ஓடுகின்ற ஆற்றினிலே
        ஓடம் போகுது
        ஒரு மனிதன் ஓட்டுகின்றான் 
        ஓட யந்திரம்
        உல்லாசமாய்ப் போகிறார்கள்
        ஓடத்தினுள்ளே
        ஒன்று இரண்டு
        மூன்று நான்கு
        ஐந்து ஆறு பேர்

        எல்லாமாய்ச் சேர்த்து விட்டால்
        ஏழுபேர்கள் தாம்
        எங்கோ சேர்ந்து போகிறார்கள்
        ஓடத்தில் ஏறி

 

        ஏலேலோ ஏலே ஏலோ
        ஏலேலோ ஏலே ஏலோ
        ஓடுகின்ற ஆற்றினிலே
        ஓடம் போகுது
        உல்லாசமாய்ப் போவோமே
        ஓடம் தன்னிலே (ஏலேலோ)