மார்க்கம் ஸ்ரீசத்ய சாயி நிலையத்தினர் கொண்டாடிய ஸ்ரீசத்ய சாயி பாபாவின் 90வது ஆண்டு ஜெயந்தி தினம்

Sai 90-1aநேற்றைய தினம் மாலை 5.30 மணியளவில் மார்க்கத்திலுள்ள Armadale Community Centre இல் பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் 90வது ஆண்டு ஜெயந்தி தினம் மார்க்கம் ஸ்ரீ சத்ய சாயி நிலையத்தினரால் பக்தி பூர்வமாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்வில் வயலின் இசை, ஆன்மீகவுரை, பஜனைகளுடன் ஊஞ்சல் மற்றும் மங்கள ஆரத்தியும் இடம்பெற்றன. இச் சாயி சேவா நிலையம் கடந்த 16 வருடங்களாக மாதம் இரு ஞாயிற்றுக்கிழமைகளில் இளம் சிறார்களுக்காக சமய வகுப்புகளையும், முதியோர்களுக்காக பஜனைகளையும் தொடர்ந்து நடாத்தி சேவையாகச் செய்து வருகிறார்கள். அத்துடன் பகவான் சாயிபாபாவின் ஜெயந்தி  தினத்தையும் சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள்.


பங்காரு அடிகளாரின் 75வது பவள விழா சிறப்பாக நடைபெற்றது

Bankaru adikalar 75th-1ஸ்காபுறோ நகரில் இயங்கிவரும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு குரு மன்றத்தினரால் ஸ்காபுறோ ஸ்ரீ ஐயப்பன் ஆலய மண்டபத்தில்  நடைபெற்றது. அன்று காலை 7 மணிமுதல் பாத பூஜையுடன் ஆரம்பமாகி மேளக்கச்சேரியுடன் வீதி உலா நடைபெற்று பங்காரு அடிகளாரின் திருவுருவப் படம் ஸ்ரீ ஐயப்பன் ஆலய மண்டபத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்றன.


சத்ய சாயி பாபாவின் 89வது ஜெயந்தி தினம்

saibabaமார்க்கம் ஸ்ரீ சத்ய சாயி நிலையத்தினர் கொண்டாடிய சாயி பாபாவின் 89வது ஜெயந்தி  தினம்
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை 23-11-2014 மாலை 5.30 மணியளவில் மார்க்கத்திலுள்ள Armadale Community Centre இல் பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் 89வது ஜெயந்தி தினம் மார்க்கம் ஸ்ரீ சத்ய சாயி நிலையத்தினரால் பக்தி பூர்வமாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்வில் புல்லாங்குழலிசை,நடனம், ஆன்மீகவுரை, பஜனைகளுடன் ஊஞ்சல் மற்றும் மங்கள ஆரத்தியும் இடம்பெற்றன. அத்துடன் பக்தர்களுக்கு பிரசாதத்துடன் உணவும் வழங்கப்பட்டது.


புனித யாத்திரை – பரிசுத்தக் கதவு திறப்பு

Holy Door25 வருடங்களுக்கு ஒருமுறை திறக்கும் பரிசுத்தக் கதவு

கடந்த சனிக்கிழமை 15-11-2014 காலை 9.00 மணியளவில் ஸ்காபுறோவில் இருந்து சொகுசு பஸ்வண்டியில் திரு. மகேந்திரநாதன் தலைமையில் உறவினர்களும் நண்பர்களுமாக 50 பயணிகளுடன் எங்கள் புனித யாத்திரை ஆரம்பமாகியது. முதலில் மொன்றியாலில் உள்ள (St. Joseph Church) புனித யோசப் தேவாலயத்திற்குச் சென்றோம். அங்கு வழிபாட்டை முடித்துக் கொண்டு அன்றிரவே கியூபெக் நகரை நோக்கி எங்கள் பயணம் தொடங்கி இரவு 9.00 மணியளவில் கியூபெக் நகரை சென்றடைந்தோம்.


கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலயத்தின் – நெய் நிரப்பும் நிகழ்வு

iyapaaகனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலயத்தின் – நெய் நிரப்பும் நிகழ்வு

இன்று டிசம்பர் மாதம் 26ம் நாள் இல.635 மிடில்பீல்ட் வீதியில் அமைந்துள்ள கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலயத்தில் மிக பக்தி பூர்வமாக நடை பெற்ற நெய் நிரப்பும் நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டார்கள். அடியார்கள் பக்தியுடன் சாமிமார்களுக்கு சிறியவர் பெரியவர்களென நெய் நிரப்பி வணங்கினார்கள்.


தோஷம் போக்கும் விரத வழிபாடுகள்

தோஷம் போக்கும் விரத வழிபாடுகள்

• பகைவரைக் கண்டு அஞ்சாத உள்ளத்தை தருபவர் செவ்வாய். செவ்வாய் தோஷம் என்பதைக் கேட்டாலே பெண்ணைப் பெற்றவர்கள் பதறுவார்கள். செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து அருகில் உள்ள கோவில்களில் தீபமேற்றுவது செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைக்கும்.