வெளியில் எல்லாம் பேசலாம் -அகில்

நாட்டு நிலைமை காரணமாக சோபை இழந்து காணப்பட்ட இலக்கிய விழாக்களும், நூல் வெளியீடுகளும் மீண்டும் களைகட்டத் தொடங்கியிருந்தன. இணையத்தளம் ஒன்றில் வெளியாகியிருந்த சிறுகதை ஒன்றில் மூழ்கியிருந்த என்னை மனைவியின் குரல் உலுக்கியது.

“என்னப்பா இருக்குறீங்க. நூல் வெளியீட்டுக்குப் போகவேணும் எண்டனீங்கள்….. என்ன வெளிக்கிட இல்லையோ?” 

“மறந்தே போயிட்டனப்பா. நல்ல காலம் ஞாபகப்படுத்தினீர்” என்றபடி சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தேன்.


ஒரு அப்பா, ஒரு மகள், ஒரு கடிதம்! (குரு அரவிந்தன் – கனடா)

இரண்டு கடிதங்கள் வந்திருந்தன. ஒன்று அவர் எதிர் பார்த்துக் கொண்டிருந்த டி.என்.ஏ ரிப்போட், மற்றது அழகாக குண்டு குண்டாக அவருக்கு நன்கு பழக்கப்பட்ட கையெழுத்தில் முகவரி எழுதப்பட்டிருந்தது. ஊட்டி கான்வென்ட் ஹாஸ்டலிலிருந்டது எழுதப்பட்டிருந்த அக்கடிதத்தைத்தான் முதலில் பிரித்துப் படித்தார்.
'அன்புள்ள அப்பா" 


புல்லுக்கு இறைத்த நீர்..! (குரு அரவிந்தன் – கனடா)

தவிர்க்க முடியாமல் போயிருக்கலாம். எப்படியோ அவனை நேருக்கு நேரே சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் தற்செயலாக வந்துவிட்டது. 
எதிர்பாராமல் இப்படிச் சந்திக்கும் தர்மசங்கட நிலை ஏற்படும்போது சிலர் தெரியாதமாதிரி, கண்டும் காணாததுபோல முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டு அந்த இடத்தை விட்டு மெல்ல நழுவி விடுவதும் உண்டு. சிலர் வேறு வழியில்லாமல் ''சார் எப்படி இருக்கிறீங்க, சௌக்கியமா..?'' என்று பட்டும் படாமலும் குசலம் விசாரித்து விட்டு விலகிச் செல்வதும் உண்டு. இன்னும் சிலர் உண்மையாகவே குரு பக்தியோடு, நலம் விசாரிப்பதில் அக்கறையோடு நின்று நிதானமாக பேசுவதும் உண்டு.


சுமை.. (குரு அரவிந்தன் – கனடா)

(கனடியத் தமிழ் வானொலி (CTR) சர்வதேசரீதியாக நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற் பரிசு பெற்ற சிறுகதை இது.)

இரும்புக் கதவுகள் கிறீச்சிட்ட சத்தத்தில் நடேசுவிற்கு விழிப்பு வந்திருக்க வேண்டும். இருட்டுக்குள் பழகிப்போன குழிவிழுந்த கண்களுக்குள் வெளிச்சம் பாய்ச்சப்பட்டதும், கூச்சம் தாங்காமல் அவை தானாகவே இறுக மூடிக்கொண்டன. இமைகள் மூடிக் கொண்டாலும் காது மடல்கள் விரிந்து நெருங்கி வரும் கனமான பூட்ஸின் அதிர்வுகளை மௌனமாக உள்வாங்கிக் கொண்டன. ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவதற்கான எதிர்பார்ப்பில், இதயம் ஏனோ வேகமாகப் படபடவென்று அடித்துக் கொண்டது. மிக அருகே அதிர்வுகள் நிசப்தமாகிப் போனதால், பயத்தில் இதயம் இன்னும் வேகமாக அடித்துக் கொள்ள, தூங்குவது போலப் பாசாங்கு செய்ய முனைந்தான்.


தவறுகள் திருத்தப்படலாம்…(திருமதி வாலாம்பிகை சுப்பிரமணியம்)

அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு ப+ஜையை முடித்துக் கொண்டு கஸ்தூரி சமையறைக்கு வந்தாள் ஏற்கனவே சமையற் காரம்மா தயாரித்து வைத்திருந்த உணவு வகைகளை சாப்பாட்டு மேஜையில் வைத்து ஒழுங்கு படுத்தவும் அவள் கணவர் மூர்த்தி “கோர்ட்டுக்கு” போக ஆயத்தமாகி வரவும் சரியாக இருந்தது எப்போதுமே காலை உணவு வேளை மூர்த்திக்கு மகிழ்ச்சியாக ஆரம்பிக்கும். ஆரம்பிக்கவேண்டும். மங்களகரமான முகத்தில் குங்குமத் திலகத்துடன் வசீகரமான புன்னகையுடன் வளையல் குலுங்கும் கரத்தால் மனைவி பரிமாற அதை ரதிச்து புசிக்கும் அந்த காலை உணவு அவரது அந்த நாள் முழுவதுக்குமான புத்துணர்வை அவருக்கு வழங்குவதுண்டு. அன்றும் மனைவியுடன் இனிமையாக அளவளவாடியபடி சாப்பிடத் தொடங்கினார். அந்த நேரத்தில் வாசலில் கேட்ட குரல் கஸ்தூரியை வாசலை நோக்கி விரைய வைத்தது.


