kanex“அதிபர் தோற்றத்தினாலும், உள்ளத்தினாலும், செயலாலும் மிக உயர்ந்தவர். அவரை நான் 1958ம் ஆண்டு முதன் முதலாக சென்னை கிறிஸ்த்தவ கல்லூhயில் சந்தித்தேன். அதன் பின்னர் அடிக்கடி சந்தித்தேன். கனடாவு க்கு வந்த பின்னர் எமது நட்பு இறுக்கமடைந்தது. “பணியுமாம் பெருமை சிறுமை என்றும்” என்பதற் கொப்ப அவர் மிகப் பணிவுடன் வாழ்ந்த பெருந்தகை.

1976ம் ஆண்டு அவர் புத்தூர் சோமாஸ்கந்தாவில் அதிபராகப் பணியாற்றிய anjaliபோது நான் கோப்பாய் கிறிஸ்த்தவ கல்லூhயில் அதிபராகப் பணியாற்றினேன். நாற்பதாண்டு காலம் நீரழிவு நோயினாலும், பதிநான்கு ஆண்டு காலம் இருதய நோயினாலும் பாதிக்கப் பட்டு ஒன்ராறியோ மாகாணத்தின் வைத்திய சேவையை முழுமையாகப் பயன்படுத்தியவர்.“இவர் யமனை பச்சடி போட்டவர்” என திரு.கந்தவனம் ஆசிரியர் எழுதினார். அதற்கொப்ப இவர் வாய்க்கு ருசியான உணவுகளை உண்டு நாற்பது வருட காலம் யமனை வென்றவர் அதுமாத்தி ரமன்றி பல்வேறு விதமான நோய்கள் பற்றியும், நவீன சிகிச்சை முறைகள் பற்றியும் ஆராய்ந்து பயனு ள்ள நூலை எழுதினார். தாய் நாடு பத்திரிகையிலும் ஏனைய பத்திரிகைகளிலும் பல்வேறு கட்டுரைகளை எழுதி வந்தார். பலர் வயது போகப் போக தமது ஞாபக சக்தியை இழப்பார்கள். ஆனால் இவருக்கு வயது போகப் போக ஞாபக சக்தி அதிகரித்தது. இறுதியில் தனது பெயருக்கேற்ப சபாபதியின் பாதாரவிந்தங்களை பற்றிக் கொண்டார். வீடு பாத்திரிகை அவரைக் கௌரவிக்கும் வகையில் சிறப்பிதழ் வெளியிட்டமை பாராட்டுக்குரியதாகும்”.
sinnaiahகற்றோராலும்,மற்றோராலும் நன்கு மதிக்கப்பட்டு போற்றப்படுகின்ற பெருமதிப்பிற்குரிய சான்றோனும், கண்ணியமான அதிபருமான அமரர் கனகசபாபதி அவர்கட்கு ஸ்காபுறோ நகரசபை மண்டபத்தில் கடந்த வாரம் 14ம் திகதி நடாத்தப்பட்ட அஞ்சலிக் கூட்டத்துக்கு தலைமை வகித்து உரையாற்றிய முன்னாள் கோப்பாய் கிறீஸ்தவ கல்லூரியின் முதலாவது சைவ சமய அதிபரும், கனடா தமிழ் எழுத்தாளர் இணையப் பொருளாளருமான திரு.சிவா சின்னையா இவ்வாறு கூறினார். முதற்கண் கவிஞர் கந்தவனம் அவர்கள் மறைந்த அதிபர் கனகசபாபதியின் திருவுருவப் படத்துக்கு மலர் மலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
திரு.இராஜரட்னம் அவர்கள் உரையாற்றிய போது “அமரர் கனகசபாபதி அவர்கள் தனி அதிபராக மாத்திரமன்றி சமூகப் பணியாளராகவும் பணியாற்றியவர். நான் மலேசியாவுக்கு சென்றிருந்hத போது அவருடன் தொலை பேசியில் உரையாடினேன். துர்அதிஷ்டவசமாக நான் திரும்பி வருமுன் அவர் இறைபதம் எய்திவிட்டார். அதனால் இருள் சூழ்ந்த மனநிலையோடு கனடா திரும்பினேன். அவரது மறைவு என் இதயத்தில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டது. எனது பணிக்கு 1990ம் ஆண்டு முதல் அவர் ஆலோசகராக இருந்து வந்தார். லட்சியத்தை முன்னிலைப் படுத்தி வாழ்ந்த அவரை மக்கள் முன்னிலைப் படுத்தினார்கள்” என்றார். 

