்த்ததால்
தாழ்ந்தாளுமில்லை!

அன்பைப் பேணி
பண்பைப் போற்றி
மண்ணில் வாழ்ந்ததால் – இன்றும்
கண்ணில் வாழ்கிறாள்


நெஞ்சில் மோதும் நினைவலைகள்

கத்தும் கடலோசை
காற்றில் மிதந்து வரும்
கடுகி வரும் கப்பலெல்லாம்
காவலூரை நாடி வரும் –
கணபதீஸ் வரத்தான் களிநடம்புரிய
கண்ணகியின் சிலம்பொலி கணீரென்று ஜதிபேசும்
தேவன் கடவையிலும் – செபஸ்ரியானிலும்


புற்று நோய்த் தடி..

     என்னருமைத் தோழா!
     மயக்கத்தில்
     புற்றுநோய்த் தடியின்
     புகை மண்டலத்தில்
     பூரிப்பா?

     வட்டப் புகை விட்டு
     ஆயுளின் நீட்டம் குறைத்து
     சூழ்ந்தோரின் சுகம்
     சிதைப்பதில்
     புதுச் சுகமா?