உன் கண்ணில் நீர் வழிந்தால.. (பிறேமலதா – கரம்பொன்)

சுட்டெரிக்கும் சூரியனின் வெம்மை தாளாமல் காற்றுக்கூட அசையமறுத்து நிற்கும் நிசப்தம் நிரம்பிய மதியப்பொழுது தகதகவென எரியும் மேனியில் கசகசத்து வழியும் வியர்வையினைத்   துடைக்கத் திராணியற்று எப்பவும் போல தனிமையின் துயரம் தொண்டையை அடைக்க கண்களை மூடியபடி கடுந்தவம் புரிந்தது அந்த அடிக்கல்(அத்திவாரக்கல்). அதன் தவத்தைக் கலைப்பது போல இடுப்பு மூட்டை யாரோ முட்டித்தள்ள “நேற்று பக்கவாட்டாய் இடித்ததில் விலா எலும்புகள் ஒருபக்கம் விலத்தி அதன் வேதனை இன்னும் தீரவில்லை இன்று இடுப்பில் பதம் பார்க்கின்றாளே இவளை இப்படியே விட்டு வைத்தால் இருந்த இடம் தெரியாமல் பண்ணி விடுவாள்..” சினத்துடன் சீறிப்பாயவென விழித்த கண்கள் வியப்பில் ஆழ்ந்தன.


தொடர்ந்து வரும் வலிகள்… (காவலூர் வரதன்)

உடலை உறைய வைக்கும் குளிர்காற்று குப்பென்று, திறக்கப்பட்ட காரின் கண்ணாடி ஜன்னல் வழியாக முகத்தில் அறைந்ததைக் கூட பொருட்படுத்தாமல் மாலா கனடாவின் 401 பெருந்தெருவில் காரை லாவகமாக ஓட்டிக் கொண்டு இருந்தாள். அவள் எதையும் பொருட்படுத்தியாகத் தெரியவில்லை கண்கள் தெறித்து விழும் அளவு குளிர் உடலில் பட்டது கூடத் தெரியாமல் இல்லை இல்லை பட்ட உணர்வு கூட இல்லாமல் அவள் சிந்தனை எங்கோ சிறகடித்துக் கொண்டு இருந்தது. அவள் மனம் காரைவிட, குளிர் காற்றைவிட வெகு வேகமாகப் பறந்து பறந்து சிந்தனையில் ஆழ்ந்து வேதனை உணர்வுகளால் குழம்பி இருந்தது, ஆனால் அவள் காரை ஓட்டிச் சென்ற விதம் அவளின் மன உறுதிக்கும் அவள் பட்ட அனுபவத்திற்கும் சான்று வழங்குவது போல் கட்டியம் கூறியது


அம்மாவின் நிழல்!

‘பொண்ணுடா அப்படியே உங்க அம்மா மாதிரி மூக்கும் முழியுமா என்னடா ஆனந்த் சத்தமே இல்லே..பொண்ணு பிறந்திட்டேனு கன்னத்திலே கையை வச்சி உக்காந்திட்டியா?’ பாட்டியின் குரலில் வழிந்த சந்தோஷத்தை அப்படியே நகல் எடுத்துக் கொள்ள முடியாமல் செல் போனை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு காரை ஸ்டார்ட் செய்தான்.

பொண்ணு பிறந்ததில் அவனுக்கு ஒன்றும் வருத்தமில்லை. ஆனால் என்ன காரணம் கொண்டும் தன் அம்மாவின் சாயலில் இருக்கக்கூடாது. இந்த நினைப்பே அவனை என்னவோ செய்தது.


அப்பாவின் கண்கள்

Appaa1ராத்திரி எல்லாம் அப்பாவோடுதான் இருந்தான் சங்கரன். பொட்டு தூக்கம்கூட இல்லை. அப்பா, இருமிக்கொண்டே இருந்தார். சங்கரனின் கை விரல்களைப் பிடித்து நகத்தைத் தடவியவாறே ஓரக்கண்ணால் பார்த்தார். ‘நகத்தை வெட்டுடா சங்கரா… படிக்கிற பையன் மாதிரியா இருக்க!’ என அப்பா சொல்லும் வழக்கமான வசவு, சங்கரனின் காதுகளில் ஒலித்தது.

நிரம்பியிருந்த மூத்திரப் பையை எடுத்துச் சென்று பாத்ரூமில் ஊற்றினான். திரும்பி வரும்போது நைட் டியூட்டி நர்ஸ், டேபிளின் மீது இருந்த காகிதத்தில் எதையோ எழுதிக்கொண்டிருந்தார். அவரிடம் அப்பாவின் ஆரோக்கியம் பற்றி ஏதாவது கேட்கலாம் என நினைத்து அருகில் சென்றான். தலையைத் தூக்கி அவனைப் பார்த்தார். ‘எல்லாமே முடிந்துபோய்விட்டது. அப்புறம் என்ன சொல்வது?’ என்பதுபோன்று இருந்தது அவருடைய பார்வை. அதற்கு மேல் சங்கரன் அங்கு நிற்கவில்லை.