ஓல்ட் ஈஸ் கோல்ட்..’ OLD IS GOLD

oldisgoldமுதுமை என்பது வாழ்க்கையில் உரிய வயதில் தானாகவும், தவறாமலும் வந்து விடும் ஒரு விடயம். நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, ஆண்டொன்று போனால் வயதும் ஒன்று கூடுதல் ஆகவே செய்யும்.
அதுமட்டுமல்ல, இன்றைய இளமையும் நாளைய முதுமையை நோக்கிப் பயணமாகும் படிக்கட்டின் ஆரம்பமே! இதைப் புரிந்து கொண்டு விட்டால் ''அந்தப் பெரிசுக்கு சொன்னால் விளங்காது'' என்று இளையவர்களும், ''நான் சொல்லுவதைக் கேட்கவே மாட்டீர்கள்'' என்று முதியவர்களும் புலம்புவதற்கு இடமேயில்லை.
சில நடைமுறை விஷயங்களை இரு தரப்பாருமே பின் பற்றினால் பிரச்சனைகளைக் குறைக்கலாம்.


சிந்தனைத் துளிகள்..

வலியிலும், வேதனையிலும் வருவதுதான் வீரம். 
வாழ்க்கையில் எல்லாம் நல்ல விதமாக அமைந்து விட்டால்,
நீ ஒரு பெரிய கோழையாகத்தன் இருப்பாய்!

மனிதன் கல்லை விட கடினமானவன். 
அதே சமயம், ரோஜா மலரை விட மென்மையானவன்!


சீரிய சிந்தனைத் துளிகள்

அறிவு அடக்கம் அஞ்சாமை கொடுக்கும் குணம் உங்களிடம் இருக்குமானால் உங்களுக்கு வேண்டாதவர்கள் இந்த உலகில் இல்லை.

நாம் எவ்வளவு நாள் வாழ்கிறோம் என்பது முக்கியமல்ல எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம்.

வாழ்க்கையில் காணப்படும் துன்பங்களைக் கண்டு பயந்து அவற்றைப் பொல்லாதவை என்று மதிப்பிடுபவர்கள் வெறும் கோழைகளே.

வாழ்க்கை பின்னுக்குப் போவதுமில்லை நேற்றோடு நின்று விடுவதுமில்லை.