சென்ற ஞாயிற்றுக்கிழமை 13-10-2024 அன்று கிராமத்து வதனம் தமிழ் பெண்கள் பண்பாட்டு மையத்தின் ஆசிரியர் குழுவினரால் வெளியிடப்படும் காலாண்டுச் சஞ்சிகையான வதனம் இதழின் ‘கனடாச் சிறப்பிதழ்’ ரொறன்ரோ 925 அல்பியன் வீதியில் உள்ள சமூகமையத்தில் வெளியிட்டு வைக்கப் பெற்றது.
‘பெண்கள், மற்றும் இளைய தலைமுறையினர் எழுதும் சமையற் குறிப்புகள், எமது பாரம்பரிய விளையாட்டுகள், உணவு வகைகள், பயணக்கட்டுரைகள், தாங்கள் பிறந்த மண் பற்றிய ஆக்கங்கள், கவிதைகள், சிறுகதைகள் மற்றும் தாயகம், கனடா பற்றிய செய்திகள் போன்றவை மிகவும் பயனுள்ளதாகவும், இங்குள்ள இளைய தலைமுறையினர் அவற்றை அறிந்து கொள்ளக் கூடியதாகவும் இருப்பதால், வதனம் இதழ் சிறந்ததொரு இலக்கியப் பத்திரிகையாகக் கனடாவில் வெளிவருவதைப் பாராட்டாமல் இருக்க முடியாது.










