நேற்றைய தினம் மாலை 5.30 மணியளவில் மார்க்கத்திலுள்ள Armadale Community Centre இல் பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் 90வது ஆண்டு ஜெயந்தி தினம் மார்க்கம் ஸ்ரீ சத்ய சாயி நிலையத்தினரால் பக்தி பூர்வமாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்வில் வயலின் இசை, ஆன்மீகவுரை, பஜனைகளுடன் ஊஞ்சல் மற்றும் மங்கள ஆரத்தியும் இடம்பெற்றன. இச் சாயி சேவா நிலையம் கடந்த 16 வருடங்களாக மாதம் இரு ஞாயிற்றுக்கிழமைகளில் இளம் சிறார்களுக்காக சமய வகுப்புகளையும், முதியோர்களுக்காக பஜனைகளையும் தொடர்ந்து நடாத்தி சேவையாகச் செய்து வருகிறார்கள். அத்துடன் பகவான் சாயிபாபாவின் ஜெயந்தி தினத்தையும் சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த சேவையினை தென்கரம்பனைச் சேர்ந்த ஜெகமோகன் சாந்தினி தம்பதிகளுடன் வரதராசன், ஜெயமுரளி இன்னும் பல நண்பர்களும் சேர்ந்து நடாத்தி வருகிறார்கள். ஒவ்வொரு வருடத்திலும் வருடப்பிறப்பு, நத்தார் பண்டிகை, மகாசிவராத்திரி இன்னும் விசேட தினங்களில் சமய கலை நிகழ்வுகளுடன் பஜனைகளும் நடைபெற்று வருகிறது.
இறுதியாக இந்நிகழ்வு சிறப்புற நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும், குறிப்பாக கடந்த சில வருடங்களாக இந்நிகழ்வை சேவையாகக் கருதி நிகழ்வின் புகைப்படங்களையும், மற்றும் நிகழ்வினை நேரடியாக ஒளிபரப்புச் செய்யும் “அனலை எக்ஸ்பிறஸ்” இணைய ஊடகத்திற்கும் நன்றியுரையில் நன்றி கூறப்பட்டது.
நன்றி: “அனலை எக்ஸ்பிறஸ்”
நிகழ்வுகளின் ஒளிப்படங்கள் சிலவற்றைக் கீழே காண்கிறீர்கள்.