பொன்மொழிகள் – 1

அடிக்கடி தவறு செய்கிறவன் அப்பாவி. ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்கிறவன் மூடன். ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை. தன்னையறியாமல் தவறு செய்து, தன்னையறிந்து திருத்திக் கொள்கிறவனே மனிதன்.

காலை நேரம் எப்படித் தோன்றுகிறதோ, மாலை நேரமும் அப்படியே தோன்றுகிறது. விடியும் பொழுதிற்கும், முடியும் பொழுதிற்கும் தோற்றத்தில் வேறுபாடில்லை. இன்ப துன்பங்களையும் அப்படியே நினைத்துவிடு. எந்தக் கட்டத்திலும் நீ அழவேண்டிய அவசியமிருக்காது.