கனடா கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பின் தைப்பொங்கல் விழா!

கனடாவில் இந்த வருடத் தமிழ் மரபுக் கொண்டாட்டங்கள் முடிவுக்கு வந்திருக்கின்றன. சென்ற ஞாயிற்றுக்கிழமை 28-1-2024 அன்று ‘கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பின்’ பொங்கல் விழாவும் மரபுத்திங்களும் மிகவும் சிறப்பாக ஒன்ராறியோ, எத்தோபிக்கோவில் கொண்டாடப்பட்டது. மங்கள விளக்கேற்றிக் கனடா தேசிய கீதம் தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு மொழிகள் கலந்து பாடப்பெற்றது. தொடர்ந்து தமிழ்வாழ்த்தும் அகவணக்கமும் இடம் பெற்றன.


மொன்றியால் மாநகரில் நடைபெற்ற ‘தமிழ் மரபுத் திங்கள்’ விழாவில் கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அவர்கள் கலந்து சிறப்பித்தார்!

கடந்த 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று மொன்றியால் மாநகரில் 40 அமைப்புக்கள் ஒன்றிணைந்து பிரமாண்டமான முறையில் நடத்திய ‘தமிழ் மரபுத் திங்கள்’ விழா காலை தொடக்கம் மாலை வரை சிறப்பாக நடைபெற்றது. மேற்படி விழாவில் எமது ஸ்காபுறோ தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி உட்பட தனது பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் சகிதம் கலந்து கொண்ட கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அவர்கள் தனது உரையில் அவரது அன்பையும் பொழிந்து கனடா வாழ் தமிழ் மக்கள் நிகழ்த்தும் சாதனைகளுக்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார்.


பொங்கல் விழாவில் பட்டிமன்ற நட்சத்திரப் பேச்சாளர் திரு. மோகனசுந்தரம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

உரும்பிராய் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – கனடா தங்களது 30வது ஆண்டு பொங்கல் விழாவை கடந்த 20-01-2024 சனிக்கிழமை அன்று ஸ்காபறோ மாநகரில் அமைந்துள்ள தமிழ் இசைக் கலாமன்ற அரங்கில் வெகு சிறப்பாகக்கொண்டாடியது. சிறப்புப் பேச்சாளராக பட்டிமன்ற
நட்சத்திரப் பேச்சாளர் திரு. மகனசுந்தரம்
கலந்து கொண்டு சிறப்பித்தார்.


சென்னை புத்தகக் கண்காட்சி – 2024

47-வது சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் வை.எம்.சி.ஏ மைதானத்தில் ஜனவரி 3 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு ஆரம்பமானது. இந்தக் கண்காட்சியை தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆரம்பித்து வைத்திருந்தார். விரும்பிய நூல்களை ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ளக்கூடிய வசதியை இந்தக் கண்காட்சி ஏற்படுத்தி இருந்தது.


அனைவருக்கும் (Happy New Year 2024) இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ஆங்கில புத்தாண்டு உலகில் உள்ள அனைத்து மக்களும் மகிழ்ச்சியாக வரவேற்கும் ஒரு இனிய நாளாகும். குறிப்பிட்ட மக்கள் மட்டும் இதனை வரவேற்பார்கள் என்று நாம் சொல்ல முடியாது. அனைத்து மக்களும் ஆவலாக அவர்களுடைய புது வருடத்தின் நாளை வரவேற்க தயாராக காத்திருப்பார்கள்.


உலகில் வேலைவாய்ப்பு தேடுவோரின் கனவு நாடாக முதல் இடத்தில் கனடா!

உலகில் வேலைவாய்ப்பு தேடுவோரின் கனவு நாடாக முதல் இடத்தில் கனடா
பிரித்தானிய நிறுவனமான Givetastic இன் சமீபத்திய ஆய்வின்படி, வேலை தேடும் இடங்களில் உலகளாவிய ரீதியில் கனடா முன்னணியில் இருக்கின்றது.

