மரண அறிவித்தல்: திரு.அரியரட்ணம் மரியதாஸன் சவரிமுத்து

அன்னையின் மடியில் 10-03-1938
ஆண்டவன் அடியில் 26-04-2026

யாழ். கரம்பொன் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா வுழசழவெழ வை வதிவிடமாகவும் கொண்ட அரியரட்ணம் மரியதாஸன் சவரிமுத்து; 26-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சவரிமுத்து மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற டெய்சி அன்னமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

லீனா லூட்ஸ்(சாந்தி), கமல்ராஜ்(ராஜூ), பெனில்டஸ்(மனோஜ்), மரீனா சுகந்தி காலஞ்சென்ற யூட் மரியோஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,


மரண அறிவித்தல்: திருமதி. இராசையா ருக்குமணி

அன்னையின் மடியில் 26-01-1931
ஆண்டவன் அடியில் 02-04-2026

யாழ். கரம்பொன் தெற்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட இராசையா ருக்குமணி அவர்கள் 02-04-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து பொன்னமுத்து அன்னம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும்,

காலஞ்சென்றவர்களான நாரந்தனையைச் சேர்ந்த வைத்திலிங்கம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசையா(பிரபல வர்த்தகர் தம்பதெனியா கிரிபுல்லை) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

மகிந்தன்(கனடா), மஞ்சுளா(இலங்கை), மகேந்திரன்(கனடா), மாவீரன் மனோகரன், மதிதேவி(இலங்கை), மாவீரன் மதியழகன், ஆகியோரின் பாசமிகு தாயாரும்,


மரண அறிவித்தல்: திருமதி. செல்வலெட்சுமி இரத்தினம்

அன்னையின் மடியில் 28-05-1938
ஆண்டவன் அடியில் 22-05-2026

யாழ். கரம்பொன் மேற்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Milton ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வலெட்சுமி இரத்தினம் அவர்கள் 22-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை நாகரெத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இரத்தினம் கந்தையா அவர்களின் பாசமிகு மனைவியும்,

பாலரஞ்சினி(வபா-ஐக்கிய அமெரிக்கா), பாலரோகினி(வபி-ஜேர்மனி), ஸ்ரீவரதன்(ராஜூ-கனடா), நிவா(கனடா), மாலினி(பேபி-கனடா), காலஞ்சென்ற திருச்செந்தூரன்(ரமேஸ்) மற்றும் ஆதிமூர்த்தி(ரதீஸ்-கனடா), ஆகியோரின் அன்புத் தாயாரும்,


மரண அறிவித்தல்: திரு. அருளானந்தம் சண்முகானந்தம்

அன்னையின் மடியில் 18-10-1951
ஆண்டவன் அடியில் 24-03-2026

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Humberg, Wenden ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருளானந்தம் சண்முகானந்தம் அவர்கள் 24-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று ஜேர்மனியில் இறைபதம் அடைந்தார்.

காலஞ்சென்றவர்களான அருளானந்தம் முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கரம்பொன் கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற செல்வமணியின் ஆருயிர் கணவனும்,

தர்மிலா(முனைவர்(PhD), தீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Link for the funeral:


மரண அறிவித்தல்: திருமதி. செல்வமணி (மணி) சண்முகானந்தம்

அன்னையின் மடியில் 18-09-1950
ஆண்டவன் அடியில் 21-03-2026

யாழ். கரம்பன் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட செல்வமணி (மணி) சண்முகானந்தம் அவர்கள் 21-03-2026 சனிக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான அருளானந்தம் முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சண்முகானந்தம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

தர்மிளா, தீபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,


மரண அறிவித்தல்: திரு. ராமநாதன் உதயகுமார்(உதயன்)

அன்னையின் மடியில் 14-05-1968
ஆண்டவன் அடியில் 17-02-2026

யாழ். கரம்பொன் தெற்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarbrough வை வதிவிடமாகவும் கொண்ட ராமநாதன் உதயகுமார் அவர்கள் 17-02-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ராமநாதன் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சோதிநாதன் வாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயதேவி(ஜெயந்தி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சாரினி அவர்களின் பாசமிகு தந்தையும்

மஞ்சு, வனிதா, சாந்தி, நடா, நந்தினி, சுபா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,


மரண அறிவித்தல்: திரு. இராமலிங்கம் சண்முகநாதன்(துரை)

அன்னையின் மடியில் 17-06-1952
ஆண்டவன் அடியில் 01-02-2026

யாழ். கரம்பொன் தெற்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Heilbronn, கனடா Scarbrough வை வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் சண்முகநாதன்(துரை) அவர்கள் 01-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் ஜானகி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான நல்லையா பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தி (வனிதா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

வினோத், வித்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

லவன்னேதாஜி அவர்களின் அன்பு மாமனாரும்,

அஷ்சானி, லவிசா, ஆரித்தியா, அர்வின் ஆகியோரின் அன்புப் பேரனும்,


மரண அறிவித்தல்- திருமதி. தனலெட்சுமி ஆறுமுகம்

அன்னையின் மடியில் 01-04-1927
ஆண்டவன் அடியில் 04-01-2026

யாழ். கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வதிவிடமாகவும் கொண்ட தனலெட்சுமி ஆறுமுகம்; அவர்கள் 04-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னையில் இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற ஆறுமுகம்; அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பூமணி பாலசிங்கம், செல்வபாக்கியம் ராஜதுரை(செல்வம் ரீச்சர்), பாலசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுதந்திரா(திருப்பதி), காலஞ்சென்ற திருநீலகண்டன் மற்றும் செந்தில்நாதன், சபாநாதன், உதயகுமார், மதிவதனி, ஜமுனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,


மரண அறிவித்தல்- திருமதி. சுகந்தா சிவலிங்கநாதன்

Indian Overseas Bank,  Colombo-1


அன்னையின் மடியில் 21-12-1959
ஆண்டவன் அடியில் 04-01-2026

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும், தற்போது லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சுகந்தா சிவலிங்கநாதன் அவர்கள் 04-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற செல்வநாயகம்;, பரமேஸ்வரி(பூபதி-கனடா) தம்பதிகளின் மூத்த புதல்வியும்,


மரண அறிவிதத்தல் – அமரர் அருணாசலம் இராஜேந்திரன்

அன்னையின் மடியில் 23-10-1959
ஆண்டவன் அடியில் 16-10-2025

யாழ். கரம்பொன் தெற்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியின் தலைநகர் பேர்லினை நீண்டகால வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் இராஜேந்திரன்; அவர்கள் 16-10-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான அருணாசலம் சத்தியபாமய தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற இராசையா, புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மாலினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஜனகன், ஜனனி, ஜானு ஆகியோரின் பாசமிகு தந்தையும்,