மகாளயத்தின் கடைசி அமாவாசை நாளான இன்று 17-09-2020 வியாழக்கிழமை கரம்பொன் சிவன் கோவிலில் மோட்ச அர்ச்சனை நடைபெற்றது

sivan temple1aமகாளயத்தின் கடைசி அமாவாசை நாளான இன்று 17-09-2020 வியாழக்கிழமை சிவன் கோவிலில் வம்சாவழியாக இருக்கும் ஜெயராம குருக்களின் சிரேஷ்ட புத்திரன் சந்திர குருக்களால் கரம்பொன் மண் மற்றும் வெளியூர் முன்னோர்களினதும் ஆசி வேண்டி ஊர்காவற்றுறையில் ஈழத்துக் காசிவிஸ்வநாதராக விளங்கும் கணபதீஸ்வரம் சிவன்கோவிலில் மோட்ச அரிச்சனையுடன் பிராமண தர்ப்பணமும் செய்தார்.

சண்முகநாதனின் பொன்னான நாட்கள்…

பதினால் பதிமூன்று?

எண்ணும் எழுத்தும் என எனது பாடசாலை வாழ்வு தொடங்கியது கரம்பொன் சண்முகநாத மகா வித்தியலயத்திலே. அரிவரி, நேர்சரி, பாலர் வகுப்பு என்றெல்லாம் அந்தக் காலத்தில் இருந்ததாக ஞாபகமில்லை. இருந்திருந்தாலும் எனது அம்மா வீட்டில் இருந்ததால் அதற்கெல்லாம் அனுப்பியிருந்திருக்க மாட்டார்கள். நான் வீட்டில் ஆக்கினை கொடுத்தேனோ என்னவோ, என்னை ஐந்து வயதில் பாடசாலையில் சேர்க்க எடுத்த முயற்சி, குறைவயது என்ற காரணத்தால் சரி வரவில்லை.

சண்முகநாத வித்தியாசாலை

கனகரத்தின சுவாமிகள் வழங்கிய காவி உடைதரிக்கும் முன்னதாக கல்விப்பணி மேற்கொள்ள முற்பட்டார். முதற்கண் தம் சொந்த ஊரில் சைவப் பாடசாலை இல்லாத குறையைப் போக்க அயராது முயன்றார். சுவாமிகளின் இடையறாத முயற்சியின் பயனாக கரம்பனைச் சேர்ந்த திருவாளார் ஆ. சோமசுந்தரம், வே. தம்பிப்பிள்ளை, குருநாதர் பொன்னையா, சீனிமுத்து, முருகுப்பிள்ளை, அம்பலவாணர் ஆகியோரின் துணை கொண்டு ஊரிலே வீடுகள்; தோறும் பிடியரிசிக் குட்டான் கொடுத்து இவ்விதம்; சேர்க்கப் பெற்ற அரிசியின் பணத்துடன் குஞ்சரி அம்மாள் நன்கொடையாக வழங்கிய பத்துப் பரப்புக் கொண்ட குஞ்சரி வளவில் 1917ம் ஆண்டளவில் 'சண்முகநாத வித்தியாசாலை' தொடங்கப்பட்டது.

தவத்திரு மகாதேவ சுவாமிகள்

mahadevaஈழத்தில் தமிழும், சைவமும் தழைத்தோங்க ஆன்மீகக் குருபரம்பரையொன்று தொடர்ந்து வந்த வண்ணமே இருக்கிறது. சான்றோர்கள் காலத்துக்குக் காலம் அவதரித்து தமிழ்ப்பணியும், சைவப் பணியும் புரிந்து வந்தமையால் சமய அறிவும், தமிழ் அறிவும் வளர்ச்சி பெற்று வந்துள்ளன. அவ்வழியில் வந்தவர்களுள் ஒருவர் ஊர்காவற்றுறை கரம்பொன் ஊரில் அவதரித்த தவத்திரு மகாதேவா சுவாமிகள் ஆவார்.

எமது கிராமம் – கரம்பொன்

ஊர்காவல்துறைக்கு அணித்தாய் உள்ள இடம் கரம்பொன். இதன் பழைய பெயர் கரம்பன் என்பதாகும். கல்வியாளர் இதனைத் திருத்திக் கரம்பொன் என எழுதினர். கரம்பொன் என்ற பெயரே இன்று பெரிதும் வழக்கிலுள்ளது.

village1இவ்வூரின் கிழக்கிலும், மேற்கிலும் முருகமூர்த்தி கோவில்கள் உள்ளன. கரம் பன்னிரண்டு உடையான் அருள்பாலிக்கும் இடம் இது என்றும், கரம் + பன்னிரண்டு என்ற சொற்களின் அடியாகவே கரம்பன் என்ற இடப்பெயர் தோன்றியது என்றும் விளக்கம் கூறப்பட்டுள்ளது.

இவ்வூரின் தென்எல்லையில் சுருவில், கிழக்கில் நாரந்தனை, வடபால் ஊர்காவல்துறையும் கடலும் அமைந்துள்ளன. இங்கு கிறிஸ்துராசாகோயில், புனித அன்னம்மாள் கோயில், அன்னை வேளாங்கன்னி கோயில், சின்னமடு மாதாகோயில் ஆகியனவும் உள்ளன.

சண்முகநாத வித்தியாசாலை நிறுவிய சன்மார்க்க குரு மகாதேவ சுவாமிகள்!

இயற்கைத் துறைமுகமாய் ஈழத்தின் வடபால்
இருந்து புகழூட்டும் ஊறாத்துறை துறைமுகம்
இயற்கைக் காற்றின் விசையால் இழுபட்டோடும்
இதரநாட்டு பாய்மர வத்தைகள் இக்கரையில்
இரவும் பகலுமாய் இறக்கியேற்றி பண்டங்களை
இலங்கு வணிகத்தில் வரலாறு படைத்ததன்று
இன்றது காவலூரென இனியபெயர் ஈட்டியதே!