“வேலைகள்” மற்றும் “வேலை” போன்ற திறவுச் சொற்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் சராசரி மாதாந்த தேடல் அளவை பகுப்பாய்வு செய்வதன் மூலமும், தேவையான இடங்களில் மொழிபெயர்ப்பைப் பயன்படுத்துவதன் மூலமும், Givetastic ஒவ்வொரு நாட்டிற்கும் வெளிநாட்டில் வேலை செய்வதற்கான கனவு இடங்களைத் தீர்மானித்தது.


கனடாவில் பிரியங்கா, பிருத்திக்கா சகோதரிகளின் வீணை அரங்கப்பிரவேசம்.

சென்ற 23 ஆம் திகதி ரொறன்ரோவில் ‘செப்பேட்’ வீதியில் உள்ள சீன கலாச்சார மண்டபத்தில் பிரியங்கா, பிருத்திக்கா ஆகிய சகோதரிகளின் வீணை அரங்கப்பிரவேசம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீமதி. குகனேஸ்வரி சத்தியமூர்த்தி அவர்களின் மாணவிகளின் இந்த அரங்கேற்றத்திற்கு வைத்திய கலாநிதி சயந்தன் சாய்சர்மா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். கனடா தமிழர்தகவல் இதழின் பிரதம ஆசிரியர் திரு எஸ் திருச்செல்வம் மற்றும் எழுத்தாளர் குரு அரவிந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.


கனடாவில் பாவலர் பாலரவியின் கவிதை நூல்கள் வெளியீட்டு விழா!

இங்கிலாந்தில் இருந்து வருகை தந்திருந்த பாவலர் பாலரவியின் கவிதைத் தொகுப்புக்கள் 24-12-2023 ஆம் ஆண்டு ஸ்காபரோவில் உள்ள 110, ‘அயன்சைட் கிறிசென்ட்’ மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் ‘தெளிந்தபின் தெளிந்தவை,’ ‘எண்ணங்களின் வண்ணங்கள்,’ ‘வாழ்வாங்கு வாழ்ந்தோர்க்கும் வாழ்வோர்க்கும் வாழ்த்துக்கள்,’ ‘தேசமேயாகிய சுடர்கள்,’ ஆகிய நான்கு கவிதைத் தொகுப்புக்கள் வெளியிட்டு வைக்கப்பட்டன.


கனடா வரலாற்றில் தமிழர் படகுகள்!

சென்ற சனிக்கிழமை 16 ஆம் திகதி ஸ்காபரோவில் உள்ள ஸ்காபரே சிவிக் சென்றர் மண்டபத்தில் பண்டிதர் ச.வே. பஞ்சாட்சரம் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட ‘கனடா வரலாற்றில் தமிழர் படகுகள்’ என்ற நூல் சிறப்பாக வெளியிட்டு வைக்கப்பெற்றது. இந்த நூலில் புகைப்படங்களுடன் தமிழ் மொழியிலும், ஆங்கிலத்திலும் தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.


கனடா இலக்கியவெளி வெளியிட்ட ‘மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ்’

சென்ற ஞாயிற்றுக்கிழமை 03-12-2023 அன்று மாலை நான்கு மணியளவில் அகில் சாம்பசிவம் அவர்களைப் பிரதம ஆசிரியராகக் கொண்ட இலக்கியவெளி இதழ் குழுவினர் வெளியிட்ட ‘மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ்’ வெளியீட்டு விழா ரொறன்ரோவில் உள்ள தமிழ் இசைக் கலாமன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது. சிந்தனைப்பூக்கள் பத்மநாதன், எழுத்தாளர் குரு அரவிந்தன், கவிஞர் மீரா கனி விமலநாதன், தமிழக எழுத்தாளர் முனைவர் கரு முத்தய்யா, எழுத்தாளர் திரு. த. சிவபாலு ஆகியோர் மங்கள விளக்கேற்றி வைத்ததைத் தொடர்ந்து திரு.த. சிவபாலு அவர்களின் வரவேற்புரை இடம் பெற்றது.