திருமதி விமலா பாலசுந்தரம் அவர்கள் உரையாற்றிய போது “அதிபர் மீது mrsbalaஎனக்கு பயம் கலந்த மதிப்பு இருந்து வந்தது. விலங்கியல் பட்டதாரியபான அவர் கலைத் துறையிலும், இலக்கியத் துறையிலும் சிறப்பு மிக்கவராகத் திகழ்ந்தார்;. .புலம் பெயர்ந்த நாட்டில் தமிழ் மக்களது எதிர்காலம் சிறக்க வேண்டும் என்ற அவாவினைக் கொண்டிருந்தார். கல்வித் துறையில் பணியாற்றிய எனக்கு அவர் முன்னோடி யாக திகழ்ந்தார். 2013ம் ஆண்டு நான் எழுதிய “தமிழ் பயில்வோம்” என்ற நூலுக்கு முகவுரை எழுது மாறு அவரைக் கேட்டேன். அப்போது அவர் சிறப்பான ஆலோசனைகளை வழங்கினார். இங்குள்ள பாரம்பரிய கல்வித் திட்டத்தில் முதலாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான தமிழ் பாடத்திட்டத் தினையும் அடக்குவதற்கு அவர் காரணகர்த்தாவாக இருந்தார். அதற்கான தமிழ் பாட நூல்களை எழுதி வெளியிட்ட பெருமையும் அவரைச் சாரும். தமிழ் பெற்றோருக்கு இந்நாட்டு கல்வி முறை பற்றி கருத்தர ங்குகள் மூலம் விளக்கினார். உயிரினங்களின் பரிணாம வளற்சியில் மாத்திரமல்ல அவருக்கு சங்கீத ஞானம், சினிமா துறை அனுபவம் ஆகியனவும் இருந்தன. இறுதிக் காலத்தில் அவர் தன்னை சமூகப் பணியில் முற்று முழுதாக ஈடுபடுத்திக் கொண்டார். audian-kana2அவர் எனது கணவரான திரு.பாலசுந்தரம், திரு. அலெக்சாந்தர், கவிஞர் கந்தவனம் ஆகியோருடன் இணைந்து செயற்பட்டு வந்தார். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்றாகும்” என்றார்.
டாக்டர் லம்போதரன் அவர்கள் உரையாற்றிய போது “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” என்ற குறளுக்கு இலக்கணமாக வாழ்ந்தவர் அதிபர் கனகசபாபதி அவர்கள் சிறந்த ஆசானாக, அதிபராக திகழ்ந்த அவர் எனக்கு தந்தையாகவும், சிறந்த ஆசானாகவும், ஆற்றுப் படுத்துபவருமாக இருந்தார். தனது சாதனைகள் மூலம் எம்மனைவரினதும் இதயங்களில் இடம் பிடி த்துக் கொண்டவர். எதையுமே அவர் மிகபை; படுத்தியோ, குறைத்தோ மதிப்பிட்டது கிடையாது. எல்லா வகையையும் விளக்கவல்ல விளக்கே உண்மையான விளக்கு. செல்வர் சிவபுரத்தினுள் என்பதற்கொப்ப திரு.கனகசபாபதி அவர்களும் சோதி மயமான கனக சபையினுள் சென்று விட்டார்” எனக் கூறினார்.
mohan-paulடாக்டர் போள் ஜோசெப் அவர்கள் பார்வையாளர்களது நெஞ்சத்தினை உருக்கும் வகையில் அதிபர் கனகசபாபதியின் பெருமையை கவிதை மூலம் வடித்தார். அதைக்கேட்டு அனைவரும் கரகோஷம் செய்தனர்.
மற்றும் வரசித்தி விநாயகராலய குருக்கள் சிவஸ்ரீ பஞ்சாட்சரக் குருக்கள், பேராசிரியர் சந்திரகாந்தன், திரு.த.சிவபாலு, திருமதி விமலா மகேந்திரன், திரு.ஞானம் லம்பேட், பாரதி கலா மன்ற அதிபர் திரு. மதிவாசன், மட்டக்களப்பைச் சார்ந்த திரு.இ.தங்கராசா ஆகியோரும் உரையாற்றினார்கள். kana-child
அதிபர் அவர்களின் சிரேஷ்ட புதவ்வரும், புதல்வியர்கள் இருவரும் இந்த அஞ்சலிக் சுட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். இறுதியில் புதல்வியர் இருவரும் இவ்வஞ்சலிக் கூட்டத்தை ஏற்பாடு செய்தமைக்காக தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
(வீரகேசரி மூர்த்தி)