Murugan1aகடந்த சனிக்கிழமை (09-10-2021) அன்று மேலைக்கரம்பொன் முருகமூர்த்தி கோவில் நிர்வாகத்தின் தலைவர் க.குகனேஸ்வரன் அவர்களால் கனடாவில் நடாத்தப்பட்ட கூட்டத்தில் கரம்பொன் மக்களுடன் மதிப்புக்குரிய சிவஸ்ரீ சோமாஸ்கந்த குருக்கள் அவர்கள் கலந்து கொண்டு முருகமூர்த்தி கோவில் பற்றிய பூர்வீக வரலாறு பற்றி தனது அனுபவங்களைத்; தெரிவித்ததோடு குகனேஸ்வரன் அவர்கள் எமது கிராமத்திலுள்ள ஆலயங்களுக்குச் செய்யும் சமயப்பணிகளை பாராட்டிக் கௌரவித்தார். அத்துடன் அன்று மேலைக்கரம்பொன் முருகமூர்த்தி கோவில் பரிபாலனசபை கனடாக் கிளையின் அஙகத்துவர்களாக தலைவர் த.பேரின்பநாதன் அவர்களும், செயலாளராக திருமதி ப.சாரதாம்பாள் அவர்களும், பொருளாளராக கு.மகேந்திரமோகன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள். 

Murugan2மேலைக் கரம்பொன் ஸ்ரீ முருகமூர்த்தி கோவில்-எதிர்காலச் சிந்தனைகளும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும்

புலம்பெயர் தேசங்களில் வாழும் கரம்பொன் உறவுகளுக்கு முருகமூர்த்தி கோவில் நிர்வாகம் நன்றிகளையும் ஓர் சில வேண்டுகோள்களையும் முன்வைக்க விரும்புகின்றது. 2021ம் ஆண்டு ஆடி மாத நிகழ்வுகளில் சம்ரோட்சன கும்பாபிஷேகமும் அதனைத் தொடர்ந்து 31 ஆண்டுகளின் பின் நடைபெற்று முடிந்த மஹோற்சவமும் எங்களுடைய நிர்வாகம் மூலம் பல தளபாட கஷ்டங்கள் மற்றும் பொருள் கஷ்டங்கள் மத்தியில் இதனை இனிதே நிறைவு செய்ததன் மூலம் ஒரு மிகப் பெரிய மைல்கல் தூரத்தை நாங்கள் கடந்து முடித்திருக்கிறோம்.

Murugan3அத்துடன் மேலைக்கரம்பொனைச் சேர்ந்த லண்டனில் வாழ்கின்ற திருமதி சத்தியநாதன் திருமகள் அவர்களால் எழுந்தருளி விநாயகர் கோவிலுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டு அதை நாங்கள் பிரதிஷ்டை செய்துள்ளோம்.  விநாயகரை அன்பளிப்புச் செய்த  திருமதி சத்தியநாதன் திருமகள் அவர்களுகக்கு நிர்வாகம் சார்பாக பல கோடி நன்மைகள் கிடைக்க முருகப்பெருமானை பிரார்த்திக்கிறோம். 
மஹோற்சவம் இனிதே நடைபெற்று முடிந்த பின் 1941ம் ஆண்டு ஆவணி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் எமது முருகன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இத்தினத்தை (மணவாளக்கோலம்) கோவிலின் பரிபாலகர் பரம்பரையைச் சேர்ந்த திரு பாலகிருஷ்ணன் (எந்திரி) அவர்களின் மகள் திருமதி பவானி( தற்போது பிரித்தானியாவை வதிவிடமாக கொண்டிருக்கிறார்) அவர்களால் நடாத்தப்பட்டது.
இந்த வருடம் கடைசிப் பகுதியில் வரும்  கந்தசஷ்டி விழாவை (6 நாட்கள்) செய்வதற்கு நிMurugan-2021-5ர்வாகம் உத்தேசித்துள்ளது. அதற்கு அவசியமான சில தளபாடங்கள் தேவைப்படுகின்றன.
சூரன் வாகனம்
மயில் வாகனம்
அடுத்த வருட மஹோற்சவத்திற்கு தேர்
கேணி புணரமைத்தல்
கோவிலைச் சுற்றி வேலி அமைத்தல்
வாசிகசாலையை புணரமைத்து ஆசிரியர்களை நியமித்து சிறுவர் பாடசாலையை திறம்பட நடாத்துதல்
இவை அனைத்திற்கும் பகுதி பகுதியாக நிதி தேவைப்படுகின்றறது. வெளிநாடுகளில் வாழும் மேலைக்கரம்பொனைச் சேர்ந்த பூர்வீக குடும்பங்கள் அல்லது ' மேலைக் கரம்பொன் முருகமூர்த்தி சபை' ஒன்றை உருவாக்கி அதனூடாக தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க கோவில் நிர்வாகம் எதிர்பார்க்கிறது. அத்துடன் கோவிலில் சில பூஜைகள் வெற்றிடங்களாக உள்ளன.Murugan-2021-2Murugan-2021-1
நித்திய பூஜை
சஷ்டி பூஜை
விநாயக சதுர்த்தி
கந்தசஷ்டி பூஜை (6 நாட்கள்)
பௌர்ணமி பூஜை
நவராத்திரி பூஜை (10 நாட்கள்)
திருவெம்பாவை பூஜை
பிள்ளையார் கதை பூஜை
இவ் அனைத்து பூஜைகளும் வெற்றிடங்களாக உள்ளன. மேலைக்கரம்பொன் மக்களாகிய நீங்கள் குடும்பங்களாகவோ அல்லது தனியாகவோ இப் பூஜைகளை எடுத்து நடாத்த வேண்டும் என்றும் நிர்வாகம் வேண்டி நிற்கின்றது.
குறிப்பு:  மேலைக் கரம்பொன் முருகமூர்த்தி நிர்வாகம் ஓவ்வொரு நாடுகளில் வாழும்  மேலைக் கரம்பொன் மக்கள் ஊடாக பரிபாலன சபையை உருவாக்கி அதனூடாக கோவிலின் அபிவிருத்திக்கும் சுற்றுச்சூழல் அபிவிருத்திpக்கும் மனமுவந்து நிதி பங்களிப்புக்களைச் செய்து கோவிலை நன்நிலைக்கு கொண்டு வருவதற்கு பெரும் உதவியையும் வழங்கி ஒத்தாசையும் வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாகம்
மேலைக்கரம்பொன் முருகமூர்த்தி கோவில்
தலைவர்: க.குகனேஸ்வரன்
செயலாளர்: ச.இராஜேஸ்வரன்
பொருளாளர்: ச.ஸ்ரீரங்கநாதன்

Murugan Flyer